என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ரெயில்வே கேட்டில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • கடந்த 2018-ம் ஆண்டு ரூ.55 கோடிசெலவில் மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர்,காட்டூர் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இதனை அரியன்வாயல் காட்டூர், தத்தைமஞ்சி, வாயலூர், திருவல்லவாயில் ஊரணம்பேடு, பழவேற்காடு, உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மருத்துவம், கல்வி, தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட்டில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

    கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கம் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அதிகம் செல்வதால் ரெயில் வரும் நேரங்களில் மீஞ்சூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் ரெயில்வே கேட்டில் இருந்து அரியன் வாயில் வரையிலும் மற்றும் திருவெற்றியூர் சாலை வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ரூ.55 கோடிசெலவில் மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி பாதி முடிந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இதற்கான இடம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரெயில்வே பணி முடங்கி இருப்பதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 6 ஆண்டாக முடங்கி உள்ள மீஞ்சூர் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மீஞ்சூர் காட்டூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    • தினமும் இரவு லட்சுமி அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக தூங்குவது வழக்கம்.
    • வீட்டில் உள்ள அறையில் லட்சுமி மர்மமாக இறந்து கிடந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பண்ணூர் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது85). இவர் தனது மகன்கள் பங்காரு, முருகன் ஆகியோருடன் வசித்து வந்தார். தினமும் இரவு அவர் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் லட்சுமி மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மகனின் நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களாக லட்சுமியின் வீட்டில் இரவு தங்கி இருந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்த மப்பேடு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • கம்பெனியில் உள்ள கொதிகலன் அருகே ராஜூ ராம் பணியில் இருந்தார்.
    • பணி முடிந்ததும் அவர் கீழே இறங்கி வந்தபோது திடீரென கால் தவறி அருகில் இருந்த கொதி கலனிற்குள் விழுந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் தனியார் எண்ணெய் நிறுவனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூ ராம் (வயது20) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். அவர் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கம்பெனியில் உள்ள கொதிகலன் அருகே ராஜூ ராம் பணியில் இருந்தார். பணி முடிந்ததும் அவர் கீழே இறங்கி வந்தபோது திடீரென கால் தவறி அருகில் இருந்த கொதி கலனிற்குள் விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் ராஜூ ராமை மீட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜூ ராம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆற்று மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
    • போலீசார் மனோகரனை கைது செய்து திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக பெரியபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையறிந்து நேற்று முன்தினம் இரவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது ஆற்று மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில், மாம்பாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரைச்சேர்ந்த மனோகரன் (வயது 48) என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் மனோகரனை கைது செய்து திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    • தமிழ் இலக்கிய ஒன்றிய தலைவர் பாஸ்கரன் ஏற்பாட்டில் கொடூர் கிருஷ்ணாபுரத்தில் கட்சி கொடியேற்றி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
    • பொன்னேரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கிளைகளில் கொடி கம்பம் அமைத்து கட்சி கொடியேற்றுமாறு மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்ததை அடுத்து மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் தமிழ் இலக்கிய ஒன்றிய தலைவர் பாஸ்கரன் ஏற்பாட்டில் கொடூர் கிருஷ்ணாபுரத்தில் கட்சி கொடியேற்றி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

    இதில்ஆன்மீகப் பிரிவு மாநில செயலாளர் குமார், பட்டியல் அணி மாநிலசெயலாளர் அன்பாலயா சிவகுமார், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா பட்டியல் அணிமாவட்ட தலைவர் வேலவன், மாவட்டத் துணைத் தலைவர் பரமானந்தம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரி மாவட்ட செயலாளர் கோட்டி, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு, பொன்னேரி நகரத் தலைவர் சிவக்குமார், மாவட்ட தமிழ் இலக்கிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், பட்டியல் அணி பொதுச் செயலாளர் இளங்கோவன், நகர பொதுச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் பாலாஜி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • திரு நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டு சார்பில் கிராம சபை கூட்டம் கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் தலைமையில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் மாணிக்கம் நகர், ஜீவரத்தின மாள் நகர், ஜீவன் நகர், திரு நகர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விரிவுபடுத்தி இருமார்க்கத்திலும் செல்லும் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.
    • பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதால் 17 அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் பொது நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை அம்பத்தூர், ஓ.டி.பஸ்நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அம்பத்தூரில் கடந்த 20 ஆண்டுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டு உள்ள பாடி-திருநின்றவூர் சாலை விரிவாக்க பணியை விரைவுபடுத்த வேண்டும். கள்ளிக்குப்பம்-மேனாம்பேடு சர்வீஸ் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்.

    அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விரிவுபடுத்தி இருமார்க்கத்திலும் செல்லும் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும். பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதால் 17 அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அம்பத்தூர் பஸ்நிலையத்தை மேம்படுத்தவேண்டும். அம்பத்தூர் முழுவதும் புதைவட மின்கம்பி அமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். மேலும், கோரிக்கைகள் குறித்து பேசினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • நிர்வாகிகள் எஸ்.சக்கரவர்த்தி, பி.சாத்ராக், ஏ.பரமசிவம், ஆர்.ரஜினி, பி.ராஜ்குமார் ஆகியோர் வர வேற்றனர்.
    • நிர்வாகிகள் எஸ்.சக்கரவர்த்தி, பி.சாத்ராக், ஏ.பரமசிவம், ஆர்.ரஜினி, பி.ராஜ்குமார் ஆகியோர் வர வேற்றனர்.

    பூந்தமல்லி:

    புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பழஞ்சூர் பி.வின்சென்ட் - செம்பரம்பாக்கம் ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட் தம்பதியரின் மகன் பி.வி.ஜான்சனுக்கும், எம். பாஸ்கர் - பி.சுசீலா தம்பதியரின் மகள் பி.நிவேதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விழாவில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., அவரது மனைவி யமுனா ஜெகன் மூர்த்தி, குருசேகர தலைவர் ஜான் மனோகரன், அருட் தந்தை ஜான் லூயிஸ் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நிர்வாகிகள் எஸ்.சக்கரவர்த்தி, பி.சாத்ராக், ஏ.பரமசிவம், ஆர்.ரஜினி, பி.ராஜ்குமார் ஆகியோர் வர வேற்றனர். ஜே.டேனியேல், ஆர்.பாளையம், வி.தனபால், பி.ரவி, ஏ.சிம்சோன், பி.கண்ணதாசன், எல்.தவப் புதல்வன், எஸ்.ஆனந்த்பாபு, கே.ஏ.கன்னியப்பன், எம்.பிரேம்குமார், சி.ராஜ்குமார், எம்.சிவா, இ.அமிர்தராஜ், ஏ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. எம்.அமிர்த ராஜ், முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, பூந்தமல்லி எம்.எல்.ஏ.ஆ. கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.பழனி, இ.வி.பி.சந்தோஷா ரெட்டி, தொழிலதிபர் பத்ரிநாராயணன், ஏ.டி.எஸ்.பி. முத்துவேல் பாண்டி, ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பா.சா.கமலேஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.ஜி.டி.கவுதமன், ஜாவித் அகமது, நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் டி.ரூசேந்திர குமார், மாநில நிர்வாகிகள் எம்.முகிலன், எம்.மாறன், ஐ.ஏழுமலை, பா.காமராஜ், பி.வீரமணி, என்.செல்வம், ஆர்.சரவணன், கூடப்பாக்கம் இ.குட்டி, டி.கே.சீனிவாசன், பரணிமாரி, வழக்கறிஞர் கே.எம்.ஸ்ரீதர், எஸ்.ஏகாம் பரம், டி.சைமன்பாபு, பி.தாமஸ் பர்ணாபாஸ், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், டி.கே.சி.வேணுகோபால், ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், எட்மன், என்.முரளி, வியாசை பா.சிகா, ஜி.பெரமையன், பிரீஷ் பன்னீர், எஸ்.பி.சி.தனசேகர், நயப்பாக்கம் டி.மோகன், சுருளி வீரமணி, ஏ.கே. சிவராமன், ராக்கெட் ரமேஷ், வி.மேகநாதன், என்.பிரபாகரன், பா.பால் எசேக்கியேல், பா.சாத்ராக், ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம், துணை தலைவர் கன்னியம்மாள் ருத்ரகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். முடிவில் வழக்கறிஞர் பழஞ்சூர் பி.வி.லாரன்ஸ் நன்றி கூறினார்.

    • செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி என்எஸ்எஸ் தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டி சிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், எலைட் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள், கிரீன்நீடா அமைப்பினர்கள் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சேகரித்தனர். நிகழ்ச்சியில் எலைட் பள்ளி தாளாளர் ஜெபாஸ்டின்

    பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணன், முனிஸ்வரன், தங்கமுத்து, ஜெபராஜ்டேவிட், சீனிவாசன், ராஜேஷ், மோகன்ராஜ், தாஸ், சதீஷ், ரமேஷ், சங்கர பாண்டியன், வேல்முருகன், சண்முகசுந்தரம், சுடலை மணி, பாக்கியராஜ், ஆனந்த லிங்கம், சஞ்சீவராஜன், மகளிர் அணி கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி, அனிதா, ராஜேஸ்வரி கிரீன்நீடா அமைப்பின் சந்தான கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
    • இருசக்கர வாகனத்தில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியை சுற்றி காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், சிமெண்ட் ஆலைகள் பெட்ரோலிய நிறுவனம், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, மற்றும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன.

    தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் சாலை மற்றும் தச்சூர்-பொன்னேரி, மீஞ்சூர் சாலையை பயன்படுத்தி வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மீஞ்சூர்- திருவொற்றியூர் நெடுஞ்சாலை மிகவும் சேதமைடந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் 1 கி.மி தூரம் சாலை முழுவதும் பெயர்ந்து மரண குழிகளாக காட்சி அளிக்கின்றன. அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இருசக்கர வாகனத்தில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது.

    சாலை முழுவதும் போக்கு வரத்துக்கு லாயக்கற்று பல்லாங்கு குழிகளாக காட்சி அளிக்கின்றன. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    குண்டும் குழியுமான சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

    மீஞ்சூர்-திருவொற்றியுர் சாலை போக்குவரத்திற்கு தகுதி இல்லாத வகையில் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் தினமும் மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் சாலை, மீஞ்சூர்-மணலி சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், மழை பெய்யும் போது வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. சாலை பள்ளத்தை தற்காலிகமாக சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
    • கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார்.

    செங்குன்றம்:

    புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் ஒரு அறையில் இருந்த வெளிநாட்டு கைதிகள் 4 பேர் செல்போன் பயன்படுத்தி வந்தது அதிகாரிகள் சோதனையில் தெரிந்தது.

    இதையடுத்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு நைஜீரியா நாட்டை சேர்ந்த போதைப் பொருள் வழக்கில் தண்டனை பெற்று வரும் இஜிபா அகஸ்டின் சிபிக்கி (41) என்பவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

    அப்போது அவ்வழியாக சிறை துணை ஜெயிலர் சாந்தகுமார் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவ ரிடம் கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரை தாக்கி சாப்பாட்டு தட்டை வீசினார். இதில் துணை ஜெயிலர் சாந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் நைஜீரியா நாட்டு கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    புழல் சிறையில் துணை ஜெயிலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பலத்த மழையாக பெய்தது.
    • மின்சாரம் பாய்ந்ததில் நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பலத்த மழையாக பெய்தது. இந்த நிலையில் பலத்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விபரம் வருமாறு:-

    திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூர் கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா(வயது52). நேற்று இரவு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் நிர்மலா வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் இது யாருக்கும் தெரியவில்லை. இன்று அதிகாலை எழுந்த நிர்மலா வீட்டின் முன்பு மின்கம்பி அறுந்து கிடப்பதை கண்டு அதனை எடுக்க முயன்றார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும் மப்பேடு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பலியான நிர்மலாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பழுதான மின்கம்பிகள் மாற்றப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த சாதாரண மழைக்கே மின்கம்பி அறுந்து பெண்ணின் உயிரை காவு வாங்கிவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணி முதல் விடிய,விடிய பலத்த மழை கொட்டியது. காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை, ஒலி முகமது பேட்டை, மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், அய்யம்பேட்டை, முத்தியால்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் பகுதியில் இருந்த பழமையான அரச மரம் ஒன்று மழையின் காரணமாக அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது சரிந்தது. இதில் வீடு பலத்த சேதம அடைந்தது. அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    ×