search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி அலுவலக ஊழியர்களை மிரட்டிய பெண் கைது
    X

    சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி அலுவலக ஊழியர்களை மிரட்டிய பெண் கைது

    • சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.
    • புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளயம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 100 சதவீத சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.

    கடந்த 19-ந்தேதி ஆரணி அத்திக்குளம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த, ஆரணி அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகலட்சுமி (வயது37) என்பவரது வீட்டில் ரூ.500 சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களிடம் நாகலட்சுமி பேரூராட்சி சார்பாக என்ன வசதியை இப்பகுதிக்கு செய்தீர்கள் என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் நாகலட்சுமி மீது ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில், புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மகளிர் காவலர் சுமித்ரா ஆகியோர் தலைமையில் போலீசார் நாகலட்சுமியை பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×