search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Certificate of Appreciation"

    • டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்
    • ஆலோசனை மற்றும் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு போக்சோ வழக்குகளில் குற்றவாளி களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருதல், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை களில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    இதில் டி.ஐ.ஜி முத்துசாமி கலந்துகொண்டு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    குறிப்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில் 90 பவுன் நகை திருட்டு போனதை விரைந்து கண்டுபிடித்து மீட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி முத்துசாமி தனது சொந்த பணத்திலிருந்து ரூ.10,000 வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன்,கிரண் ஸ்ருதி, ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து குற்ற தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் நடந்தது.

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி பேசினார்.

    கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா,காண்டீபன், பாரதி, சப் இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன், தினேஷ் ரகு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன்,சுப்பிரமணி, மதிவாணன்,சதாசிவம், ஜான்சி, போலீஸ் ஏட்டுகள் மாறன், அப்துல் முஜீர், மீனா, ஜானகி தேவி போலீசார் கோபிகிருஷ்ணா, வெங்கடேசன், தாமோதரன், அமித் பாஷா திவாகர் ஆகியோரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, அரக்கோணம் உதவி சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ரவிச்சந்திரன், ராஜா சுந்தர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • வெளி மாநில மது கடத்திய தந்தை, மகன் கைது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கர்நாடக மாநில மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பால்நாங்குப்பம் பகுதியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 3,648 மது பாக்கெட்டுகள், 691லிட்டர் வெளிமாநில மதுபானம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடத்தலில் ஈடுபட்ட தந்தை - மகன் கைது செய்யப்பட்ட னர். சிறப்பாக செயல் பட்டு மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய், முதல்நிலை காவலர் மனோகரன், காவலர்கள் ரூபன் மற்றும் சத்தி ஆகிய 4 பேரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அவர் களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார்.

    • தேவகோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.
    • 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்தி பேசினர். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம் சேசுரான், மருத்துவர் அழகு தாஸ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசை ராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஊட்டி,

    கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது22). கடந்ந 3 நாட்களுக்கு முன் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக தனது நண்பர் மனோஜ் என்பவருடன் வந்தார்.

    கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது, கோர்ட்டின் பின்புறம் 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கோகுலை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன் சிக்னல் ஊட்டி சுற்றுப்புற பகுதியில் காட்டியதால் நீலகிரி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

    இதனால் அவர்களைப் பிடிக்க நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து தப்பிக்க முயன்ற குற்றவாளிகளை கோத்தகிரி பகுதியில் வைத்து நீலகிரி போலீசார் கைது செய்தனர்.

    இதன் பின்னர் கோவை போலீசார் அவர்களை கோவைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் கொலையாளிகளை மடக்கிப் பிடித்த நீலகிரி இன்ஸ்பெக்டர்கள் மணிக்குமார், வேல்முருகன், கவிதா, சரவணகுமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், விஸ்வநாதன், வின்சென்ட், முகைதீன், போலீஸ்காரர்கள் பிரபு, பிரேம் ஆகியோரை பாராட்டி கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.

    • குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
    • 80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    குன்னூர்

    குன்னூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தின விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு என்ன தேவை என்று அவைகளை பூர்த்தி செய்து தருவதாக பேசினார். 80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    • காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பாக தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடை பெற்றது.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி சான்றுகளை வழங்கினார்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர்சாகுல் அமீது தலைமையில் சிறப்பாக தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடை பெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதாசுரேஷ், மற்றும் துணை தலைவர் சி.சுதா சிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் கலந்து கொண்டு நகரங்களின்தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் வடிகால்கள் சுத்தம் செய்தல், பூங்காக்கள் தூய்மை செய்தல், குளங்களை சுத்தம் செய்தல், மரக்கன்றுகன் நடுதல், பொதுமக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகளை தரம்பிரித்து தர செய்தல், பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்தப்படுத்துதல், பொதுசுவர்களில்ஒட்டப்பட்டசுவரொட்டிகளை அப்புறப்படுத்துதல், பள்ளி வளாகங்களை சுத்தம்செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள மாதத்தில் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் நடைப்பெற்ற முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி சான்றுகளை வழங்கினார்.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, பழனிவேல், மாலதி, சந்திரகலா, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன், மணிவேல், ராணி, இளஞ்சியம், ராஜ்குமார், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×