என் மலர்
திருப்பூர்
- அதேவேளையில் காப்பீட்டுத் திட்ட வசதி இல்லாதோருக்கும் இதே வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
- இருதயப் பிரச்னை உள்ள பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.
திருப்பூர்:
திருப்பூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இதுகுறித்து காமன் இன்டியன்ஸ் தொண்டு நிறுவனத்தின் திருப்பூா் பிரிவு நிா்வாகிகள் கூறியதாவது:-
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு 'இதயம் காப்போம்' என்ற குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை, ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்களை நடத்தத் தொடங்கினோம்.
தற்போது 12 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள வித்யா மந்திா் பள்ளியில் அக்டோபா் 8 -ந் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், இருதயப் பிரச்னை உள்ள பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.
அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் எக்கோ காா்டியோகிராம் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குவா். தேவைப்படுபவா்களுக்கு தமிழ்நாடு அரசு காப்பீட்டுத்திட்டம் மற்றும் எங்களது அமைப்பின் பங்களிப்புடன் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.அதேவேளையில் காப்பீட்டுத் திட்ட வசதி இல்லாதோருக்கும் இதே வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 'இதயம் காப்போம்' இலவச இருதய சிகிச்சை முகாம் மூலம் 380 குழந்தைகளின் உயிா் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.
- 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது.
- போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்
திருப்பூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான மாரத்தான் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த மாரத்தான் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு வருகிற 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது. சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு எஸ்.கே.எம். மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடிக்கப்படும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம், சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடியும்.
25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் போட்டி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு இ.பி. அலுவலகம் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன் முடியும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம் சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று சிக்கண்ணா அரசு கல்லூரிக்கு முன் முடிவடையும்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக 2 ஆயிரம், 4 முதல் 10 வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களின் நகல் மற்றும் அசல் மருத்துவ சான்று ஆகியவற்றை சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் போட்டி நடக்கும் இடத்தில் அளிக்கலாம். அதன்பிறகே தனி எண் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
- 11-ந் தேதி உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்துகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்துகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை)காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்திலும், 9-ந் தேதி திருப்பூர் அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 10-ந் தேதி தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ந் தேதி உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுபோல் 12-ந் தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 13-ந் தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 16-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வளமையத்திலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 18-ந் தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந் தேதி பொங்கலூர் பி.யு.வி.என். தொடக்கப்பள்ளியிலும், 26-ந் தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 31-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது. ஒன்றிய அளவில் முகாம் நடைபெற உள்ளதால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நாளை முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் முகாம் நடைபெறும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருப்பூர் கோட்டம் சந்தைபேட்டை துணை மின் நிலையப்பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பல்லடம் ரோடு, காமராஜ் ரோடு, எம்.ஜி.புதூர், குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
- தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.
திருப்பூர்:
கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரம் - மங்களூர் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளன.சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
ெரயில் எண் (06049) தாம்பரம் - மங்களூர் சிறப்பு ெரயில் வரும் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.
ெரயில் எண் (06050) மங்களூர் - தாம்பரம் சிறப்பு ெரயில் மங்களூருவில் இருந்து 7, 14, 21 மற்றும் 28 ம் தேதிகளில் மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.நிறுத்தங்கள்: சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பையனூர் மற்றும் காசர்கோடு வரை செல்லும்.
- கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.
- போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பனியன் தொழிலைச் சாா்ந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும். மேலும், தொழிலாளா்களுக்கான 4 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி பெறுவார்கள்
- 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த மாணவர்களுக்கு டிசிஎஸ்-லான் மற்றும் அப்போலோமெட்ஸ்கில்ஸ் எனப்படும் செவிலியர் பயிற்சி இணைந்து வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற 2021,2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அப்போலோமெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும்.
இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி பெறுவார்கள். இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும்.முதல் 2 வாரங்களில் இணைய வழிகற்றல் முறையிலும் அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும், பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501 (ம) 503, 5 வது தளம்,மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604. 94450 29552, 0421-2971112 என்ற முகவரி, செல்போன், தொலைபேசி எண்களை அணுகலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- வருகிற 15-ந் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் வருகிறார்.
- கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நட்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்
காங்கயம்:
காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் காங்கயம் சென்னிமலை சாலை என்.எஸ்.என்.அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி "வாக்குச்சாவடிகளில் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும், வருகிற 15-ந் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் வருகின்ற காரணத்தினால் முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் பேசினார். கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நட்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன், திருப்பூர் மாநகர மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார்,
மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் மணி, குண்டடம் ஒன்றிய செயலாளர் எம்.பி.சண்முகசுந்தரம், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், சென்னிமலை பேரூர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் அணி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாக கடமையாகும்.
உடுமலை:
வன உயிரின வார விழாவையொட்டி திருப்பூர் வனக்கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகள் மத்தியில் கணேஷ் ராம் பேசியதாவது:- திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பஞ்சலிங்க அருவியானது 20. 49 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் சோலை காடுகளில் உற்பத்தியாகி கிளை ஓடைகளுடன் கலந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்தி மலை வந்தடைந்து மக்களின் தண்ணீர் தேவை களை பூர்த்தி செய்கிறது. மனித குலத்திற்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்ற சோலை காடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும்.
மேலும் தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்கள் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம், ஓசோன் படலம் சேதம் அடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களை தோல் நோய் மற்றும் இதர நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. இது போன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்களே எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாக கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உடுமலை வனவர் சிவகுமார் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கோழிக் கடைகாரருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு மட்டும் கடை சீல் வைக்கப்பட்டது
- கோழிக்கழிவுகளை, குப்பைகளை கொட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் கோழிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் கோழிக்கழிவுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து பரப்பு மேடு என்ற இடத்தில் கொட்டச் சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பிடித்து நகராட்சி சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி நிர்வாகத்தினரால் கோழிக் கடைகாரருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு மட்டும் கடை சீல் வைக்கப்பட்டது.
வெள்ளகோவில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கடை, வீடுகளுக்கு நேரில் வந்து குப்பை மற்றும் கோழி கழிவுகளை பெற்றுச் செல்கின்றனர். இதை மீறி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கோழிக்கழிவுகளை, குப்பைகளை கொட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் என்பவர் அந்த விவசாயியை காலால் எட்டி உதைத்த சம்பவம் ஜனநாயக விரோத செயல்.
- இது போன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் அந்த ஊராட்சி செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம் ஊராட்சி. இங்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி அம்மையப்பன் என்பவர் பேசி கொண்டு இருந்தபோது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் என்பவர் அவரை காலால் எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிராம சபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்டதற்கு உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம்,பிள்ளையார் குளம் ஊராட்சி, கங்கா குலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி அம்மையப்பன் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் என்பவர் அந்த விவசாயியை காலால் எட்டி உதைத்த சம்பவம் ஜனநாயக விரோத செயல்.
இது மொத்த விவசாயிகளையும் அவமதிக்கின்ற செயலாகவே கருதப்படுகிறது. கிராம சபை கூட்டம் என்பது மக்கள் கேள்வி கேட்பதற்கே என்பது கூட தெரியாமல் ஒரு அரசு ஊழியர் இருப்பதா? எனவே விவசாயியை தாக்கிய அந்த ஊராட்சி செயலாளரின் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காயம் பட்ட அந்த விவசாயின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும்.
இனியும் இது போன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் அந்த ஊராட்சி செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம், பிள்ளையார் குளம் ஊராட்சி, கங்கா குலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில் மிகவும் பொறுமையாக, நிதானமாக கேள்வி கேட்டவிவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து, கடுமையாக தாக்கிய ஊராட்சி செயலர் தங்க பாண்டியனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும், அரசு ஊழியரால் ஏற்பட்ட அவமானத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு ரூ. 10லட்சம் தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
அரசு ஊழியரால் பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் குதிக்க தயங்காது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
- நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும்.
திருப்பூர்:
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4-ந் தேதி, 5-ந் தேதி, 18-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இறுதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1-1-2024 அன்று 18 வயது நிரம்பி அதாவது 1-1-2006-ம் நாளுக்கு முன் பிறந்து இருக்க வேண்டும். புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தங்களை மேற்கொள்வதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களையும், புதிதாக குடி பெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்களையும வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வருகிற 27-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு அந்தந்த வாக்குச்சாவடி அமைவிட அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுத்து அற்கான ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமும் www.nvsp.இந்த மற்றும்Voters helpline App-ல் பதிவு செய்து குறுஞ்செய்தி மூலம் பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு ஆன்லைனை பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பது மட்டுமில்லாமல் இறந்து போன வாக்காளரை நீக்கலாம். ஆன்லைனை பயன்படுத்தி படிவங்களை பதிவேற்றம் செய்து ஒருவர் எத்தனை வாக்காளர்களை வேண்டுமானாலும் நீக்கலாம். அவ்வாறு செய்ய விரும்புவோர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊர் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் மற்றும் கட்சியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.






