search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 PERSONS ARRESTED"

    • கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.
    • வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமா கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது. தொடர்ந்து அங்கிருந்த வாகனங்களும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கல்குவாரியில் வேலை பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த லட்சுமி என்பவர் சமையல் செய்யும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்ததாக கூறப்பட்டது. இதில் லட்சுமி மற்றும் பக்கத்து குடியிருப்பில் இருந்த மேலும் 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கல்குவாரி உரிமம் காலாவதியான நிலையில் அங்கு வேலை செய்ய அனுமதித்ததாக அதன் உரிமையாளர்கள் விஜயலட்சுமி, சண்முகசுந்தரம், ஜெயபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களான கார்த்தி (வயது 32), சக்திவேல் முருகன் (வயது 43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது
    • அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியான எரசக்கநாயக்கனூர் மலை மற்றும் பெருமாள் மலை பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.

    இது குறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கன்னிச்சேர்வைபட்டி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த தங்கம் மகன் சுரேஷ், நாகராஜ் மகன் பிரகாஷ், சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் சிவா, சின்னச்சாமி மகன் ராகுல் ஆகிய 4 பேரும் மானை வேட்டையாடியது தெரிய வந்தது.

    இதையடுத்து வேட்டை கும்பலை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று வாலிபர் புகார் கொடுத்தார்.
    • போலீசார் இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். விவசாயியான இவர் சம்பவத்தன்று மஞ்சனக்கொரையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ஒரு டீக்கடையில் டீ குடித்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், தான் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், தன்னிடம் அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் நீங்கள் ஜாலியாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான விவசாயி, வாலிபரை போலீசில் சிக்க வைக்க நினைத்தார். அவரிடம், தன்னிடம் பணம் இல்லை என்றும், ஏ.டி.எம்.மிற்கு சென்று எடுத்து வருவதாக கூறி விட்டு, நேராக ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

    இதையடுத்து போலீசார், அவர் கூறிய இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 அழகிகள் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான கூடலூர் நந்தட்டியை சேர்ந்த முஸ்தபா(48), கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின் (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • செம்பட்டி அடுத்த புதுகோடங்கிபட்டி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த சின்னாள பட்டியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • விசாரணையில் 2 பேரும் பைக் திருடிதை ஒப்புக்கொண்டதால் போலீசார் கைது செய்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னமுனி யாண்டி. இவர் கடந்த வாரம் செம்பட்டி அடுத்த வத்தலக்குண்டு சாலையில் உள்ள புல்வெட்டி குளம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து சின்னமுனியாண்டி செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செம்பட்டி அடுத்த புதுகோடங்கிபட்டி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த சின்னாள பட்டியைச் சேர்ந்த இள ங்கோவன் மகன்மணி கண்டன் (வயது31), கண்ணன் மகன் பிரகாஷ் (22) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு ப்பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், மணிகண்டன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். பின்னர் அவர்களை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 29 இருசக்கர வாகனங்கள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    திருச்சி:

    மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 30-ந் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனம் திருட்டுபோனது. இதுகுறித்து சரவணன் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனம் பதிவு எண் அகற்றப்பட்டு நிற்பதை, சரவணன் கண்டார். அந்த வாகனத்தை ஓட்டி வந்த குமரபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் விசாரித்தபோது, அந்த வாகனத்தை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், வாகனத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட வந்ததாகவும் கூறியுள்ளார்.

    இது பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்த சரவணன், செல்வத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், முருகேசனை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு 29 இருசக்கர வாகனங்கள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து முருகேசனை பிடித்து போலீசார் விசாரித்தபோது, இருசக்கர வாகனங்களை வட்டிக்கு அடகு வாங்கும் தொழில் செய்து வருவதாகவும், அங்கு நிற்கும் வாகனங்களை அடகு வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அதன் உரிமையாளர்களை கண்டறிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், செல்வம் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    • அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கார்குடி காலனி தெருவை சேர்ந்த பரமசிவம்(வயது 55), காசிநாதன்(53) ஆகியோரை தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், தா.பழூர் -சுத்தமல்லி சாலையில் இருந்து கார்குடி பிரிவு சாலையில் வந்தபோது, அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    அந்த வண்டிகளை ஓட்டி வந்தவர்களிடம் விசாரித்தபோது, அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து தா.பழூர் போலீசில், கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கார்குடி காலனி தெருவை சேர்ந்த பரமசிவம்(வயது 55), காசிநாதன்(53) ஆகியோரை தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.

    ×