காலை உணவு திட்டப்பணிகளை சத்துணவு ஊழியா்களிடம் வழங்க கோரிக்கை

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 5-வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் இணைச்செயலாளா் ஜெயந்தி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளா் முருகேசன் திட்ட அறிக்கையையும், பொருளாளா் ராஜேஸ்வரி வரவு- செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனா்.இதை தொடா்ந்து, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பள்ளிகளில் அமல்படுத்தும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட தலைவராக ஜெயந்தி, செயலாளராக மாசிலாமணி, பொருளாளராக தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா்களாக விஜயலட்சுமி, தெய்வானை, சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com