என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடிநீர் பாட்டிலில் இறந்த பல்லி- தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் முற்றுகை போராட்டம்
- ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி:
புழல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சில் 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் மொத்தமாக குடிநீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க ஒரு குடிநீர் பாட்டிலை எடுத்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.






