என் மலர்
நீங்கள் தேடியது "இடி மின்னலுடன் மழை"
- மரம் சாய்ந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் நேற்று மாலை 6 மணி முதல் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இரவு 9.30 மணி அளவில் மழை பெய்த போது, கீழ்பென்னாத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள சாலை ஓரத்தில் இருந்த புளியமரம் விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்கள், லாரிகள், கார்கள் என அனைத்தும் கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலை வழியாக செல்ல போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
மரம் சாலையில் விழுந்ததை அடுத்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சாலை பணியாளர்கள் உடனடியாக விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை சாலையின் ஓரமாக அகற்றினார்கள். இதனை அடுத்து இரவு 11:30 மணி அளவில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு பஸ்கள் சீராக சென்றது.
மழையின் காரணமாக இரவு 9.30 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர்கள்.






