என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    புழல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சில் 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் மொத்தமாக குடிநீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க ஒரு குடிநீர் பாட்டிலை எடுத்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

    • மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன.
    • இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

    சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரெயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    அதுபோல் 52 வேகன்களில் டீசல் நிரப்பிய சரக்கு ரெயில் ஒன்று நேற்று அதிகாலை மணலியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் வந்தபோது ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 18 டேங்கர்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வானுயரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது.

    இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

    தீ விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, மளமளவென பற்றி எரிந்தது. யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக போராடி தீயை அணைத்தனர். அதாவது காலை 5.30 மணிக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ, மதியம் 2 மணி அளவில் அணைக்கப்பட்டது.

    இந்த பகுதியில் மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில், சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

    சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் மெதுவாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரெயில் பாதையிலேயே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.

    இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

    சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    விபத்துக்குள்ளான சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.

    தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது.
    • ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.

    இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

    சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நேரில் ஆய்வு செய்தார்.

    • தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
    • சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் சரக்கு ரெயிலின் 52 பெட்டிகளில் 10 டேங்கர்கள் தீப்பற்றி எரிந்து சேதமானது. காலை 5 மணிக்கு தீப்பற்றிய நிலையில் தற்போது வரை தீப்பற்றி எரிந்து வருகிறது. சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீயில் 70 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.

    தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.

    இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரெயிலின் டேங்கர்களை பிரித்தெடுக்கும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. தீ பரவுவதை தடுக்கும் வகையில் சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.

    சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ அருகே உள்ள நிலங்களில் பரவாமல் தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
    • திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது. ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டார பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. விண்ணை முட்டும் புகையுடன் தீ தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் காற்றில் PM2.5 13.6 வரை நுண் துகள்கள் கலந்துள்ளன. எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. இதனால் திருவள்ளூரில் காற்றின் தரம் குறைந்து மாசு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இன்று மாலையில் தீ அணைக்கப்பட்டாலும் காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் நீங்கி சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதற்கு 2 நாட்கள் வரையில் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.
    • அப்பகுதிமக்களுக்கு அமைச்சர் நாசர் உணவு வழங்கினார்.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் கேட்டறிந்தார்.

    தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. சிலிண்டரை எடுத்து செல்ல அப்பகுதி மக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர், மக்களுக்கு உணவு வழங்கினார்.

    • தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
    • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

    பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 60 பேர் கொண்ட 2 குழுக்கள் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    * ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * பயணிகள் சிரமத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.

    * அருகிலுள்ள வீடுகளில் உள்ள மக்களையும் முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * அருகில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரெயிலில விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பயணிகள் பாதுகாப்பிற்காக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

    அதில், சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரெயிலில விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெறுகிறது.

    தீ விபத்து காரணமாக விரைவு ரெயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தீ விபத்து எதிரொலியால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பிற்காக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் ரெயில் போக்குவரத்து தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு ரெயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    • சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட ஆட்சியர் பிரதாப், எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் 2 மணி நேரத்திற்கு மேலாக தீப்பற்றி எரிந்து வரும் நிலையில் தீயணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ×