என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Finance Minister Audio"

    • முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
    • மே தின பொதுக்கூட்டம் நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் திருப்பத்தூர் சேலம் கூட்ரோடு அருகே நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என். முனுசாமி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என். திருப்பதி, செல்வம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் மகேந்திரன், முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி ஜி. செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

    சென்னையில் சிங்காரவேலன் சிலை திறந்து வைத்து மே தினத்திற்கு விடுமுறை அளித்தவர் அண்ணா, மே தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள நழிவுற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் ஒன்றரை கோடி நிதி வழங்கி வருகிறோம்.

    தமிழக அரசு 12 மணி நேரம் வேலை சட்டம் கொண்டுவரப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது ஏமாற்றும் செயல்.

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. நீட் தேர்வுக்கு மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000, வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

    நிதி அமைச்சர் பேசிய ஆடியோ குறித்து தற்போது உண்மைத் தன்மை தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் குமார் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், கோ.வி.சம்பத்குமார், சி.ஏ.டெல்லி பாபு, உட்பட பலர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் டாக்டர் லீலா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ரமேஷ், சுப்பிரமணியம், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் தம்பா கிருஷ்ணன், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் வேலன் நன்றி கூறினார்.

    திருப்பத்தூரில் மழை பெய்து கொண்டிருந்தது அப்போதும் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    ×