என் மலர்
திருவள்ளூர்
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மதிராசம்மா அணிந்து இருந்த நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லிங்கபையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ்.அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதிராசம்மா (62). கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த அவர் வெளியில் உள்ள பொருட்களை எடுக்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மதிராசம்மா அணிந்து இருந்த 5½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
- பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதியில் ஹாயாக சுற்றி வருகின்றன.
வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தின்று சென்று விடுகிறது. இதனை தடுக்க வரும் பொது மக்களையும் கடித்து மிரட்டுகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதேபோல் பொன்னேரி ரெயில் நிலையத்திலும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை விடாமல் துரத்துகிறது.
அவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் பழங்களை குரங்குகள் பறித்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு வரவே பயணயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
திருவாயர்பாடி, வேண்பாக்கம் ரெயில் நிலையத்திலும் குரங்குகள் அட்டகாசம் இருப்பதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
- மர்ம நபர் கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், 3 கிலோ காப்பர் 5 கிலோ அலுமினியம் உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி ஜி. வி. என். நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் பொன்னேரி-தச்சூர் சாலையில் உள்ள பஸ் டிப்போ அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இரவு அவர் வழக்கம்போல் கடைய மூடிச்சென்றார். நள்ளிரவு வந்த மர்ம நபர் கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், 3 கிலோ காப்பர் 5 கிலோ அலுமினியம் உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரியை அடுத்த தேவமா நகரை சேர்ந்த சேதுபதி (30) என்பவரை கைது செய்தனர்.
- மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
- கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி ஜி.என்.டி. சாலையில் வசித்து வருபவர் பொன்ராஜ். ஸ்ரீபெரும்புதூர் தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இதனை நோட்ட மிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 1/2 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் சோம்பள்ளி ரமேஷ்பாபு, ஜெயா கல்லூரி சேர்மேன் ஜனகராஜ் நாயுடு பங்கேற்றனர்
- பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நாயுடு சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் கம்மவார் நாயுடு நலச் சங்கம் சார்பில் 2023ம் ஆண்டின் யுகாதி குடும்ப விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பொன்னேரியில் உள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் அமைந்துள்ள ஆர்ஆர் மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கம்மவார் நாயுடு மகா ஜன சங்கம் மாநில பொருளாளர் ஜி.வாசுதேவ நாயுடு, கம்மவார் நாயுடு நல சங்க தலைவர் கே.டி.வாசுதேவன் நாயுடு, கம்மவார் நாயுடு நலச்சங்கம் பொதுச் செயலாளர் வி.ஜி.சுகுகுமார் நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினார். நாயுடு நல சங்க பொருளாளர் ஜனார்தனன் நாயுடு வரவேற்புரை நிகழ்த்தினார். கம்மவார் நாயுடு நலச்சங்க துணைத்தலைவர் ரமேஷ் நாயுடு, ஒருங்கிணைப்பாளர் விகே ரமேஷ் நாயுடு,துணை செயலாளர் நாகேஸ்வர நாயுடு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கம்மவார் நாயுடு சமூகத்தின் பேச்சாளர் சோம்பள்ளி ரமேஷ்பாபு, ஜெயா கல்லூரி சேர்மேன் ஜனகராஜ் நாயுடு, ஜேஎன்என் கல்லூரி சேர்மன் ஜெயச்சந்திரன் நாயுடு, விவேகானந்தர் வித்யாலயா கரஸ்பாண்டன் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் நாயுடு, தொழிலதிபர் மோகன் நாயுடு, ஜெய்சங்கர் நாயுடு, உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொன்னேரி, வேண் பாக்கம், திருவேங்கடபுரம், பெரும் பேடு கம்மவார் பாளையம், கிருஷ் ணாபுரம், தேவதானம், தசரத நகர், பாலாஜி நகர், காணியம் பாக்கம், ஆண்டார்குப்பம், நெற்குன்றம், இருள்ளிப்பட்டு, சீமாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாயுடு சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
- பஸ்நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான தேரடியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து சாலை ஓரத்தில் நின்று வெவ்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் செங்குன்றம் பகுதியில் இருந்து திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு(எண்55) அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
தேரடி அருகே வந்தபோது பஸ் திரும்ப வழி இல்லாமல் சாலையோரத்தில் தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் கட்டிட தொழிலாளர்களிடம் வாக்கு வாதத்தில ஈடுபட்டு ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் டிரைவர் பஸ்சை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.
இந்த நிலையில் அங்கு வந்த மர்மநபர்கள் பஸ் நிலையத்துக்குள் நின்ற அரசு பஸ்டிரைவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தனியார் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
- புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ராட்சத தேனீக்கள் கூடுகட்டி இருந்தது.
- தேனீக்கள் அவ்வழியே சென்றவர்களை விரட்டி,விரட்டி கொட்டியது.
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ராட்சத தேனீக்கள் கூடுகட்டி இருந்தது. இதனை கண்ட சிறுவர்கள் தேன்கூடு மீது கற்களை வீசினர். இதில் கலைந்த தேனீக்கள் அவ்வழியே சென்றவர்களை விரட்டி,விரட்டி கொட்டியது.
இதில் அப்பகுதிைய சேர்ந்த வாசுதேவன்(46) ராதா(65), தேவகுமார்(65), சூர்யா(40) அன்னை மரியா(57) உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை ராட்சத தேனீக்கள் கொட்டின. இதில் அவர்கள் மயக்கம்அடையும் நிலை ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
- பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 118-வது ஆண்டு ஜாத்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும் பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடைபெற்றது.
வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
இதனை பட்டாசு உரிமையாளர் சாதிக் அலி மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து சாமி ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக காலியான இடத்தில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை ஊழியர் சஞ்சீவி வெடித்தார். அதில் இருந்த பறந்த தீப்பொறி அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசுகள் மீது பட்டது. இதில் கொண்டு வந்திருந்த அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடித்து சிதறியதில், பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி, ஊழியர் சஞ்சீவிக்கு ஆகியோர் உடல் கருகினர். சாதிக் அலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகள் மூட வேண்டும்.
- தனியார் மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மதுபான சில்லரை வணிகம் விதிகள் படி மகாவீர் ஜெயந்தி தினத்தன்று அனைத்து வகையான மதுபானக் கடைகளும் மூட வேண்டும் என நெறிமுறைகள் உள்ளது.
அதன்படி நாளை மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் கிளப்புகள், தனியார் மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
- மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, எருக்குவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கமலநாதன் தலைமை தாங்கினார். எருக்குவாய் கண்டிகை வார்டு உறுப்பினர் சி.தரணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.கம்சலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.கே. ரசூல்ராஜ் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினர்களாக கும்மிடிபூண்டி வட்டார கல்வி அலுவலர் டி.என்.முரளிதரன், கும்மிடிப்பூண்டி எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் என்.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை அமைப்பாளர் பி.எஸ்.நாகராஜன் சிறப்பாக தொகுத்து வழங்கினார், முடிவில், உதவி ஆசிரியர் பி.சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதன் பின்னர், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எருக்குவாய் கண்டிகை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி-புதிய பாரதம் தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பொன்னேரி:
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராசன் தலைமையில் மீஞ்சூர் அடுத்த பட்ட மந்திரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் திமுக நிர்வாகிகள் பகலவன் தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ், சி.எச் சேகர், உமா மகேஸ்வரி, செல்வசேகரன் மணிபாலன், ருக்குமனிமோகன்ராஜ் அத்திபட்டு எம்.டி.ஜி கதிர்வேல், பா.செ. குணசேகரன், ஸ்டாலின், பாஸ்கர் சுந்தரம், வழக்கறிஞர் தேவேந்திரன், அன்புவாணன், சுப்பிரமணி, வல்லூர்தமிழரசன், கோளூர் கதிரவன், தமிழ் உதயன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெற முடியும் என்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
- கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி அதன் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர்(11.7 டி.எம்.சி.) சேமித்து வைக்கலாம்.
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8569 மி. கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. நீர் இருப்பு 9 டி.எம்.சிக்கு கீழ் குறைந்து விட்டது.
எனினும் ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீரை வைத்து இன்னும் 8 மாதத்துக்கு சென்னையில் சப்ளை செய்ய முடியும். எனவே வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். மேலும் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெற முடியும் என்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு3231 மி.கனஅடி. இதில் 1735 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 818 மி.கனஅடியும், புழல் ஏரியில் 3300 மி.கனஅடியில் 2403 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 3113 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி அதன் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.






