search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் - விதிமுறைகளை பின்பற்றி பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
    X

    கோப்புபடம்

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் - விதிமுறைகளை பின்பற்றி பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

    • பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
    • அரசின் சார்பில் வைப்புத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது

    உடுமலை :

    பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டமும் உள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கியும், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், குழந்தைகளின் 3 வயது நிறைவு பெறுவதற்குள் திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லாமலும், பெற்றோருக்கு திருமண வயது நிறைவடைந்து இருப்பதும் அவசியம். இக்குழந்தைகளுக்கு அரசின் சார்பில் வைப்புத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.

    தவிர குழந்தைகளின் 6 வயது முதல் 15 வயது வரை, 150 ரூபாய் வட்டியும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது அதற்கான விதிமுறைகளையும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.அதில் பலரும் முழுமையாக விபரங்களை அறியாமல் திட்டத்தில் விண்ணப்பிக்கின்றனர். திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் தருணத்தில் அவர்களுக்கான தொகை வழங்கப்படும். மேலும் 18 வயது நிறைவு பெறாமல் அந்த குழந்தைகள் திருமணம் செய்து கொண்டாலும் திட்டத்தில் பயன்பெற முடியாது.

    இது மட்டுமில்லாமல் பயனாளிகளாக உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும்.விண்ணப்பிக்கும் போது விதிமுறைகளை அறிந்து கொண்டும் பலரும் 10-ம் வகுப்பை முடிக்காமல், முதிர்வு தொகைக்கு ஒன்றிய அலுவலகங்களை அணுகுகின்றனர். தகுதி இல்லை என அறிந்து ஏமாற்றமடைகின்றனர்.

    இது குறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும். தற்போது அனைத்து விபரங்களும் ஆன்லைனில் பதிவாகிறது. இதனால் திட்டத்துக்கு உரிய சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே ஆன்லைன் பதிவுகள் விண்ணப்பங்களை ஏற்று க்கொள்கின்றன. பயனாளிகள் முழுமையாக விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.திட்டத்தில் விண்ணப்பித்து விட்டு முதிர்வு காலத்தின் போது தேவையான படிப்பில்லாமல் இருப்பதால் பயன்பெறுவதற்கான தகுதியை இழக்கின்றனர். பெண் குழந்தைகள் கட்டாயம் 10-ம் வகுப்பு முடிக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.

    Next Story
    ×