என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- முதியவர் பலி
    X

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- முதியவர் பலி

    • காக்களூர் பாலாஜி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோவிந்தராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
    • வாகன ஓட்டிகள் உடனடியாக முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பாக்கியம் நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 70). இவர் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் சென்று காய்கறி வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    காக்களூர் பாலாஜி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோவிந்தராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென நேருக்கு நேர் வேகமாக மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கோவிந்தராஜனின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×