என் மலர்
திருப்பூர்
- ஏற்றுமதியாளா்கள் சங்கம் இந்தத் துறையில் உள்ள நிபுணா்களுடன் சந்திப்பை நடத்தி வருகிறது.
- நீா் நிலைகளை பாதுகாத்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளை பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்தல்.
திருப்பூர்
உலகின் முன்னணி வா்த்தகா்கள் நிலைத் தன்மை குறித்து அதிகம் விவாதித்து வருகின்றனா். ஐரோப்பிய ஒன்றியத்தின் காா்பன் பாா்டா் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிஷம் ஒழுங்குமுறையை செயல்படுத்துவது எதிா்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் இருந்துவிடுபடவும், நிலைத் தன்மைக்கான உறுதிப்பட்டை அடையவும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் இந்தத் துறையில் உள்ள நிபுணா்களுடன் சந்திப்பை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தலைமையிலான நிா்வாகிகள் இன்டா்டெக் டெஸ்டிங் சா்வீஸஸ் நிறுவனத்தின் குளோபல் தலைமைச் செயல் அதிகாரி ஆண்ட்ரே லாக்ரோயிக்ஸை கோவையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் திருப்பூா் பின்னலாடை நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சாய ஆலைகளில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு தொழில் நுட்பம், குறைந்த காா்பன் தடத்தை உருவாக்க காற்று மற்றும் சூரிய சக்தி ஜெனரேட்டா்களை நிறுவுதல், மரங்களை நடுதல், நீா் நிலைகளை பாதுகாத்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளை பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்தல் குறித்தும் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.
மேலும் திருப்பூரில் காா்பன் சமநிலை குறித்து இன்டா்டெக் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.இக்கூட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் திருக்குமரன், துணைத் தலைவா் இளங்கோவன் மற்றும் முன்னணி ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றனா்.
- உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
- கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
திருப்பூர்:
உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் போர், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி மற்றும் செயற்கை இழை பஞ்சு மீதான, தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் போன்றவற்றால், உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.அதனால் மிக நீண்ட பருத்தி மீதான இறக்குமதி வரிவிலக்கு மற்றும் நிதி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
- குழந்தை தொழிலாளர் முறை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுயசான்று பெற அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொட்டம்பட்டி, குறிச்சிக்கோட்டை, பொங்கலூர், அரசம்பாளையம், பொங்குபாளையம், நங்கியாம்பாளையகம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து தொழில்களில் குழந்தைகளும், அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரை அகற்றுவது குறித்து சமூக பங்கேற்பை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சிகள், நகராட்சி, மாநகராட்சிகளில் வெளியிடப்படும் பணி ஒப்பந்தங்களில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுயசான்று பெற அறிவுறுத்தப்பட்டது.இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- முடிவில் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம், முத்தூர் சீதாதேவி, பூமாதேவி சமேத மாதவராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நாளை காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், தொழில் வளம் சிறந்து விளங்கவும், பொருளாதார நிலை மேம்படவும், திருமணத்தடை நீங்கவும் மகா சுதர்சன ஹோமம் மற்றும் மகாலட்சுமி கனக அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக அன்று காலை 6.30 மணிக்கு மாதவராஜ பெருமாள், ஞானவிநாயகர், சுவர்ண கருடன், பால ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜைகள் நடக்கிறது.முடிவில் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் திரளான பக்தர்கள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.
திருப்பூர்:
உடுமலை தாலுகாவில் புதிதாக தொடங்கப்பட உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர், காவலர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர் பதவிக்கு முதுகலை பட்டதாரி சமூக பணிகள்சட்டம் படித்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.35,36, கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641604 என்ற முகவரில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான்.
- மு.க.ஸ்டாலின் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை.
திருப்பூர்:
முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் இன்று திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகிறது. சூறையாடுவது வேறு ஆட்கள் கிடையாது, அரசு தான். குறிப்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான்.
தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியது 100 சதவீதம் உண்மை.
திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்து பழங்கால கோவில்களை புனரமைக்காமல் இருந்து வருகிறது. பிரதமர் மோடி கூறியது பொய் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபிப்பாரானால் என்னுடன் விவாதத்திற்கு தயாரா. மு.க.ஸ்டாலின் சொல்வது 100 சதவீதம் பொய். நான் சொல்வது பொய் என்றால் இன்று இரவுக்குள் உயிர் இழந்து விடுவேன்.
பணியில் இருக்கும்போது கடுமையாக உண்மையாக உழைத்தேன். இப்போதும் உழைத்து கொண்டிருக்கிறேன். கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக என்னை யாராலும் தடுக்க முடியாது. நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் இல்லை. அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் இல்லை.
மு.க.ஸ்டாலின் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை. இனியும் இதுபோன்று அமைதியாக இருக்க மாட்டோம். இதன் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த மாதம் முதல் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது.
- தங்களுடைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து, நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.
திருப்பூர்:
இந்தியா-இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) அமைந்தால் ஆயத்த ஆடைகள், ஜவுளித்துறை வர்த்தகம் மேம்படும் என்று பின்னலாடை துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-இங்கிலாந்து-இந்தியா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்துக்குள் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் என்று மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் நிச்சயம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக இங்கிலாந்து நாட்டின் வர்த்தகர்கள், முக்கிய பிராண்டட் ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டனர். நிறுவனங்களின் ஆடை தயாரிப்பு திறன், வசதிகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்து வைத்துள்ளது. தங்களுடைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து, நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.விரிவாக்கம் செய்யப்பட்ட அளவுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் வரவில்லை என்றாலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மிக குறைந்த அளவே வர்த்தகம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களில் திருப்பூரில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு 5 மாதங்களை ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அளவே குறைவு. இது பயப்படும்படியான நிகழ்வு இல்லை.கடந்த மாதம் முதல் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இந்தியா-இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினால் திருப்பூருக்கான ஆர்டர் அதிகரிக்கும். அதாவது விரிவாக்கம் செய்யப்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் முழுவீச்சில் ஆடை உற்பத்தியில் ஈடுபட முடியும். அவ்வாறு நடக்கும்போது திருப்பூரில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்தநிலையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 'பிராண்ட் திருப்பூர்' என்ற இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். வளம்குன்றா வளர்ச்சி என்பது உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் ஆடைகள் தயாரிப்பு ஆகும். இந்த தொழில்நுட்பத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மீண்டும் சுத்திகரிப்பு செய்து சாய ஆலைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் தினமும் 13 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து அதில் 85 முதல் 90 சதவீதம் நீரை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தண்ணீர் பயன்பாட்டை குறைத்துள்ளனர். சூரியஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலமாக திருப்பூர் தொழில் துறையினர் 2 ஆயிரத்து 500 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு 600 மெகாவாட் மின்சாரம் போதும். மீதம் உள்ள மின்சாரத்தை அரசுக்கு வழங்கி வருகிறார்கள்.திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் மூலமாக மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது மழையின் அளவை அதிகமாகியிருப்பதாக தெரிவித்தனர். 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்துள்ளனர். ஐ.நா. சபையும் வளம்குன்றா வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. உலக வர்த்தகர்களும் அதையே விரும்புகிறார்கள்.இவை அனைத்தையும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே கடைபிடித்து செய்து வருவதால் 'பிராண்ட் திருப்பூர்' என்பதை உலக அளவில் தெரியப்படுத்தும் நடவடிக்கையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, சர்வதேச பின்னலாடை கண்காட்சி வருகிற 12-ந் தேதி திருப்பூரில் தொடங்க உள்ளது. உலக அளவில் வர்த்தகர்கள் இந்த கண்காட்சிக்கு வர இருக்கிறார்கள். வளம்குன்றா வளர்ச்சியை நோக்கி ஏற்கனவே நாம் பயணப்பட்டு வருகிறோம். இந்த கண்காட்சியின் மூலமாக 'பிராண்ட் திருப்பூர்' என்பதை தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். ஆண்டு முழுவதும் உலக அளவில் வர்த்தகம் செய்யும் தொழில்முறையை கையில் எடுத்துள்ளோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றார்.
- நடப்பு கல்வியாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா என்ற விபரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும் என்றனர்.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுகள் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது.
திருப்பூர்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுகள் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது.முதல்கட்டமாக ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள தேர்வு மையங்கள், புதிதாக அமைக்க வேண்டிய தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை கருத்துருவாக தயார் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என கருத்தப்படும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, அவசியம் அமைத்தே ஆக வேண்டும் எனில் அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு குறிப்புரையுடன், கருத்துரு தயாரிக்க வேண்டும்.
தற்காலிக (ஓராண்டு மட்டும்) தேர்வு மையம் அமைக்க, அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குனரின் ஒப்புதல் கட்டாயம் பெற வேண்டும். அரசாணையில் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வுமையம் வேண்டி பரிந்துரை செய்தால் துறை அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். புதியதாக தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருப்பதை விதிகளின்படி செயல்படுவதை உறுதி செய்து பின் இறுதி கருத்துரு 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2022 - 23ம் ஆண்டு பொதுத்தேர்வு நடந்த போது 10-ம் வகுப்புக்கு 106, பிளஸ் 2 வகுப்புக்கு, 92 மையங்களில் அமைக்கப்பட்டது.நடப்பு கல்வியாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா என்ற விபரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும் என்றனர்.
- வாரத்திற்கு இரு பாடவேளைகள் வீதம், கலை அரங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- நிரந்தர, பகுதிநேர ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு, பயற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தனித்திறன் வளர்க்கும் வகையில், வாரத்திற்கு இரு பாடவேளைகள் வீதம், கலை அரங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நடனம், நாடகம், இசை என ஐந்து பிரிவுகளின் கீழ், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, நிரந்தர, பகுதிநேர ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு, பயற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கலை அரங்க பாடவேளையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய பாடத்திட்டம், வீடியோவுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.
இதை மாணவர்களுக்கு சொல்லி தருவதோடு, பயிற்சிக்கு பின் மாணவர்கள் வெளிப்படுத்தும் தனித்திறன்களை, புகைப்படம், வீடியோ வடிவில் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
கலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், கலை அரங்க பாடவேளையில் என்னென்ன தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென்ற சிலபஸ் வெளியிடப்பட்டது.இதுசார்ந்து ஆசிரியர்களின் சந்தேகங்களை விளக்கும் வகையில் பயிற்சி நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
- கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.
- கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது.
உடுமலை:
பாலியஸ்டர் பட்டு புடவைகளை பெண்கள் விரும்பி வாங்குவதால் பட்டு புடவை விற்பனை குறைந்துள்ளது என்கின்றனர் பட்டு நூல் உற்பத்தியாளர்கள்.
கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் சில வாரங்களாக, பட்டுக்கூடு விலை குறைந்துள்ளது.நேற்று முதல் தரமான கூடு ஒரு கிலோ 516 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ 390 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் பட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து பட்டு நூல் உற்பத்தியாளர் ஹரி கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு முன், பட்டு நூல் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பட்டு நூல் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பட்டு நூல் கிலோ 4500 வரை விற்பனையானது. இப்போது கிலோ 3969 ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கு காரணம் இப்போது ஜவுளி கடைகளில் பாலியஸ்டர் பட்டு புடவைகள், 1000 ரூபாய்க்கு நல்ல கலரில் பளபளப்பாக விற்பனை செய்யப்படுகிறது. அதை பெண்கள் வாங்கி உடுத்த துவங்கி விட்டனர். அதனால் பட்டு சேலை வாங்குபவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பட்டு நூல் விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும் என்றார்.
- ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ெரயில் 11ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரெயில் 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஒடிசா ரூர்கேலா நிலையத்தின் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் 2 சிறப்பு ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ெரயில் எண் (03358) கோவையிலிருந்து நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ெரயில் 11ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ெரயில் எண் (03357) பரவுனியில் இருந்து 23:45 க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரெயில் 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.
- கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
உடுமலை:
உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. இந்த பாசன பகுதியில் கரும்பு உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு போதிய மழை இல்லாத நிலையில் ஆயக்கட்டு பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது.எனவே அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அமராவதி வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:- பருவமழை பெய்யாததால் அமராவதி பிரதான கால்வாய் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அணையிலிருந்து பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
அணையிலுள்ள தண்ணீரை புதிய ஆயக்கட்டு மற்றும் ஆற்றுப்பாசனத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். கரூர் வரை தண்ணீர் சென்றடைய வேண்டுமானால், அணையிலிருந்து கரூர் வரை ஆற்றில் முறைகேடாக தண்ணீர் எடுக்கும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு இயக்காமல் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






