search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே  கல்குவாரியில் சிலிண்டர் வெடித்த வழக்கில் 2 பேர் கைது
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே கல்குவாரியில் சிலிண்டர் வெடித்த வழக்கில் 2 பேர் கைது

    • கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.
    • வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமா கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது. தொடர்ந்து அங்கிருந்த வாகனங்களும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கல்குவாரியில் வேலை பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த லட்சுமி என்பவர் சமையல் செய்யும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்ததாக கூறப்பட்டது. இதில் லட்சுமி மற்றும் பக்கத்து குடியிருப்பில் இருந்த மேலும் 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கல்குவாரி உரிமம் காலாவதியான நிலையில் அங்கு வேலை செய்ய அனுமதித்ததாக அதன் உரிமையாளர்கள் விஜயலட்சுமி, சண்முகசுந்தரம், ஜெயபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களான கார்த்தி (வயது 32), சக்திவேல் முருகன் (வயது 43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×