என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது
    X

    கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது

    • தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள புட்டிரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தர்மய்யா. கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தர்மய்யா தனது குடும்பத்துடன் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த தர்மய்யாவிடம் அக்கா நிர்மலா மனைவி எங்கே என்று கேட்டார். அப்போது மனைவியை அடித்து கொலை செய்து மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக போதையில் கூறி உள்ளார்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதிரிவேடு மாந்தோப்பு பகுதியில் தோண்டிப்பார்த்தபோது அழுகிய நிலையில் பெண் பிணம் இருப்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அது தர்மய்யாவின் மனைவி லட்சுமி என்பது தெரிய வந்தது. மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தர்மய்யாவை தேடிவந்தனர். அவர் ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரயா சக்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்து சென்று அவரை தேடி வந்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து பாதிரிவேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×