என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் 45 நாட்கள் பயணம்- போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டு
- போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கடைசியாக சொந்த கிராமத்தில் படித்த பள்ளியில் விழிப்புணர்வு பிரசார பயணத்தினை முடித்தனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மதன், தீபக், சதீஷ், சஞ்சய், கோகுல கண்ணன், அர்ஷித் ஆகிய 6 பேர் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவர்கள் கடைசியாக சொந்த கிராமத்தில் படித்த பள்ளியில் விழிப்புணர்வு பிரசார பயணத்தினை முடித்தனர். அவர்களுக்கு அப்பகுதி கிராம மக்கள் மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர். இதில் நேதாஜி நகர் சிவக்குமார், வார்டு உறுப்பினர் ராஜன் தனியார் பள்ளி தாளாளர் டி, சிமியோன்விக்டர் கலந்து கொண்டனர்.
Next Story






