என் மலர்
திருவள்ளூர்
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி புகுந்த மர்ம கும்பல் கட்சி நிர்வாகிகள் 10 பேரிடம் கைவரிசை காட்டி பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
- போலீசார் கூட்டம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சசிகலாவின் மக்கள் சந்திப்பு பயணம் நேற்று மாலை செங்குன்றத்தில் தொடங்கி ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை , கன்னிகை பேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக ஊத்துக்கோட்டையில் நிறைவு பெற்றது.
பெரியபாளையம் ஐ.ஓ.பி வங்கி அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியில் சசிகலாவை பார்க்க ஏராளமான கட்சி நிர்வாகிகள் குவிந்து இருந்தனர். சசிகலா வேனில் அமர்ந்தபடி பேசினார். அப்போது அவருக்கு கிரேன் மூலம் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி புகுந்த மர்ம கும்பல் கட்சி நிர்வாகிகள் 10 பேரிடம் கைவரிசை காட்டி பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
இதில் சிலரது செல்போனும் பறிபோனது. கட்சி நிர்வாகிகள் 3 பேர் தலா ரூ.10 ஆயிரத்தை இழந்து உள்ளனர்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கூட்டம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்கள் பொன்னேரி- தச்சூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி (எண்டி.43) அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பஸ்படிக்கட்டில் நின்றதாக தெரிகிறது. கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது டிரைவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தி மாணவர்களை கண்டித்தார். மேலும் பஸ்சை இயக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பொன்னேரி- தச்சூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவ்வழியே காரில் வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முறையாக பஸ்களை இயக்க பணிமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- காக்களூர் பாலாஜி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோவிந்தராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
- வாகன ஓட்டிகள் உடனடியாக முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பாக்கியம் நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 70). இவர் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் சென்று காய்கறி வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்.
காக்களூர் பாலாஜி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோவிந்தராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென நேருக்கு நேர் வேகமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கோவிந்தராஜனின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கடந்த 6-ந்தேதி நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- தப்பி ஓடிய சிறுவன் மீது ஏற்கனவே வளசரவாக்கம், மதுரவாயல், போரூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது
போரூர்:
சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் முத்துலட்சுமி.
இவரது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 6-ந்தேதி நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் போரூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது19) காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று இரவு 11 மணி அளவில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வாகனத்தில் போரூர் பகுதிக்கு சென்றனர். சஞ்சய் மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். பின்னர் மற்றொரு சிறுவனை பிடிக்க காரம்பாக்கம் பள்ளிக்கூட தெருவிற்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசை சூழ்ந்து கொண்டு சிறுவனை கைது செய்ய விடாமல் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் மீதும் போலீஸ் வாகனத்தின் மீதும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனத்தின் பின் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அதிர்ஷ்ட வசமாக போலீசாருக்கு காயம் ஏற்படவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுவன் அங்கிருந்து நைசாக தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து சிறுவனின் தந்தை முரளியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தப்பி ஓடிய சிறுவன் மீது ஏற்கனவே வளசரவாக்கம், மதுரவாயல், போரூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருவள்ளூர் பஸ் நிலையம், ஜெ.என். சாலை, சி.வி நாயுடு சாலை, பெரிய குப்பம் போன்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பெரியக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்துப்பணியில் இருந்தபோது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த ஒரு பையுடன் ஓட்டம் பிடித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் பஸ் நிலையம், ஜெ.என். சாலை, சி.வி நாயுடு சாலை, பெரிய குப்பம் போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பெரியக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்துப்பணியில் இருந்தபோது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த ஒரு பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பெரிய குப்பத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- கும்மிடிப்பூண்டி பஜாரில் நாளை மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது.
- சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் ஆகிய பகுதிகளில் நாளை மின் சப்ளை இருக்காது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி துணைமின் நிலையத்தின் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் நாளை (வியாழக்கிழமை) மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது.
இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, பைபாஸ் சாலை, கோட்டக்கரை, பிரித்வி நகர், முனுசாமி நகர், பூபாலன் நகர், மங்காவரம், ஆத்துப்பாக்கம், பால கிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், பெத்திக்குப்பம், சாமி ரெட்டிகண்டிகை கண்டிகை, வேற்காடு, ரெட்டம்பேடு சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், அயநல்லூர், சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் ஆகிய பகுதிகளில் நாளை மின் சப்ளை இருக்காது.
இந்த தகவலை மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
- போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கடைசியாக சொந்த கிராமத்தில் படித்த பள்ளியில் விழிப்புணர்வு பிரசார பயணத்தினை முடித்தனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மதன், தீபக், சதீஷ், சஞ்சய், கோகுல கண்ணன், அர்ஷித் ஆகிய 6 பேர் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவர்கள் கடைசியாக சொந்த கிராமத்தில் படித்த பள்ளியில் விழிப்புணர்வு பிரசார பயணத்தினை முடித்தனர். அவர்களுக்கு அப்பகுதி கிராம மக்கள் மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர். இதில் நேதாஜி நகர் சிவக்குமார், வார்டு உறுப்பினர் ராஜன் தனியார் பள்ளி தாளாளர் டி, சிமியோன்விக்டர் கலந்து கொண்டனர்.
- தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
- அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
சிறிய குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல மறுத்து வீட்டில் அழுது புரண்டு அடம்பிடிப்பது வழக்கம். குழந்தைகளை பெற்றோர் தூக்கிச்சென்று அங்கன்வாடி மையத்தில் விட்டு செல்வதை பெரும்பாலும் காண முடியும். குழந்தைகளும் வேறு வழியில்லாமல் அங்கன்வாடி ஊழியருக்கு பயந்து அங்கே இருந்து பொழுதை கழித்து செல்வார்கள்.
ஆனால் திருவள்ளூரில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடன் போட்டி போட்டு வந்து செல்கிறார்கள். இதற்கு அங்குள்ள அங்கன்வாடி பெண் ஊழியரின் கனிவான உபசரிப்பு மற்றும் வரவேற்கும் விதம் காரணமாக உள்ளது. இந்த உபசரிப்பு அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் பள்ளிக்கு நிகராக அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த "ஸ்மைல்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து உள்ளார். இது மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் முன்பள்ளிக் கல்வியில் ஆதரவளிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. குழந்தைகள் உட்கார நாற்காலி வசதி, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த திருவலாங்காடு சின்னம்மா பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வரும் ருக்மணிதேவி என்பவர் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வித்தியாசமாக வரவேற்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை கை குலுக்குதல், வணக்கம் தெரிவித்தல், கட்டி அணைத்தல், கைகளால் "பஞ்ச்" கொடுப்பது என வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். குழந்தைகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அங்கன்வாடி மையத்துக்கு துள்ளி குதித்தபடி செல்கிறார்கள்.
மேலும் குழந்தைகள் தங்களை வரவேற்கும் விதத்தை தேர்வு செய்யும் வகையில் அங்கன்வாடிமைய அறையின் வாசல் முன்பு இதற்காக கை குலுக்குதல், கட்டி அணைத்தல், வணக்கம் தெரிவித்தல், கைகளால் பஞ்ச் ஆகியவை அடங்கிய வரைபடம் ஒட்டப்பட்டு உள்ளது.
இதில் ஒன்றை குழந்தைகள் தேர்வு செய்ததும் அதன்படி அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவி வரவேற்று அனுப்புகிறார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். தற்போது சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். குழந்தைகளை வரவேற்கும் அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவியை அவர் பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் ருக்மணி தேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அங்கன்வாடி மையத்துக்கு காலையில் வரும் குழந்தைகளை எப்போதும் இதுபோல் தான் வரவேற்பேன். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக குழந்தைகளுடன் நெருக்கமா இருக்க முடியும். இங்கு மொத்தம் 25 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சந்தோஷமாக வரும்போது பெற்றோருக்கும் மிகவும் நம்பிக்கை ஏற்படும்.
தற்போது இந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திரும்பி வந்து அண்ணன் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
- அப்போது வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியின் வீட்டிற்கு விளையாட சென்றார். அப்போது வீட்டில் தோழியின் உறவினரான கோவிந்தராஜ் (38) என்பவர் மட்டும் இருந்தார். அவர் சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பேச்சு கொடுத்தார். திடீரென அவர் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். உடனே கோவிந்த ராஜ், சிறுமியிடம் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்து வெளியில் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருமுல்லைவாயில் போலீசில் புகார் செய்தனர். போலீசார் என்ஜினீயரான கோவிந்த ராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.
வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திரும்பி வந்து அண்ணன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தனசேகர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொடுகாடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.
- நகை கொள்ளை சம்பவம் குறித்து தனசேகர் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பணந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி மருந்தாளுநராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 17-ந் தேதி தனசேகர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொடுகாடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு தனசேகர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 சவரன் தங்க நகைளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தனசேகர் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- புழல் ஏரியில் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- கழிவுநீர் திருமுல்லைவாயலில் இருந்து சூரப்பட்டு ஏரியில் கலப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.
செங்குன்றம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதில் 3,300 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 2908 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
புழல் ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் மாசு அடைந்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இதையடுத்து புழல் ஏரியில் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஓட்டல்கள், கடைகளில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டு கழிவுநீர் கொட்டப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகள், திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரை குழாயில் இணைத்து வெளியேற்றுவதற்கு மெட்ரோ வாட்டர் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதனால் ஏரிக்கு கழிவுநீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்படும். இந்த திட்டப்பணி பருவமழை முடிந்தவுடன் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு பின்னர் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பத்தூர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தொடர்ந்து அருகில் உள்ள ஏரியில் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
மேலும் கழிவுநீர் திருமுல்லைவாயலில் இருந்து சூரப்பட்டு ஏரியில் கலப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.
தனியார் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் 57 தெருக்களில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலப்பது தெரிய வந்துள்ளது. எனினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பம்ப்பிங் நிலையங்கள் மற்றும் பிற பணிகளுக்கு ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திரா நோக்கி ரேசன் அரிசி கடத்தி சென்ற வேனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பம் பகுதியில் ஆந்திரா எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா நோக்கி ரேசன் அரிசி கடத்தி சென்ற வேனை மடக்கி பிடித்தனர். அதில் ஒரு டன் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து திருவாலங்காடு அடுத்த சின்னம்மா பேட்டை, பூஞ்சோலை நகர் பகுதியை சேர்ந்த பிரசன்ன குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.






