திருவாலங்காட்டில் முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் கொள்ளை

கோபியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.திருவாலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவாலங்காட்டில் முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் கொள்ளை
Published on

திருவள்ளூர்:

திருவாலங்காட்டை சேர்ந்தவர் கோபி(58).விவசாயி.இவர் அதே பகுதி சன்னதி தெருவில் உள்ள வங்கியில் இருந்து ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். திருவாலங்காடு தேரடி வழியாக வந்து கொண்டு இருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கோபியிடம் உங்கள் பணம் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் கோபி மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அந்த பணத்தை எடுத்தார். அப்போது மர்ம நபர்கள் இருவரும் கோபியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனால் கோபி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் பணம் பறித்து சென்ற வாலிபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com