பெரியபாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரி கைது

மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.வியாபாரி மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் அவரை ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரி கைது
Published on

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று திருகண்டலம் ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் செல்லப்பா(வயது58) என்பது தெரியவந்தது. இவர் தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார்.

எனவே, அவர் பையில் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்களுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com