என் மலர்
திருப்பத்தூர்
- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
- மே தின பொதுக்கூட்டம் நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் திருப்பத்தூர் சேலம் கூட்ரோடு அருகே நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என். முனுசாமி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என். திருப்பதி, செல்வம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் மகேந்திரன், முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி ஜி. செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
சென்னையில் சிங்காரவேலன் சிலை திறந்து வைத்து மே தினத்திற்கு விடுமுறை அளித்தவர் அண்ணா, மே தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள நழிவுற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் ஒன்றரை கோடி நிதி வழங்கி வருகிறோம்.
தமிழக அரசு 12 மணி நேரம் வேலை சட்டம் கொண்டுவரப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது ஏமாற்றும் செயல்.
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. நீட் தேர்வுக்கு மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000, வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.
நிதி அமைச்சர் பேசிய ஆடியோ குறித்து தற்போது உண்மைத் தன்மை தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் குமார் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், கோ.வி.சம்பத்குமார், சி.ஏ.டெல்லி பாபு, உட்பட பலர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் டாக்டர் லீலா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ரமேஷ், சுப்பிரமணியம், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் தம்பா கிருஷ்ணன், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் வேலன் நன்றி கூறினார்.
திருப்பத்தூரில் மழை பெய்து கொண்டிருந்தது அப்போதும் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.
- போலீசார் பாது காப்புடன் நடந்தது
- சர்வீஸ் சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே புத் துக்கோவில் பகுதியில் கோவில் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட் டிடங்களை தேசிய நெடுஞ் சாலை துறையினர் பொக் லைன் எந்திரங்களை வைத்து நேற்று முன்தினம் அகற்றினர்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக புத்துக்கோவில் பகு தியில் சென்னை-பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலையி லும், பெங்களூர்- சென்னை செல்லும் சர்வீஸ் சாலையி லும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற் றும் பணிகள் நடைபெற்றது.
இதில் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற் றப்பட்டது. வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பழனி மற்றும் அம்பலூர் போலீசார் பாது காப்புடன் தொடர்ந்து ஆக் கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
- வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்
- மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவுகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் தற்போது கோடை மழை பரவலாகபெய்ய ஆரம்பித்துள்ளது. கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் பல நன்மை கிடைக்கும்.
கோடை காலங் களில் சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் கோடை உழவு செய்வதன் மூலம் மேல் மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிப்பதோடு, மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவு கிறது.
மேலும், பயிரின் வேர் நன்கு ஆழமாக செல்ல இது வழி செய்கிறது.
மண்ணில் உள்ள நோய் கிருமிகளும் பூச்சிகளின் முட்டைகள் கூட்டுப்புழுக்களும் நிலத்தில் உள்ள களைச்செ டிகளின் விதைகளும் வெளியே தள்ளப்பட்டு வெயிலின் வெம்மையால் அழிக்கப்பட்டு வரும் பருவத்தில் பூச்சி, நோய் தாக்குதலை குறைக்க உதவுகிறது. கோடை உழவு உழும்போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து பயிருக்கு எளிதில் கிடைக்க உதவுகிறது. இது தவிர மண் அரிமானத்தைக் கட்டுப்படுத்தி மண்ணிலுள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் விரயமாவதை தடுக்கிறது.
எனவே, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் கோடை உழவை செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தந்தை-மகன் கைது
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கார் மூலம் கடத்தி வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத தனி ஒரு ஷெட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் பால்நாங்குப்பம் பகுதிக்கு சென்று நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது நிலத்தில் உள்ள தனி ஷெட் ஒன்றில் கார் மற்றும் 86 பாக்ஸ்கள் கொண்ட மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனை யடுத்து போலீசார் காரில் பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 61) மற்றும் அவரது மகன் இளவரசன் (வயது 32) ஆகிய 2 பேரும் கர்நாடக மாநிலத்திலிருந்து 4704 மது பாக்கெட்டுகள் வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையெடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 70 பாட்டில்கள் பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது ரெட்டியூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்று கொண்டிருந்த மேலும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரெட்டியூர் பகுதியில் சோதனை செய்தனர்.
சின்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 40) என்பவரை பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவரிடமிருந்து சுமார் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை போலீசார் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிபெரமனூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்த நந்தகுமார் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 460 பேர் முகாமில் பங்கேற்றனர்
- கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் லயன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் லைன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தனர். 460 பேர் முகாமில் பங்கேற்றனர்.
இதில் 42 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள நபர்களுக்கு தனியார் மருத்துவக் குழுவினர் மூலம் கண்களை பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.
- ெரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- பயணிகள் வலியுறுத்தல்
ஆம்பூர்:
ஆம்பூரில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளது.
அதனால் ஆம்பூரிலிருந்தும் சென்னைக்கு ரயில் மூலம் பணியாளா்கள் சென்று வருகின்றனா். அதே போல வியாபார நிமித்தமாக ஆம்பூரிலிருந்து, வெளியூா்களுக்கும், வெளியூரிலிருந்து ஆம்பூருக்கும்வரும் வியாபாரிகள் ெரயில் சேவையை பயன்படுத்துகின்றனா்.
மேலும், ஆம்பூரை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் பல்வேறு ஊா்களில் உள்ள கல்லூரிகளுக்கு ெரயில் மூலம் சென்று வருகின்றனா்.
கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது ெரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
ெரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் தொடங்கிய போது சில ெரயில்கள் ஏற்கனவே நின்று சென்ற ெரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிா்க்கப்பட்டது. அதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
ஏற்கனவே ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649 - 22650) காவேரி எக்ஸ்பிரஸ் (16021 - 16022), திருப்பதி எக்ஸ்பிரஸ் (16219) ஆகிய ெரயில்கள் ஆம்பூா் ெரயில் நிலையத்தில் பல ஆண்டுகளாக நின்று சென்றன.
இதில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ெரயில் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.
காவேரி எக்ஸ்பிரஸ் ெரயில் மைசூரிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது. திருப்பதி எக்ஸ்பிரஸ் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள் ஆம்பூா் ெரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் நின்று செல்லக் கூடியதாகும். இரவு நேரங்களில் ஆம்பூருக்கு வரும் பயணிகளுக்கு இந்த ெரயில்கள் பயனுள்ளதாக இருந்தன.
கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு ெரயில் சேவை தொடங்கிய போதிலும், ஆம்பூரில் நின்று செல்வது தடைபட்டது. அதனால் ெரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கனவே ஆம்பூரில் நின்று சென்று, தற்போது நிற்காமல் செல்லும் ெரயில்களை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஆம்பூரில் நின்று செல்ல ெரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ெரயில் பயணிகள் வலியுறுத்தினர்.
- நகராட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றினர்
- ஒப்பந்த முறையை கைவிடக் கோரி நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சிஐடியு, சங்கங்கள் சார்பில் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றினர்.
பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர் சங்க தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
செயலாளர் ரவி பொருளாளர் ஆர் கோபி வரவேற்றனர் செயலாளர், கவுரவத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம். சுந்தரேசன் கொடியேற்றி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மயில்வாகனன், அன்வர் பாஷா, பைரோஸ் உட்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சி.ஐ.டி.யு. சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட துணைதலைவர் பொன்னுசாமி, தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் எம் சரவணன், துணைத் தலைவர்கள் சின்னத்தம்பி சங்கர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் 12 மணி நேர வேலை நிறுத்தத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் திருப்பத்தூர் நகராட்சியில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், காண்ட்ராக்ட் முறையை கைவிடக் கோரியும் தொழிலாளர்களை நிறுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
- வீடு கட்டி தர நடவடிக்கை
- அதிகாரி தகவல்
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் பகுதியில் பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களுக்கு நிலம் வீடு இல்லாதவர்கள் கணக்கெடுப்பு குறித்து பழங்குடி இனதிட்ட அலுவலர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கரிவேலன் உடனிருந்தனர்.
ஏலகிரி மலையில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு அவ்விடத்தில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என பழங்குடி இன திட்ட அலுவலர் தெரிவித்தார்.
- நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் மகாலிங்கம். இவரது மகன் கோபிநாத் (வயது 21).
கோயம்புத்தூர் விவசாய கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண் படிப்பு படித்து வருகிறார். விடுமுறையில் வந்த கோபிநாத் அவரது நண்பர்களுடன் சுண்ணாம்பு குட்டை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாமல் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் நீச்சல் பழக சென்றார்.
நண்பர்கள் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது கோபிநாத் மேலிருந்து குதித்தார். அவர் மேலே வரவில்லை மாயமானார்.
அதனைத் தொடர்ந்து நண்பர்கள் சிறிது நேரம் தேடிப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார்.
இதனால் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நேற்று பிற்பகல் 2 மணியளவில் இருந்து கடந்த நான்கு மணி நேரமாக மாணவனை தேடினர்.
மாணவன் கிடைக்காததால் மேலும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினரும் வழவழைக்கப்பட்டனர். இரவு 10 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை இதனால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியை கைவிட்டனர்.
தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டனர் அப்போது காலை 7.15 மணியளவில் மாணவனை பிணமாக மீட்டனர்.
நாட்டறம்பள்ளி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- குடிபோதையில் விபரீதம்
- தீயை அணைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் தினறினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் ராஜா (வயது 51). இவரது வீட்டு அருகே தன்னுடைய மகள் தனிமையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராஜா மது போதையில் தனது மகளின் குடிசை வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அப்போது குடிபோதையில் இருந்த ராஜா தனது கையில் வைத்து இருந்த சிகரெட்டை சி எரிந்துள்ளார். இதனால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீ மளமளவென பரவியது தீயை அணைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் தினறினர்.
வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. அதன் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அைணத்தனர். நாட்றம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை நடக்கிறது
- அதிகாரிகள் ஆய்வு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் நாளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
அதற்கான இடத்தை மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட திட்ட துணை இயக்குநர் விஜயகுமாரி இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன் மற்றும் மண்டல வட்டார துணை அலுவலர் லோகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் குமார், எழுத்தாளர் அன்பு பணி தள பொறுப்பாளர் விஜியா ஆகியோர் உடனிருந்தனர்.






