search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cereals - Seeds"

    • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
    • பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    திருப்பூர்: 

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு.நவம்பர்- 2023 ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 571.60 மி.மீ. நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 494.30 மி.மீ ஆகும். சராசரியாக பெய்யவேண்டிய மழையின் அளவை விட 77.30 மி.மீ குறைவு ஆகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 11.03 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 14.74 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 16.57 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.45 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1767 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1218 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,847 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 568 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளதென மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 150 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மா.மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×