என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் கம்மவார் நாயுடு நலச் சங்க யுகாதி குடும்ப விழா

    • சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் சோம்பள்ளி ரமேஷ்பாபு, ஜெயா கல்லூரி சேர்மேன் ஜனகராஜ் நாயுடு பங்கேற்றனர்
    • பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நாயுடு சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் கம்மவார் நாயுடு நலச் சங்கம் சார்பில் 2023ம் ஆண்டின் யுகாதி குடும்ப விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பொன்னேரியில் உள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் அமைந்துள்ள ஆர்ஆர் மஹாலில் நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு கம்மவார் நாயுடு மகா ஜன சங்கம் மாநில பொருளாளர் ஜி.வாசுதேவ நாயுடு, கம்மவார் நாயுடு நல சங்க தலைவர் கே.டி.வாசுதேவன் நாயுடு, கம்மவார் நாயுடு நலச்சங்கம் பொதுச் செயலாளர் வி.ஜி.சுகுகுமார் நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினார். நாயுடு நல சங்க பொருளாளர் ஜனார்தனன் நாயுடு வரவேற்புரை நிகழ்த்தினார். கம்மவார் நாயுடு நலச்சங்க துணைத்தலைவர் ரமேஷ் நாயுடு, ஒருங்கிணைப்பாளர் விகே ரமேஷ் நாயுடு,துணை செயலாளர் நாகேஸ்வர நாயுடு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கம்மவார் நாயுடு சமூகத்தின் பேச்சாளர் சோம்பள்ளி ரமேஷ்பாபு, ஜெயா கல்லூரி சேர்மேன் ஜனகராஜ் நாயுடு, ஜேஎன்என் கல்லூரி சேர்மன் ஜெயச்சந்திரன் நாயுடு, விவேகானந்தர் வித்யாலயா கரஸ்பாண்டன் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் நாயுடு, தொழிலதிபர் மோகன் நாயுடு, ஜெய்சங்கர் நாயுடு, உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொன்னேரி, வேண் பாக்கம், திருவேங்கடபுரம், பெரும் பேடு கம்மவார் பாளையம், கிருஷ் ணாபுரம், தேவதானம், தசரத நகர், பாலாஜி நகர், காணியம் பாக்கம், ஆண்டார்குப்பம், நெற்குன்றம், இருள்ளிப்பட்டு, சீமாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாயுடு சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×