search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா 17-ந் தேதி தொடங்குகிறது
    X

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா 17-ந் தேதி தொடங்குகிறது

    • 19-ந்தேதி கருட சேவை நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை மற்றும் சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவம் நடைபெற்றது.

    கொரோனா தொற்று நீங்கிய நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், வருகிற 17-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.

    இதனால் வீரராகவப் பெருமாள் எழுந்தருளும் திருத்தேர் உள்பட பல்வேறு வாகனங்களை கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைத்து வருகின்றனர்.

    அதைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான 19-ந்தேதி காலை கருட சேவையும் கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 5-வது நாளான 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையையொட்டி ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டம் நடைபெறும். 10-வது நாளான 26-ந் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.

    Next Story
    ×