என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • சென்னை மாநகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களக்கு பரிசுகளை வழங்கினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிசார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப் போட்டிகள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை வரைந்தனர் போட்டியில் முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்ற பெண்களுக்கு தலா 50 ஆயிரம், இரண்டாவதாக ஏழு இடங்களைப் பிடித்த பெண்களுக்கு தலா 25 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் கோலப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொங்கல் பரிசாக சேலைகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற பெண்களுக்கான பரிசினை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவர் சதா சிவலிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் குணாநிதி, பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், சென்னை மாநகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக காங்கிரஸ் நிர்வாகி ஜோதி சுதாகர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களை வைஷ்ணவ கல்லூரி பேராசிரியைகள் டாக்டர் பிரேமலதா, டாக்டர் சுபாஷினி, ஆகியோர் தேர்வு செய்தனர்.

    • பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் மனோஜ் குமார்.
    • கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் மனோஜ் குமார்(36) எம்பிஏ, பிஎச்டி படித்த இவர் சென்னை வேர் ஹவுஸ்ல் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொன்னேரி அடுத்த கம்மார் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பஸ்சில் ஆந்திர மாநிலம் உதயகிரியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.
    • கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று சப்-இன்ஸபெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் ஆந்திர மாநிலம் உதயகிரியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற மதுரையைச் சேர்ந்த பிரபு (20) அஜய் பிரபாகர் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரி இயங்கி வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் மேலாளராக முருகன் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (50), ரமணாபிரசாத் (50), உமாபிரசாத் (55) உள்ளிட்ட 5 பேர் கல்குவாரிக்கு நேரில் சென்று அங்கிருந்த மேலாளர் முருகன் மற்றும் ஊழியர்களிடம் மாமூல் கொடுத்தால் தான் கல்குவாரி நடத்த முடியும் எனக்கூறி ஆயுதங்களுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கல்குவாரி மேலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லோகநாதன், ரமணாபிரசாத், மற்றும் உமாபிரசாத் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டார்.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    ஆவடி:

    ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி பயிற்சி படை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுடன் பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டார். அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணியின் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் ஜெயராம், மற்றும் ஆயுதப்படை காவல்துறை தலைவர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நுழைவாயிலில் கரும்பு வாழை, தோரணங்களுடன் சிறப்பாக அலங்கரிக்கப்படிருந்தது. மேளம் நாதஸ்வரம், பேண்ட் வாத்தியம் என பொங்கல் திருவிழா களை கட்டியது.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பறை இசை கலைஞர்கள் வாத்தியத்தை இசைத்தபடி நடனமாடினார்கள். அதை பார்தததும் டி.ஜி.பி.சைலேந்திர பாபுவும் பறையை வாங்கி அடித்தபடி கலைஞர்களுடன் ஆடினார். 10 நிமிடங்களுக்கும் மேல் அவர் ஆடி அசத்தினார்.

    நிகழ்ச்சியில் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மல்லர் கம்பம் ஏறுதல், ரங்கோலி கோலம் போட்டிகள், பரதநாட்டியம் குழுவினரின் நடன நிகழ்ச்சி, பறை இசை, கரகம் குழுவினர் நிகழ்ச்சி, ஏரோபிக்ஸ் நடனம், சிறுவர் நிகழ்ச்சி, கிராமிய நடனம், சிலம்பம் மற்றும் வால்வீச்சு உள்ளிட்ட தமிழ்நாடு பண்பாட்டின் வீர சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆண் போலீசார் பட்டுவேட்டி-சட்டை, பெண் போலீசார் பட்டு புடவையில் கலந்து கொண்டனர்.

    • பேருந்துகளில் பெரும்பான்மையானவை பழுதடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • ஆவடியில் இருந்து ஆரணி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பழுது நீக்கி சீராக இயக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இருந்து ஆரணி வரையில் தடம் எண்: 580 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பேருந்துகளில் பெரும்பான்மையானவை பழுதடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி சென்ற தடம் எண்: 580 பேருந்து ஒன்று வெங்கல் அருகே வந்தபோது இடது புற முன் பக்க டயர் பஞ்சர் ஆகி நடு ரோட்டில் நின்று விட்டது. இதனால் இந்த பேருந்தில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், இவர்கள் காத்திருந்து மற்றொரு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பழுது நீக்கி சீராக இயக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போனது.
    • போலீசார் மேற்கண்ட இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு தன் மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பல இடங்களில் தேடியும் அது கிடைக்கவில்லை. அதேபோல திருவள்ளூர் அடுத்த மப்பேடு புதிய காலனியை சேர்ந்தவர் ராமு (வயது 31) இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து பாபு , ராமு இருவரும் மப்பேடு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை திருடியது ராணிப்பேட்டை மாவட்டம் மேட்டூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் என்கின்ற செல்வகுமார் (வயது 25), திருவள்ளூர் அடுத்த மோசூர் திடீர் நகரை சேர்ந்த சக்திவேல் ( 23) என தெரியவந்தது. இதை தடுத்த போலீசார் மேற்கண்ட இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

    திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் சப் கலெக்டர் மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

    அப்போது தேர் செல்லும் நான்கு மாட வீதிகளில் சாலை வசதி, மின் கம்பங்கள் சரியான உயரத்தில் இருக்கிறதா, மின் வயர்கள் உரசாத அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறதா, சாலையோர கடைகள் இருந்தால் அதை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தர் சுக்லா, நகராட்சி ஆணையர் ராஜ லட்சுமி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜே.தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, மின்வாரிய அதிகாரிகள் யுவராஜ், தட்சிணாமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ, டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, வருவாய் ஆய்வாளர் கணேஷ் வீரராகவர் கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
    • மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதிசுந்தரம். இவரது மகன் பானுபிரகாஷ் (38). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மணவாளநகர் சந்திப்பு பகுதியில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

    இந்த விபத்தில் லாரியில் சிக்கிய பானுபிரகாஷ் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பாரம்பரியமாக 7 மண் பானைகள் வைத்து, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இணைந்து பொங்கலிட்டனர்.
    • பொங்கல் பொங்கி வரும் வேளையில் ‘பொங்கலோ பொங்கல்’ என குலவையிட்டு கொண்டாடினர்.

    பொன்னேரி:

    பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டம் E4 காட்டூர் காவல் நிலையம் சார்பில், காட்டூர் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலய வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரியமாக 7 மண் பானைகள் வைத்து, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இணைந்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் 'பொங்கலோ பொங்கல்' என குலவையிட்டு கொண்டாடினர்.

    காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர், செல்வராமன் உதவி ஆய்வாளர்கள், விஜயகுமார், பழனிவேல், குமார், உமாபதி, கோவிந்தராஜன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பாம்பின் சீற்ற சத்தம் நன்றாக கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கூறினர்.
    • பிடிபட்ட பாம்பை பூந்தமல்லி அடுத்த அரண்வாயில் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கணேசன் விடுவித்தார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர், லலிதாம்பிகை நகரில் உள்ள மாந்தோப்பு காலனியில் வசித்து வருபவர் செல்வ குமார். இவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள மிகக்கொடிய விஷம் கொண்ட அரியவகை கோதுமை நல்ல பாம்பு புகுந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து வெளியே வந்தனர். இது குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவும், போட்டோவும் எடுக்க ஆர்வமிகுதியில் அருகில் சென்றனர்.

    ஆனால் அவர்களைப் பார்த்ததும் பாம்பின் சீற்றம் அதிகமானது. இதை கண்ட அருகில் நின்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த கோதுமை நல்லபாம்பு படமெடுத்து மிரட்டியது.

    இதுபற்றி அம்பத்தூரில் உள்ள பாம்பு பிடி வீரர் கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி கோதுமை நல்லபாம்பை லாவகமாக பிடித்தார்.

    நீண்ட நேரம் படமெடுத்து போக்கு காட்டிய அரிய வகை கோதுமை நல்ல பாம்பை பார்க்க அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    பாம்பின் சீற்ற சத்தம் நன்றாக கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கூறினர். பிடிபட்ட அந்த பாம்பை பூந்தமல்லி அடுத்த அரண்வாயில் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கணேசன் விடுவித்தார்.

    • மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.
    • ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அம்மா சிமெண்ட் கிடங்கு கண்காணிப்பு ஊழியராக நியமனம் செய்யப்பட்ட வரை நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர் சுமித்ரா குமார் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. உறுப்பினர்களுக்கும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கவுன்சிலர்கள் பானு பிரசாத், கிருஷ்ண பிரியா வினோத், வெற்றி, தமின்சா, சகாதேவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×