என் மலர்
திருப்பூர்
- கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்
- சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
திருப்பூர்:
திருப்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 5-வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் இணைச்செயலாளா் ஜெயந்தி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளா் முருகேசன் திட்ட அறிக்கையையும், பொருளாளா் ராஜேஸ்வரி வரவு- செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனா்.இதை தொடா்ந்து, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பள்ளிகளில் அமல்படுத்தும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட தலைவராக ஜெயந்தி, செயலாளராக மாசிலாமணி, பொருளாளராக தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா்களாக விஜயலட்சுமி, தெய்வானை, சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
- முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. இதற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். உடனடியாக அதற்கு தீர்வு காணப்பட்டு இந்த இடத்திலேயே மருத்துவம் பெறக்கூடிய வகையில் ஆரம்ப சுகாதார மையம் அமையவுள்ளது.
அதனைத்தொடர்ந்து சிவன்மலை ஊராட்சியில் விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் மேல்நிலை தொட்டிகள், சாலை வசதிகள் போன்ற எண்ணற்ற பணிகள் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 11 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும் வழங்கினார். இதில் வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, காங்கயம் வட்டார மருத்துவ அலுவலர் முரளி, கீரனூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அய்யனார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
- பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு.நவம்பர்- 2023 ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 571.60 மி.மீ. நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 494.30 மி.மீ ஆகும். சராசரியாக பெய்யவேண்டிய மழையின் அளவை விட 77.30 மி.மீ குறைவு ஆகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.
அதன்படி நெல் 11.03 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 14.74 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 16.57 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.45 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1767 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1218 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,847 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 568 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளதென மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 150 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மா.மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- 20 சர்வதேச நிறுவனங்கள் இத்தொழில் மையங்கள் உருவாக்கிட இணைந்துள்ளன .
- தொழில்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்துறை இன்டஸ்ட்ரி 4.0 தேவைகேற்ப தொழில் நுட்ப மையங்களாக்குதல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தமிழக அரசு டாடா நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் கணினி மயமாக்கப்பட்ட மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் கட்டமைப்புக்காக நவீன தொழில்நுட்ப வசதிகளும் எலக்ட்ரானிக் ரோபோ எந்திரங்களும் கொண்ட தொழில்நுட்ப மையங்கள் திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய 3 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.
டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவன தலைமையின் 20 சர்வதேச நிறுவனங்கள் இத்தொழில் மையங்கள் உருவாக்கிட இணைந்துள்ளன . இத்தொழில் மையங்களில் நீண்ட கால பயிற்சியாக மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன் - ஒரு வருடம், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீசியன் - ஒரு வருடம், அட்வான்ஸ் சிஎன்சி .,மெஷினிங் டெக்னீசியன் - 2 வருடம், பேசிக் டிசைனர் அண்ட் விருச்சுவல் வெரிபையர் (எந்திரவியல்)- 2வருடம், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் - 2 வருடம் ஆகிய 5- பிரிவுகளில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், சி.என்.சி கம்ப்யூட்டர் நியூமரிக் கண்ட்ரோல் மற்றும் மெஷின் சென்டர், இன்டர்நெட் ஆப் திங்ஸ், மேனு பாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், ப்ராடக்ட் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் அண்ட் ப்ராடக்ட் வெரிபிகேஷன் அனாலிஷிஸ், எலக்ட்ரிக் வெகிகிள், அட்வான்ஸ் பெயிண்டிங், அட்வான்ஸ் பிளம்பிங், ஆடிட்டிவ் மேனு பாக்சரிங் என 9 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கே நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களின் வாயிலாக 23 பிரிவுகளில் குறுகியகால பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. குறுகிய கால பயிற்சியில் ஐடிஐ., டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்து தங்களது திறன்களை மேம்படுத்த விரும்புபவர் பயிற்சிகளை இலவசமாக பெற்று தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ள வாய்ப்பாக இருக்கும்.இதுபோன்றே சிறு மற்றும் குறுந்தொழில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தவும் மற்றும் தொழிற்சாலைகளில் புதிதாக பணியில் சேரும் நபர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திட இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுஅதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம் ராமலிங்கம், தொழில்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூர்:
வடக்கு மத்திய ெரயில்வேக்கு உட்பட்ட ஆக்ரா - மதுரா வழித்தடத்தில் யார்டு மறுவடிவமைப்பு பணி நடக்கிறது.இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
8 ெரயில்கள் வழித்தடம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் (எண்:12645) 2024 ஜனவரி 6, 13, 20, 27 மற்றும், பிப்ரவரி 3 ந்தேதி, மறுமார்க்கமாக நிஜாமுதீன் - எர்ணாகுளம் ெரயில் (எண்:12646) ஜனவரி 9, 16, 23, 30 பிப்ரவரி 6ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
வைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318) ஜனவரி 15, 22, 29, பிப்ரவரி 5-ந் தேதியும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி - கட்ரா ெரயில் (எண்:16317) ஜனவரி 12, 19, 26, பிப்ரவரி 2-ந் தேதி முழுவதும் ரத்தாகிறது.
கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) 2024 ஜனவரி 21, 28ந்தேதி, மறுமார்க்கமாக கோவை வருகையில் ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம் - புதுடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) ஜனவரி 27, பிப்ரவரி 3-ந்தேதி ரத்தாகிறது. திருவனந்தபுரம் திரும்பும் ெரயில் (எண்:12626) ஜனவரி 29, பிப்ரவரி 5-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.இத்துடன் சென்னை, மதுரை, நெல்லையில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் 38 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
- சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூரில் குறிப்பாக வடக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் கோவை காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கைப்படி, இந்த வாரம் திருப்பூரில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சம் 31 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 100 சதவீதம், மாலை நேரம், 92 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால் போதியளவு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் நீர்பாசனம் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலமாக இருப்பதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த வெப்ப நிலையில் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதிய கதகதப்பு ஏற்படுத்துவதுடன் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூரில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது.
- ராஜபாளையம் உமாசங்கரின் இசையெனும் இறைமை சொற்பொழிவு நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில், 64ம் ஆண்டு மண்டலபூஜை விழா தொடங்கி உள்ளது. வருகிற 1-ந்ேததி கொடியேற்றம், கணபதி ேஹாமம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 6-ந்தேதி பவானி கூடுதுறையில் ஆராட்டு விழாவும், அன்று மாலை, திருப்பூரில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது.மண்டலாபிேஷக பூஜையை முன்னிட்டு தினமும் மாலை 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று கோவை உமாமகேஸ்வரியின் தாயுமான தலைவன் என்ற பக்தி சொற்பொழிவு. நாளை 26-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் ரவிக்குமாரின், எரிகிற கற்பூரம் ஆவேனோ பக்தி சொற்பொழிவு, 27-ந்தேதி, பட்டிமன்ற பேச்சாளர் ஐஸ்வர்யாவின் எண்ணிய முடிதல் வேண்டும் சொற்பொழிவு, 28-ந்தேதி உழவன் பக்தி இன்னிசை குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
29-ந்தேதி திருப்பூர் ஸ்ரீசத்திய சாய் சமிதியின் பஜனை பாடல்கள், 30-ந்தேதி நட்டுவனார் கார்த்திகை பிள்ளையின் இறைவன் செவிமடுத்த செந்தமிழ் வேதம் சொற்பொழிவு, டிசம்பர் 7-ந்தேதி சுண்டமேடு சபரி சாஸ்தா குழுவினரின் அய்யப்பன் பஜானமிர்தம், 10 -ந்தேதி ஸ்ரீகாவியா நிர்த்ராலயாவின் பரதநாட்டியம் நடக்கிறது. 11ந்தேதி கொங்கு தென்றல் மஞ்சுநாதன் சொற்பொழிவு, 12ந்தேதி சங்கரநாராயணனின் நால்வர் போற்றிய நன்னெறி பக்தி சொற்பொழிவு , 13 -ந்தேதி சங்கரநாராயணனின் ஆன்மிக வளர்ச்சிக்கு பெருந்துணை புரிவது பக்தியா? தொண்டா? பட்டிமன்றம் நடக்கிறது.
14-ந்தேதி கோவை கவிதாவின் பக்தியோகமே வெற்றியோகம் சொற்பொழிவு, 15-ந்தேதி டி.கே.சி., கல்சுரல் நிகழ்ச்சி, 16ந்தேதி உடுக்கைபாட்டு அய்யப்பன் சரித்திரம் நிகழ்ச்சி நடக்கிறது.19-ந்தேதி வையத்துள் நல்வாழ்வு வாழ பெரிதும் தேவை, அருட்செல்வமா? பொருட்செல்வமா? என்ற பட்டிமன்றம், 21-ந்தேதி பேராசிரியர் தங்க ரவிசங்கரின் அன்பெனும் பிடியுள் சொற்பொழிவு, 22-ந்தேதி ராஜபாளையம் உமாசங்கரின் இசையெனும் இறைமை சொற்பொழிவு நடக்கிறது.
24-ந்தேதி சிங்காரவேலு பட்டிமன்றம், 25-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் புவனேஷ்வரியின் இதயம் என்றும் உனக்காக சொற்பொழிவு, 26-ந்தேதி திமிரி சதாசிவத்தின், வேலை வணங்குவதே வேலை ஆன்மிக சொற்பொழிவு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
- 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.
திருப்பூர்:
தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், காடா துணி விற்பனை சரிவடைந்துள்ளது. அண்டை நாடுகளுடன் போட்டி போட இயலாத நிலையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு துணி உற்பத்தி முடங்கியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 5-ந்தேதி முதல் இன்று 25ந் தேதி வரை முழு உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி நிறுத்தம் இன்றுடன் நிறைவடைய உள்ள சூழலில் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
இக்கட்டான சூழல் காரணமாக, உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வை வாபஸ் பெறும் என எதிர்பார்த்தோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 20 நாட்களாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இதனால் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. தொழிலாளர்கள் இன்னும் முழுமையாக பணிக்கு திரும்பவில்லை. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் மீண்டும் கலந்து ஆலோசித்து, விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.
- அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சார்பில் கோவில்வழியில் புதிய பஸ் நிலையம் கட்டப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 3- வது பஸ் நிலையமாக அமையும் இந்த பஸ் நிலையம் 26 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. திருப்பூருக்கு தாராபுரம் வழியாக வந்து செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் வந்து திரும்பும் வகையில் பிரதான வளாகம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய வளாகம் ஆகிய பிரிவுகளாக கட்டப்படுகிறது. இதில் மேற்கு வளாகத்தில், 8 பஸ் ரேக்குகள், 15 கடைகள், காத்திருப்பு அறை, போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.
முதல் தளத்தில் பொருள் பாதுகாப்பு அறை, அறிவிப்பு மையம், கேமரா பதிவு கண்காணிப்பு அறை, நிர்வாக அலுவலகம், ஊழியர் அறை ஆகியன அமையவுள்ளது. தெற்கு வளாகத்தில் 15 பஸ்கள் நிற்கும் வகையிலான ரேக்குகள் மற்றும் 11 கடைகள் அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறை, ஏ.டி.எம்., அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்டவை அமைகிறது. மேற்கு பகுதியில் அமையும் வளாகம் 5 பஸ் ரேக்குகள் , ஊழியர்கள் அறை மற்றும் சுகாதார பிரிவு அலுவலகம் ஆகியவற்றுடன் கட்டப்படுகிறது. மைய வளாகம் 14 பஸ் ரேக்குகள், 10 கடைகள், நேரக்காப்பாளர் அறை ஆகியவற்றுடன் அமைகிறது.
மேலும் அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது. இவற்றுடன் இரு சக்கர வாகன பார்க்கிங் வளாகமும் இங்கு அமையவுள்ளது. இதையடுத்து பூமி பூஜை நடத்தி பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது. தற்போது இதில் முதல் கட்டமாக மத்திய வளாகம் கட்டுமானம் பெருமளவு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள பஸ் நிலையம் செயல்பாடு பாதிக்காத வகையில், ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
- மூலப்பொருட்கள் கிடைப்பதில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
- சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு தனலட்சுமி தியேட்டர் பின்புறம் பி.கே.ஜி., லே அவுட்டில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்துக்கு (டிப்மா) விற்பனை மையத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. டிப்மா சங்க தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் டிப்மா சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது:-
பாலிபேக் உற்பத்தி மூலப்பொருட்கள் கிடைப்பதில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை போக்கும் வகையில், டிப்மாவின் மூலப்பொருள் விற்பனை மையமும் புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ளது. பாலிபேக்கில் பிரிண்டிங் செய்வதற்கான இங்க் ரகங்கள், ரெடியூசர் உள்பட அனைத்து உதிரி பொருட்களும், மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும். பாலிபேக் நிறுவனங்களுக்கு விரைவாகவும், தட்டுப்பாடு இன்றி சீரான விலைக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதன் மூலம் நிறுவனங்களின் உற்பத்தி மேம்படும்.தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் டிப்மா சங்கம் உறுப்பினராக இணைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- கிராமப்புற இளைஞர்கள் மற்றும் காளான் வளர்ப்பவர்கள் பங்கேற்கலாம்.
- பயிற்சி வகுப்பு வருகிற 27-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது:- பொங்கலூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வித்து உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 27-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் காளான் வளர்ப்பவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியில், தாய்க்காளான் வித்து, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காளான் வித்து உற்பத்தி செய்வது குறித்து செயல் விளக்கப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த இரு நாள் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 25ம் தேதிக்குள் (இன்று 04255 296155 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்யலாம். கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 63794 65045 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- அட்சதை அரிசியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.
- பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 24-ந்தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேக விழாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில் அட்சத பூஜை பிரமாண்டமாக நடந்தது. அதில் நாடு முழுவதும் உள்ள அதன் 45 பிரிவுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பங்கேற்றனர். பூஜையின் நிறைவில், அட்சதை அரிசி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தடைந்த அட்சதை அரிசியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் பெற்று கொண்டனர். தொடர்ந்து, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து இந்து குடும்பங்களுக்கு வழங்க உள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பகுதி விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூறியதாவது:-
மாநிலம் வாரியாக ராமர் கோவில் அட்சதை நிர்வாகிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. திருப்பூருக்கு வந்துள்ள அட்சதை அரிசியை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து இந்து குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் அட்சதையுடன் அரிசி கலக்கப்பட உள்ளது. பின் சிறிய பாக்கெட்டில் பேக் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து அட்சதை மற்றும் ஸ்ரீராமர் படத்துடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






