என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்டூர் காவல் நிலையம் சார்பில் காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா
- பாரம்பரியமாக 7 மண் பானைகள் வைத்து, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இணைந்து பொங்கலிட்டனர்.
- பொங்கல் பொங்கி வரும் வேளையில் ‘பொங்கலோ பொங்கல்’ என குலவையிட்டு கொண்டாடினர்.
பொன்னேரி:
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டம் E4 காட்டூர் காவல் நிலையம் சார்பில், காட்டூர் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலய வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரியமாக 7 மண் பானைகள் வைத்து, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இணைந்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் 'பொங்கலோ பொங்கல்' என குலவையிட்டு கொண்டாடினர்.
காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர், செல்வராமன் உதவி ஆய்வாளர்கள், விஜயகுமார், பழனிவேல், குமார், உமாபதி, கோவிந்தராஜன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






