என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
    • வெள்ளி 8862 கிலோ காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தேவர் மண்டபத்தில் கோவில் பணியாளர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் கடந்த 19 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 82 ஆயிரம், தங்கம் 555 கிராமும், வெள்ளி 8862 கிலோவும் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
    • 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 95 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 998 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.

    சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மேலும் 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவலை சென்னை-திருவள்ளூர் ஆம்புலன்சு சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திப்குமார் தெரிவித்து உள்ளார்.

    • குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கம்மர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாசி(வயது60). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவரது மனைவி பூங்கொடி(55). இவர்களுக்கு பாரதி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10-ந்தேதியும் மாசி, பூங்கொடி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூங்கொடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மாசி, நீ மட்டும் தான் விஷம் குடிப்பியா, நானும் குடிப்பேன் என்று கூறி மனைவியின் கையில் மீதம் இருந்த விஷத்தை அவரும் பிடுங்கி குடித்தார்.

    இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மாசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாசியும் உயிரிழந்தார்.

    குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழவேற்காட்டில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • வீல் சேர், சைக்கிள், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய 52 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைத்து சென்னை சமூக சேவை சங்க தொடர் செயல்பாடுகளாக உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஒருங்கிணைப்பாளர் ஹாஜா முகைதீன் ஏற்பாட்டில் இயக்குனர் எம்.வி.ஜேக்கப் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜி.ரவி பங்கேற்று வீல் சேர், சைக்கிள், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.கே.தமின்ஷா, செவ்வழகி எர்ணாவூரான், கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், சமூக ஆர்வலர்கள் பழவை முகம்மது அலவி, வஞ்சிவாக்கம் அசோக் பிரியதர்ஷன், பழவேற்காடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாத்திமா மூசா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

    • திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவொற்றியூர்:

    தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காத கவர்னரை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 3 மணி அளவில் கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தட்சிணாமாறநாடார் சங்க சென்னை இயக்குனர் என்.ஏ தங்கதுரை, ஆர் கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், திருவொற்றியூர் பகுதி முத்துக்குமார், நிர்வாகிகள், கருப்பையா, பாக்யராஜ் சுப்பிரமணி வெள்ளைச்சாமி, சேவியர், சிவகுமார், பத்மநாபன், ஸ்டாலின், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, மீனா, ஆனந்தி, அனிதா மற்றும் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஆரணி பேரூராட்சி மன்ற வளாகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
    • சுபாஷினி, முனுசாமி, சுஜாதா, ரகுமான்கான், சந்தானலட்சுமி குணபூபதி, பொன்னரசி, குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி மன்ற வளாகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் வழக்கறிஞர் கே.சுகுமார், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இளநிலை உதவியாளர் யுவராஜ் 15 தீர்மானங்களை வாசித்தார். இதில், அம்ருத் 2.0 திட்டத்தில் இப்பேரூராட்சியில் ரூ.7.98 கோடியில் மத்திய, மாநில அரசு நிதி,பேரூராட்சி பங்களிப்புடன் மேற்கொள்வது என்றும் அதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோறுவது என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதில், 9 மற்றும் 11-வது தீர்மானங்களை வாசிக்கும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அந்த 2 தீர்மானங்கள் மீது 24-ம் தேதி விவாதம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இதன்பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அருணா, கௌசல்யா, பிரபாவதி, சதீஷ், சுகன்யா, சுபாஷினி, முனுசாமி, சுஜாதா, ரகுமான்கான், சந்தானலட்சுமி குணபூபதி, பொன்னரசி, குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வரி தண்டலர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

    • கோபியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
    • திருவாலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவாலங்காட்டை சேர்ந்தவர் கோபி(58).விவசாயி.இவர் அதே பகுதி சன்னதி தெருவில் உள்ள வங்கியில் இருந்து ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். திருவாலங்காடு தேரடி வழியாக வந்து கொண்டு இருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கோபியிடம் உங்கள் பணம் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் கோபி மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அந்த பணத்தை எடுத்தார். அப்போது மர்ம நபர்கள் இருவரும் கோபியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனால் கோபி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் பணம் பறித்து சென்ற வாலிபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு குறித்தும் கையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்
    • பொன்னேரி பஜார் வீதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை பேரணியாக சென்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் புகையில்லா போகி பண்டிகையை வலியுறுத்தியும், பொதுமக்கள் இடையே பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    ஜெயா கல்வி குழுமம் தாளாளர் டாக்டர் கனகராஜ் தலைமையில் மாணவ- மாணவியர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி முதல் பொன்னேரி பஜார் வீதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பணம் வைத்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    ஆர்.கே.பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் மேல் மோசூர் கண்டிகை கிராமத்தில் சிலர் பணம் வைத்து தாயம் விளையாட்டு விளையாடுவதாக ஆர்.கே .பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி(45), கணேசன்(45), விஸ்வநாதன்(56), மற்றும் ஆர்.பி. கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(35) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 19-ந்தேதி கருட சேவை நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை மற்றும் சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவம் நடைபெற்றது.

    கொரோனா தொற்று நீங்கிய நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், வருகிற 17-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.

    இதனால் வீரராகவப் பெருமாள் எழுந்தருளும் திருத்தேர் உள்பட பல்வேறு வாகனங்களை கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைத்து வருகின்றனர்.

    அதைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான 19-ந்தேதி காலை கருட சேவையும் கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 5-வது நாளான 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையையொட்டி ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டம் நடைபெறும். 10-வது நாளான 26-ந் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.

    • கும்மிடிப்பூண்டி பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய தயாராக உள்ளது.
    • விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதி வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார் கூறியதாவது:-

    கும்மிடிப்பூண்டி பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் அறுவடைக்குப் பின் பயிர் வகைகளான பச்சைப்பயிறு உளுந்து,ஆகியவற்றை சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்கான விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் உரங்களும் 50 சதவீத மானியத்துடன் வழங்கபடுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கொதிகலன் பழுதை மின் ஊழியர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீஞ்சூர்:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளிலும் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 1200 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் பழுதை மின் ஊழியர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×