குன்னூரில் உலக முதியோர் தின நாள் அனுசரிப்பு

குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
குன்னூரில்  உலக முதியோர் தின நாள் அனுசரிப்பு
Published on

குன்னூர்

குன்னூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தின விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு என்ன தேவை என்று அவைகளை பூர்த்தி செய்து தருவதாக பேசினார். 80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com