என் மலர்
திருவள்ளூர்
- எண்ணூர் கடற்கரை, காட்டுப்பள்ளி ஏரிகளில் இந்த மட்டிகள் அதிகம் காணப்படும்.
- ஏராளமான தொழிலாளர்கள் சிப்பிகளை மூட்டை மூட்டையாக சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீன்பிடி தடைகாலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த கால கட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இதனால் மார்க்கெட்டுகளில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வராது. மேலும் மீன்களின் விலையும் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் பழவேற்காடு மற்றும் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிப்பிக்கறி (மட்டி) விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிப்பிகள் எண்ணூர், காட்டுப்பள்ளி, பழவேற்காடு பகுதிகளில் ஏரிக்கரை ஓரம் அதிகமாக காணப்படும். இதனை தற்போது ஏராளமான தொழிலாளர்கள் சிப்பிகளை மூட்டை மூட்டையாக சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஒருகிலோ சிப்பி ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இது மூல வியாதிக்கு நல்லது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி இதில் அதிகம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதனால் தற்போது ஏராளமான பெண்கள் சிப்பிக்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிப்பிக்கறி வாங்கிய பெண்கள் கூறும்போது, சிப்பியை நன்கு கழுவி வேகவைத்தால் இரண்டாகப் பிரியும். பின்னர் அதனுள் இருக்கும் சதைப் பகுதியை எடுத்து மசாலா போட்டு கிரேவி வைத்து சாப்பிட்டால் அதன் ருசி தனிதான். மேலும் கோடை வெயிலுக்கு குளிர்ச்சி. மூல வியாதிக்கு அருமருந்தாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது. குழந்தை, கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் நல்லது. இதனால்அதிகமான பெண்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர் என்றார்.
இதுகுறித்து 5 வருடமாக சிப்பி விற்பனை செய்து வரும் மீஞ்சூரை அடுத்த பட்டமந்திரி பகுதியை சேர்ந்த சாவித்ரி என்பவர் கூறும்போது, சிப்பி எனப்படும் மட்டிக்கறி விற்பனை தற்போது அதிகமாக உள்ளது. எண்ணூர் கடற்கரை, காட்டுப்பள்ளி ஏரிகளில் இந்த மட்டிகள் அதிகம் காணப்படும். இதனை சாப்பிட மூலம் நோய் உள்ளவர்கள் அதிகம் விரும்புவார்கள். உடல் சூடு தணியவும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. தற்போது மீனின் விலை அதிகம் காணப்படுவதால் மட்டிக் கறியை அதிகமானோர் வாங்குகிறார்கள்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலனிடம் கேட்டபோது பொதுவாக இவற்றை மட்டி என்ற சிப்பி எனவும் பிளாம்ஸ் எனவும் கூறுவார்கள். இவை அண்ணாமலைச்சேரி எண்ணூர் காட்டுப்பள்ளி பழவேற்காடு ஏரிகளில் மண்ணில் புதைந்து கூட்டம் கூட்டமாக காணப்படும். இவற்றைப் பிடித்து சமையல் செய்யும்போது உப்பு தண்ணீரில் மற்றும் மஞ்சள் தண்ணீரில் நன்கு கழுவி சமையல் செய்ய வேண்டும். பச்சை மட்டிக் கறி என்ற வகை ஸ்டார் ஓட்டல்களில் பயன்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
- சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.
- புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளயம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 100 சதவீத சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.
கடந்த 19-ந்தேதி ஆரணி அத்திக்குளம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த, ஆரணி அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகலட்சுமி (வயது37) என்பவரது வீட்டில் ரூ.500 சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களிடம் நாகலட்சுமி பேரூராட்சி சார்பாக என்ன வசதியை இப்பகுதிக்கு செய்தீர்கள் என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் நாகலட்சுமி மீது ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில், புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மகளிர் காவலர் சுமித்ரா ஆகியோர் தலைமையில் போலீசார் நாகலட்சுமியை பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார்.
- ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கும்மிடிப்பூண்டி:
ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள புட்டிரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தர்மய்யா. கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தர்மய்யா தனது குடும்பத்துடன் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த தர்மய்யாவிடம் அக்கா நிர்மலா மனைவி எங்கே என்று கேட்டார். அப்போது மனைவியை அடித்து கொலை செய்து மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக போதையில் கூறி உள்ளார்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதிரிவேடு மாந்தோப்பு பகுதியில் தோண்டிப்பார்த்தபோது அழுகிய நிலையில் பெண் பிணம் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அது தர்மய்யாவின் மனைவி லட்சுமி என்பது தெரிய வந்தது. மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தர்மய்யாவை தேடிவந்தனர். அவர் ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரயா சக்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்து சென்று அவரை தேடி வந்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து பாதிரிவேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாைலயோரம் கேட்பாரற்று 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது.
- உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாைலயோரம் கேட்பாரற்று 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது. இதனை உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
- வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த திருமணமான 30 வயது இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இளம்பெண்ணின் கணவர் அடிக்கடி வேலை தொடர்பாக வெளியூர் சென்றதால் இளம்பெண் வாலிபர் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து நெருங்கி பழகிய இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும் கூறப்ப டுகிறது. இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கள்ளக்கதாலன் இளம்பெண்ணிடம் இருந்து சிறுக சிறுக இதுவரை ரூ.6.லட்சம் வரை பணத்தை சுருட்டினார். மேலும் பணம் கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட கள்ளக்காதலன் உடனடியாக பணம் அனுப்ப வேண்டும் இல்லையென்றால் "இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை" சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திடீரென வீட்டின் சமையலறைக்குள் சென்று கத்தியால் இடது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2-ந் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது.
- 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனம் நடைபெற்றது.
கோபுர தரிசனத்தை காண சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து 5.30 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7-ம் நாளான வருகிற 2-ந் தேதி காலை தேர் திருவிழாவும், 4-ந் தேதி காலை கோவில் குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு கடைக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- பல்வேறு கோணங்களில் போலீசா்ர விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளக்கரை ஒரு வழிப்பாதை ஆகும். இதனால் இந்த சாலை வழியாக எப்போதும் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பஸ், லாரி என அனைத்து வாகனங்களும் செல்லும். அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று ஆண்குழந்தை வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு கடைக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை நலமாக உள்ளது. பிறந்து 10 நாட்கள் மட்டும் இருக்கும் என்று தெரிகிறது. குழந்தையை வீசி சென்ற பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து இங்கு வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசா்ர விசாரித்து வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- சங்கர் திருமண மண்டபத்தில் இருந்து காரில் புறப்பட்டது முதலே கொலை கும்பலும் அவரை காரில் பின்தொடர்ந்து வந்து உள்ளனர்.
- சங்கர் வந்த கார் மீது மொத்தம் 5 வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளது. இதில் ஒரு பெட்ரோல் குண்டும் இருந்தது.
பூந்தமல்லி:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்த வர் பி.பி.ஜி. சங்கர் (வயது42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பா.ஜ.க.வில் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் சங்கர் கொளத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு காரில் தனியாக திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
நசரத்பேட்டை சிக்னல் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது சங்கர் வந்த காரை பின்தொடர்ந்து வந்த மேலும் 2 காரில் வந்தவர்கள் வழிமறித்தனர்.
திடீரென அதில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம கும்பல் சங்கரின் கார் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசினர். இதில் காரின் முன்பகுதி கண்ணாடி உடைந்து நொறுங்கியது. காரும் பலத்த சேதம் அடைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் உயிர் தப்பிக்க காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம், கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் தாங்கள் வந்த காரிலேயே அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக சங்கர் தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சங்கர் வழக்கமாக காரில் டிரைவருடன் வருவது வழக்கம். மேலும் காரின் முன்பகுதி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வார். நேற்று இரவு சங்கர் டிரைவர் இல்லாமல் காரை ஓட்டி வந்து உள்ளார். இதனை அறியாமல் கொலைகும்பல் முதலில் காரின் முன்பகுதி இருக்கை அருகே வெடிகுண்டை வீசி உள்ளனர். இதில் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு குண்டு வெடித்து சிதறியது.
இதில் காயமின்றி தப்பிய சங்கர் கொலைகும்பலிடம் இருந்து தப்பிக்க பாதுகாப்புக்காக காரில் வைத்திருந்த சிறிய கத்தியை கையில் வைத்துக்கொண்டு சாலையில் இறங்கி ஓடி உள்ளார். எனினும் மர்ம கும்பல் அவரை தீர்த்து கட்டி விட்டனர்.
சங்கர் வந்த கார் மீது மொத்தம் 5 வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளது. இதில் ஒரு பெட்ரோல் குண்டும் இருந்தது. கொலை நடந்த இடம் அருகே திருமண மண்டபம் உள்ளது. இதனால் வெடிச்சத்தம் கேட்ட அங்கிருந்த மக்கள் திருமண மண்டபத்தில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் வெடிப்பதாக நினைத்து உள்ளனர். சிறிது நேரத்துக்கு பின்னரே வெடிகுண்டு வீசி சங்கர் கொலை செய்யப்பட்ட தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது.
சங்கர் திருமண மண்டபத்தில் இருந்து காரில் புறப்பட்டது முதலே கொலை கும்பலும் அவரை காரில் பின்தொடர்ந்து வந்து உள்ளனர். அவரை நன்கு திட்டமிட்டு கொடூ ரமாக கொலை செய்து விட்டனர்.
கொலையுண்ட சங்கர் மீது 3 கொலை வழக்கு, கொலை முயற்சி உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபரான பி.பி.ஜி. குமரனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பி.பி.ஜி. குமரன் கொலை செய்யப்பட்ட அதே பாணியிலேயே பி.பி.ஜி.சங்கரும் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
பி.பி.ஜி குமரன் படுகொலை வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவரை பழிவாங்கும் நோக்கில் பி.பி.ஜி சங்கர் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரவுடி தரப்பினர் முந்திக்கொண்டு சங்கரை தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அந்த ரவுடியை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் பி.பி.ஜி குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனான மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சங்கர் இருந்தார். எனவே இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சங்கர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சா லைகளில் உதிரிபா கங்கள் கழிவுகளை வாங்கி விற்பது மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து உள்ளார். தொழில்போட்டி யில் தீர்த்துகட்டப்பட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.
கடந்த மாதம் வளர்புரம் பகுதியில் சிலர் நாட்டு வெடிகுண்டு களை வீசி பயிற்சி எடுப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.அந்த தரப்பினர் சங்கரை கொலை செய்தனரா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் கோர்ட்டில் சரண் அடைவதை தடுக்கும் வகையில் பூந்தமல்லி, தாம்பரம், செங்கல்பட்டு, அம்பத்தூர் பகுதியில் உள்ள நீதிமன்ற பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கொலையாளிகள் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்ற முழுவிபரம் தெரியவரும்.
பா.ஜனதா பிரமுகர் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர்(வயது35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
- மின் வயர் திருட்டில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் சித்தம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே கீழானூர் துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு துணை நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார வயர்கள் திருடு போனது.மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உயர் அழுத்த மின் வயர்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும். இந்நிலையில்,நேற்று வெங்கல் காவல் நிலைய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்பொழுது மின் வயர் திருட்டு சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர்(வயது35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, அவரை போலீசார் பிடித்து வந்து வெங்கல் காவல் நிலையத்தில் துருவி,துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அலெக்ஸ்,தனது நண்பர்களான ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(வயது25),எழிலரசன் என்ற சுனில்(வயது21), பிரவீன் குமார்(வயது33), சித்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பரத்குமார்(வயது20),முகேஷ்குமார்(வயது24) என மொத்தம் ஆறு பேர் மின் வயர்களை திருடியதை ஒப்புக்கொண்டார். எனவே, அவர் கொடுத்த தகவலின் படி ரூ 15 லட்சம் மதிப்பிலான மூனேகால் டன் அலுமினிய மின்சார வயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் அனைவரையும் நேற்று இரவு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மின் வயர் திருட்டில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் சித்தம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மூன்று இடங்களில் திருவள்ளூர் எம்.பி. மேம்பாட்டு நிதியில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க தீர்மானம்
- மர்ம நபர்கள் அவதூறு நோட்டீஸ் விநியோகித்ததை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி மன்ற கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வக்கீல் கே.சுகுமார், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள் ரகுமான்கான், முனுசாமி, சதீஷ் குமார், சந்தானலட்சுமி குணபூபதி, பொன்னரசி, சுகன்யா, அருணா ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மர்ம நபர்கள் அவதூறு நோட்டீஸ் விநியோகித்ததை கண்டித்தும் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் முருகவேல் வாசித்தார். இக்கூட்டத்தில், அத்திக்குளம் தெருவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலும், புதிய இருளர் காலனியிலும், பஜார் தெருவில்-சன்னதி தெரு சந்திப்பிலும் என மூன்று இடங்களில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் 10-வது வார்டு கவுன்சிலர் டி.கண்ணதாசன் நன்றி கூறினார்.
- பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
- மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமான சாய்தளத்துடன் கூடிய கழிப்பிடம் திறக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா முன்னிலை வகித்தார். பள்ளியின் மேலாண்மை குழு பிரதிநிதி குரு சாலமோன் அனைவரையும் வரவேற்றார். கழிப்பிட கட்டிடத்தை பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கின்ற மாற்றுத்திறனாளி மாணவன் சந்தோஷ் ரிப்பன் வெட்டி திறந்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர், 5வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி தன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமதி ராஜேஷ், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- பனை மரத்தின் மையப்பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட கிளைகள் பிரிந்து காணப்படுகின்றன.
- தோட்டத்திற்கு வருபவர்கள் பனைமரத்தை அதிசயமாக பார்த்து செல்வதாக அகிலன் தெரிவித்தார்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த பழைய எருமை வெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலன் (54), விவசாயி. இவருடைய 7 ஏக்கர் நிலத்தில் 400 பனை மரம், தென்னை மரம் வளர்த்து பாதுகாத்து வருகிறார். இவரது தோட்டத்தில் 25க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அதிசயமான பனை மரம் ஒன்று காணப்படுகிறது. இந்த பனை மரத்தின் உச்சியில் 25க்கும் மேற்பட்ட கிளைகள் பிரிந்து காணப்படுகின்றன.
இந்த பனை மரத்திற்கு பத்திரகாளி பனை மரம் எனவும், கும்பிடு பனைமரம் எனவும் பெயர் சூட்டி தோட்டத்திற்கு செல்லும்போது வணங்கி விட்டு செல்வதாக கூறுகிறார் அகிலன். 25 கிளைகள் கொண்ட பனை மரம் அரிதாக காணப்படுவதாகவும், தனது தோட்டத்திற்கு வருபவர்கள் இந்த பனை மரத்தை அதிசயமாக பார்த்து செல்வதாகவும் தெரிவித்தார்.






