என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெரியபாளையத்தில் சசிகலா பங்கேற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் 10 பேரிடம் துணிகர திருட்டு
    X

    பெரியபாளையத்தில் சசிகலா பங்கேற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் 10 பேரிடம் துணிகர திருட்டு

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி புகுந்த மர்ம கும்பல் கட்சி நிர்வாகிகள் 10 பேரிடம் கைவரிசை காட்டி பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
    • போலீசார் கூட்டம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    பெரியபாளையம்:

    சசிகலாவின் மக்கள் சந்திப்பு பயணம் நேற்று மாலை செங்குன்றத்தில் தொடங்கி ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை , கன்னிகை பேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக ஊத்துக்கோட்டையில் நிறைவு பெற்றது.

    பெரியபாளையம் ஐ.ஓ.பி வங்கி அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியில் சசிகலாவை பார்க்க ஏராளமான கட்சி நிர்வாகிகள் குவிந்து இருந்தனர். சசிகலா வேனில் அமர்ந்தபடி பேசினார். அப்போது அவருக்கு கிரேன் மூலம் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி புகுந்த மர்ம கும்பல் கட்சி நிர்வாகிகள் 10 பேரிடம் கைவரிசை காட்டி பணத்தை திருடி சென்றுவிட்டனர்.

    இதில் சிலரது செல்போனும் பறிபோனது. கட்சி நிர்வாகிகள் 3 பேர் தலா ரூ.10 ஆயிரத்தை இழந்து உள்ளனர்.

    இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கூட்டம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×