ரத்ததான முகாம்

தேவகோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது. 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாம்
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்தி பேசினர். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம் சேசுரான், மருத்துவர் அழகு தாஸ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசை ராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com