என் மலர்
திருப்பூர்
- இந்திய அளவில் இருந்து ஜவுளித்துறை தொடர்பான தொழில் நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கிறார்கள்.
- இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பையர்கள் பார்வையிட இருக்கிறார்கள்
திருப்பூர் :
இந்திய அளவில் ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்களை உலக அளவில் உள்ள வர்த்தகர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வர்த்தக விரிவாக்கத்துக்காகவும் பாரத் டெக்ஸ் என்ற தலைப்பில் உலக அளவிலான ஜவுளித்துறை கண்காட்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவில் இருந்து ஜவுளித்துறை தொடர்பான தொழில் நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து 2 ஆயிரம் தொழில்முனைவோர் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். தமிழக ஜவுளித்துறை சார்பில் இதற்காக ஜவுளி தொழில்துறையினர் சந்திப்பு கூட்டம் கோவையில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. தமிழக ஜவுளித்துறை அமைச்சர் காந்தி பங்கேற்றார். மத்திய ஜவுளித்துறை இணை செயலாளர் ராஜீவ் சக்சேனா பங்கேற்று பாரத் டெக்ஸ் ஜவுளித்துறை கண்காட்சி குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம், இளங்கோ, ஆனந்த், செந்தில்குமார், ரத்தினசாமி, திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
பாரத் டெக்ஸ் ஜவுளித்துறை கண்காட்சி முதன்முறையாக மத்திய அரசு சார்பில் டெல்லியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற இருக்கிறது. இந்திய அளவில் ஜவுளித்துறை தொடர்பான தொழில்துறையினர் கண்காட்சியில் அரங்குகளை அமைக்கிறார்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 ஏற்றுமதியாளர்கள் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்க இருக்கிறோம்.
இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பையர்கள் பார்வையிட இருக்கிறார்கள். இதன் மூலமாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஆடைகளை காட்சிப்படுத்தும்போது அவற்றை பையர்கள் பார்வையிட்டு திருப்பூரின் வளம்குன்றா உற்பத்தி உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறும்போது ஆர்டர்களை பெற வசதியாகும். திருப்பூருக்கான பிராண்ட் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று நாம் கண்காட்சியில் அரங்குகளை அமைத்து பையர்களை சந்திப்பதை விட, ஒரே இடத்தில் பையர்கள் வந்து பார்வையிட வசதியாக அமையும்.
பாரத் டெக்ஸ் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த கண்காட்சி ஜவுளித்துறை வரலாற்றில் திருப்பு முனையாக அமையும். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பெரிய வாய்ப்பாக அமையும். நூல், காடா துணி உற்பத்தி ஒரே இடத்தில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
- கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.
- வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமா கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது. தொடர்ந்து அங்கிருந்த வாகனங்களும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கல்குவாரியில் வேலை பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த லட்சுமி என்பவர் சமையல் செய்யும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்ததாக கூறப்பட்டது. இதில் லட்சுமி மற்றும் பக்கத்து குடியிருப்பில் இருந்த மேலும் 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கல்குவாரி உரிமம் காலாவதியான நிலையில் அங்கு வேலை செய்ய அனுமதித்ததாக அதன் உரிமையாளர்கள் விஜயலட்சுமி, சண்முகசுந்தரம், ஜெயபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களான கார்த்தி (வயது 32), சக்திவேல் முருகன் (வயது 43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை தாங்கினார்.
- சங்கரய்யா உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, இரங்கல் உரையாற்றினர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் அனைத்து கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான மறைந்த என்.சங்கரய்யாவுக்கு அஞ்சலி கூட்டமும், இரங்கல் ஊர்வலமும் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை தாங்கினார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், திராவிட முன்னேற்ற கழக தெற்கு ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, சி.பி.ஐ. தாலுகா செயலாளர் வி.ஏ.சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.சுந்தர்ராஜு, அ.தி.மு.க. நகர செயலாளர் வி.கே.சின்னசாமி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் எம்.சி.எஸ்.மனோஜ்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் கலந்து சங்கரய்யா உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, இரங்கல் உரையாற்றினர். இதில் தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
- வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார்
- சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பு படுத்திருந்ததாக தெரிகிறது
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 29) என்பவர் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அதில் தங்கி கொண்டு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சந்திரகுமார், அளவுக்கு மீறி மது குடித்துவிட்டு, சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பு படுத்திருந்ததாக தெரிகிறது. பின்னர் அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது சந்திரகுமார் தான் படுத்திருந்த திண்ணையில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில் சந்திரகுமார் மூச்சு பேச்சு இன்றி கிடந்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துள்ளது தெரிய வந்தது. அளவுக்கு மீறி மது குடித்து விட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1069 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகம் பின்புறம் கலால் பிரிவு வட்டாட்சியர் ராகவி முன்னிலையில் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் கென்னடி தலைமையிலான காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர். அழிக்கப்பட்ட மது பாட்டில்களில் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது.
- வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது.
திருப்பூர் :
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ளது எஸ்.ஆர்.சி. மில். தற்போது எஸ்.ஆர்.சி. மில்லில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சாலையில் திருப்பூரில் இருந்து சென்னை, சேலம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு ஊத்துக்குளி வழியாக செல்லும் ஏராளமான பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்பட இரு சக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து மிகுதியான பகுதியாகும். இப்படிப்பட்ட நிலையில் இந்த பாலத்தின் அடியில் உள்ள சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இந்த பள்ளத்தின் தார் சாலை, வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது. இதனை அறியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வந்து, அந்த பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். இதனால் உடலில் சீராய்ப்பு, ரத்த காயம் ஏற்படுகிறது. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அந்த சாலையின் பள்ளத்தில் விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மழை காலத்தில் அந்த இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மேலும் அதிக அளவில் விபத்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் அறிவுரைப்படி திருப்பூர் மாவட்டத்தில்27.10.2023 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது .
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் அதிகளவில் 18+ இளம் வாக்காளர்களை சேர்க்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியத்தின் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பங்கள் பெறும் காலம் 9.12.2023 உடன் முடிவடைய உள்ளதால் வாக்காளர்பட்டியலில் பெயர் இடம் பெறாத 18+ நபர்கள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் ெபயர் சேர்ப்பதற்கான படிவம் 6 யினை நேரிலோ அல்லது இணைய தளம் வாயிலாகவோ அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.
- வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது
திருப்பூர் :
அஞ்சல் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் நேரத்துக்கு கிடைக்க செய்ய தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.
அவ்வகையில் திருப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டு விடுகிறது. இரவு 7 மணி வரை பணம் செலுத்த, பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தபால் பரிவர்த்தனைகளும் இரவு வரை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர தபால் துறை மூலம் வழங்கப்படும் சேவை மற்றும் செயல்பாடுகளை வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர் தபால் அலுவலகத்தில் ஏதேனும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு 0421 2206849 என்ற எண்ணில் தபால் அலுவலரை அழைக்கலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் எதிர்முனையில் பேசுபவர்கள் தபால் அலுவலகம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றனர்.
- இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தற்போது தயாராகி வருகிறார்கள்.
- விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது
முத்தூர் :
தமிழ்நாடு அரசு விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் மாவட்டம் முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், பரஞ்சேர்வழி, மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர், நஞ்சை சம்பா நெல் மற்றும் காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பகுதி விவசாயிகள் எதிர்வரும் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தற்போது தயாராகி வருகிறார்கள். இதன்படி இப்பகுதி விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது ஆகும். எனவே இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை பருப்புகள் சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது
இதன்படி இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரக்கூடிய நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இப்பகுதி விவசாயிகள் எதிர்வரும் கார்த்திகை மாத பட்டத்தில் தங்கள் வாங்கி விதைக்கும் நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத்திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீண்ட காலமாக பயணிகள் வலியுறுத்தும் ெரயில்கள் கூட இயக்கப்படாமல் உள்ளது.
- உடுமலை சுற்றுப்பகுதி பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை :
திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு கூடுதல் ெரயில் சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து பகுதி மக்களும் இருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக நீண்ட காலமாக பயணிகள் வலியுறுத்தும் ெரயில்கள் கூட இயக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரத்துக்கு ெரயில் சேவையை மீண்டும் செயல்படுத்த உடுமலை சுற்றுப்பகுதி பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து ெரயில் பயணிகள் சார்பில் தெற்கு ெரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் ஆங்கிலேயர் காலத்திலேயே கோவை - ராமேஸ்வரம் ெரயில் இயக்கப்பட்டு அதிகப்படியான மக்கள் அச்சேவையை பயன்படுத்தி வந்தனர். இந்த ெரயிலை தினசரி விரைவு ெரயிலாக கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக உடனடியாக இயக்க வேண்டும்.
சேலம் ெரயில்வே கோட்டம் சார்பில் தெற்கு ெரயில்வேக்கு, ராமேஸ்வரம் தினசரி விரைவு ெரயிலை இயக்குவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆன்மிக பக்தர்கள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ெரயில் மிக பயனுள்ளதாக இருக்கும். திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் பகுதியிலிருந்தும், கோவை - ராமேஸ்வரம் ெரயிலை இயக்க அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும், தெற்கு ெரயில்வேக்கு பல முறை மனு அனுப்பியுள்ளனர். எனவே விரைவில், ராமேஸ்வரம் ெரயிலை இயக்கி பல ஆயிரக்கணக்கான பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
- அரசின் சார்பில் வைப்புத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது
உடுமலை :
பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டமும் உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியும், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், குழந்தைகளின் 3 வயது நிறைவு பெறுவதற்குள் திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லாமலும், பெற்றோருக்கு திருமண வயது நிறைவடைந்து இருப்பதும் அவசியம். இக்குழந்தைகளுக்கு அரசின் சார்பில் வைப்புத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.
தவிர குழந்தைகளின் 6 வயது முதல் 15 வயது வரை, 150 ரூபாய் வட்டியும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது அதற்கான விதிமுறைகளையும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.அதில் பலரும் முழுமையாக விபரங்களை அறியாமல் திட்டத்தில் விண்ணப்பிக்கின்றனர். திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் தருணத்தில் அவர்களுக்கான தொகை வழங்கப்படும். மேலும் 18 வயது நிறைவு பெறாமல் அந்த குழந்தைகள் திருமணம் செய்து கொண்டாலும் திட்டத்தில் பயன்பெற முடியாது.
இது மட்டுமில்லாமல் பயனாளிகளாக உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும்.விண்ணப்பிக்கும் போது விதிமுறைகளை அறிந்து கொண்டும் பலரும் 10-ம் வகுப்பை முடிக்காமல், முதிர்வு தொகைக்கு ஒன்றிய அலுவலகங்களை அணுகுகின்றனர். தகுதி இல்லை என அறிந்து ஏமாற்றமடைகின்றனர்.
இது குறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும். தற்போது அனைத்து விபரங்களும் ஆன்லைனில் பதிவாகிறது. இதனால் திட்டத்துக்கு உரிய சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே ஆன்லைன் பதிவுகள் விண்ணப்பங்களை ஏற்று க்கொள்கின்றன. பயனாளிகள் முழுமையாக விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.திட்டத்தில் விண்ணப்பித்து விட்டு முதிர்வு காலத்தின் போது தேவையான படிப்பில்லாமல் இருப்பதால் பயன்பெறுவதற்கான தகுதியை இழக்கின்றனர். பெண் குழந்தைகள் கட்டாயம் 10-ம் வகுப்பு முடிக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.
- சிந்தாமணி பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 300 சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.
- சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.
அவிநாசி :
அவிநாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலும், சேவூர் ரோட்டில், சிந்தாமணி பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 300 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக நிரந்தர கடை உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம், போலீசாருக்கு மனு அளித்திருந்தனர்.
இதனால் கடந்த வாரத்தில் நிரந்தரக்கடை உரிமையாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள், ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர் ஆகியோரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஞாயிறன்று மூடப்பட்டுள்ள கடைகள் முன் அரசு அலுவலகங்கள் முன் மற்றும் வாரச்சந்தை ஆகிய இடங்களில் கடைகளை அமைத்து கொள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். மனுவை விசாரித்த கலெக்டர் கிறிஸ்துராஜ், சாலையோர வியாபாரிகளுக்கு தனி விற்பனை மண்டலம் அமைத்து கொடுக்கவும், சிறு,குறு கடன் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி (பொறுப்பு) கூறுகையில், அவிநாசியில் சாலையோர கடைகளை முறைப்படுத்துவதற்கான வழிவகை செய்து தருமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.






