என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக்கொலை- கொள்ளை முயற்சியில் நடந்ததா?
  X

  கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக்கொலை- கொள்ளை முயற்சியில் நடந்ததா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கும்மிடிப்பூண்டி:

  கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கொண்டமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது62). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன், மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து சுலோச்சனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

  நேற்று இரவு வழக்கம் போல் சுலோச்சனா சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சுலோச்சனாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா இறந்து கிடந்தார். அவரது கழுத்து, கையில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. வீட்டின் கதவை தட்டி புகுந்த மர்ம நபர்கள் சுலோச்சனாவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி இருப்பது தெரிந்தது.

  இதுகுறித்து பாதிரிவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுலோச்சனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுலோச்சனா கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. அவர் அணிந்து இருந்த நகைகள் அப்படியே உள்ளன. வீட்டில் சுலோச்சனா தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மூதாட்டி சுலோச்சனாவின் வீட்டுக்கு முதியவர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. அவரைப்பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×