என் மலர்
திருவள்ளூர்
- சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.
- பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.
பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன, ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் கோபிநாத், துணைத் தலைவர் விஜயகுமார், மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தீஸ்வரி மாவட்ட குழந்தைகள் நல தலைவர் மேரி அக்சிலியா, கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 1300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
- ஒரு அங்கமாக ரோபோக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.80 லட்சம் செலவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 1300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் முயற்சி எடுத்தனர்.
அதில் ஒரு அங்கமாக ரோபோக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.80 லட்சம் செலவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. பழைய மாணவர் சுதீர் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி சேதுராமன், தலைமை ஆசிரியர்கள் சுலோச்சனா, லோகநாதன் கலந்து கொண்டனர். ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.
- பொன்னேரியில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
- வாகனங்களில் சென்று முதல்வரை வரவேற்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது.
பொன்னேரி:
திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் சுறுசுறுப்பாக செய்துவருகின்றனர்.
அவ்வகையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் உத்தரவின் பெயரில் பொன்னேரியில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில், நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் முன்னிலையில் திமுக கட்சி அலுவலகத்தில் முதல்வர் வரவேற்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் பேருந்து, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று முதல்வரை வரவேற்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக ஆட்டோக்களில் பொதுக் கூட்டம் தொடர்பான விளம்பர நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
- பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது
- கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு சீருடைகளை அறிமுகப்படுத்தினர்.
பொன்னேரி:
இளம் வயதில் மாரடைப்பால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் இளைஞர்களிடம், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் உள்ள பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கார்ப்பரேட் கிரிக்கெட் என்ற பெயரில் கிரிக்கெட் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 36 தனியார் நிறுவனங்கள் சார்பில் 36 அணிகள் களம் இறங்க உள்ளன.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணிந்து கொள்ளும் சீருடைகள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் 36 கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு சீருடைகளை அறிமுகப்படுத்தினர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், இளம் இதயங்களைக் காப்போம் என்ற தலைப்பில் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்துவதாக தெரிவித்தனர்.
- பொன்னேரி நகராட்சியில் உள்ள சின்னவேண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
- பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்:
பொன்னேரி நகராட்சியில் உள்ள சின்னவேண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் வெங்கடேசனும் மற்றொரு பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் விஜய்பாபு (35) என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அரை கிலோ வெள்ளி பெருட்கள் திருடு போனது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வாடகைதாரர் விஜய்பாபுவிற்கு தகவல் கொடுத்தனர். அவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 8 பவுன் தங்க நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
- திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தங்கனூர் விளையாட்டு திடலில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.
- சேவல் சண்டை போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தங்கனூர் விளையாட்டு திடலில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது
இந்த சேவல் சண்டை போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
சேவல் சண்டை போட்டிகளில் சேவல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சூழல், சூதாட்டப் புகார் உள்ளிட்ட காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேவல் சண்டை போட்டிகளை நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர்.
இந்த சேவல் சண்டை போட்டி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும்.
இதில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் கொண்டு கால்நடை மருத்துவர்களின் பரிசோதனை, போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் புதுச்சேரி கன்னியாகுமாரி பாம்பே நெல்லூர் விஜயவாடா பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
இதில் நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன.
மூன்று நாள் போட்டிகளில் தொடர் வெற்றி பெறும் சேவலுக்கு முதல் பரிசு 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் இரண்டாம் பரிசு ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது.
இதற்காக திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தர் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- 100 ஆண்டுகள் கடந்தும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்றால் அவர் வழங்கிய சத்துணவு திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்கள் இன்று பல்வேறு உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
அம்பத்தூர்:
மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அ. தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின்106 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நொளம்பூர் பாரதி சாலையில் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் எம்.இம்மானுவேல் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மத்திய மாவட்ட அ. தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சர் அமைப்பு செயலாளருமான பா.பென்ஜமின், கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-
100 ஆண்டுகள் கடந்தும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் போனார்கள். ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்றால் அவர் வழங்கிய சத்துணவு திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்கள் இன்று பல்வேறு உயர் பதவிகளில் இருக்கிறார்கள். கடந்த 2016 - ம் ஆண்டு அம்மா அவர்களால் நான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் நொளம்பூர் கூவம் அருகே பாலப்பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மண் பரிசோதனை செய்யப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது அதுமட்டுமில்லாமல் மாவட்ட தலைநகரங்களில் உள்ளது போல் இந்த நொளம்பூர் பகுதியில் தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், ரேஷன் அலுவலகம், தாலுகா நீதிமன்றம், என அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த எடப்பாடி யார் அரசு. 10 ஆண்டு காலத்தில் சுமார் 3000 கோடிக்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதும் எடப்பாடியார் அரசுதான். வருகிற சட்டசபைத் தேர்தலில் அம்மாவின் நல் ஆசியுடன் எடப்பாடி யார் தலைமையில் கழக ஆட்சி அரியணை ஏறியே தீரும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ் ஏ. மணிமாறன், தி.பா. கண்ணன், காசு ஜனார்த்தனம், ஜாவித்அகமது, பகுதி செயலாளர்கள் கே.தாமோதரன், இ.கந்தன், மாநகராட்சி எதிர்க்கட்சித் துணை தலைவர் நெற்குன்றம் டி.சத்யநாதன், ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற பேரழகன், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.ஜி.டி.கௌதமன், கே.ராஜ கோபால், துண்டலம் பி.பாபு, முகப்பேர் இளஞ்செழியன், சந்திர சேகர், மகேந்திரன், ரமேஷ், மகேஷ் பிரபு, அந்தமான் முருகன், நெற்குன்றம் சதீஷ்குமார், பி.ரமேஷ், புனிதவதி, முகப்பேர் ஆர்.ராதாகிருஷ்ணன், கோமதி, சி.பவானி, வி.லட்சுமணன், டி.குட்டி,எம்.பாலமுருகன், எம்.கே.எஸ்.உதயா, சந்திரபோஸ், ராஜேந்திரன், உட்பட மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும் போது, 'மாவட்டத்தில் தாலுகா வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம்' என்றார்.
இதில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார், நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார், சேர்மன் ரவி கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 -ம் கல்வியாண்டில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.
- வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கொண்டமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது62). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன், மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து சுலோச்சனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் சுலோச்சனா சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சுலோச்சனாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா இறந்து கிடந்தார். அவரது கழுத்து, கையில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. வீட்டின் கதவை தட்டி புகுந்த மர்ம நபர்கள் சுலோச்சனாவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுலோச்சனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுலோச்சனா கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. அவர் அணிந்து இருந்த நகைகள் அப்படியே உள்ளன. வீட்டில் சுலோச்சனா தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி சுலோச்சனாவின் வீட்டுக்கு முதியவர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. அவரைப்பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் க.சுகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
- தமிழக அரசின் சமுதாய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் க.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ச.கலாதரன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தமிழக அரசின் சமுதாய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27.15 லட்சம் மதிப்பில் 537 எல்.இ.டி. பல்புகள் 15 வார்டுகளில் பொருத்துவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் டி.கண்ணதாசன், ப.சோ.முனுசாமி, க.கா.சதிஷ், சந்தானலட்சுமி குணபூபதி, சுபாஷிணி ரவி, பிரபாவதி ஷேஷாத்திரி, கவுசல்யா தினேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில், இளநிலை உதவியாளர் யுவராஜ் நன்றி கூறினார்.
- பலத்த காயம் அடைந்த சரத்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
- கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் சரத்குமார் தாக்கப்பட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த சரத்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
- வியாபாரி மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் அவரை ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று திருகண்டலம் ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் செல்லப்பா(வயது58) என்பது தெரியவந்தது. இவர் தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார்.
எனவே, அவர் பையில் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்களுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.






