search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambur Railway Station"

    • ெரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • பயணிகள் வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

    அதனால் ஆம்பூரிலிருந்தும் சென்னைக்கு ரயில் மூலம் பணியாளா்கள் சென்று வருகின்றனா். அதே போல வியாபார நிமித்தமாக ஆம்பூரிலிருந்து, வெளியூா்களுக்கும், வெளியூரிலிருந்து ஆம்பூருக்கும்வரும் வியாபாரிகள் ெரயில் சேவையை பயன்படுத்துகின்றனா்.

    மேலும், ஆம்பூரை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் பல்வேறு ஊா்களில் உள்ள கல்லூரிகளுக்கு ெரயில் மூலம் சென்று வருகின்றனா்.

    கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது ெரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

    ெரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் தொடங்கிய போது சில ெரயில்கள் ஏற்கனவே நின்று சென்ற ெரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிா்க்கப்பட்டது. அதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    ஏற்கனவே ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649 - 22650) காவேரி எக்ஸ்பிரஸ் (16021 - 16022), திருப்பதி எக்ஸ்பிரஸ் (16219) ஆகிய ெரயில்கள் ஆம்பூா் ெரயில் நிலையத்தில் பல ஆண்டுகளாக நின்று சென்றன.

    இதில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ெரயில் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

    காவேரி எக்ஸ்பிரஸ் ெரயில் மைசூரிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது. திருப்பதி எக்ஸ்பிரஸ் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த ரயில்கள் ஆம்பூா் ெரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் நின்று செல்லக் கூடியதாகும். இரவு நேரங்களில் ஆம்பூருக்கு வரும் பயணிகளுக்கு இந்த ெரயில்கள் பயனுள்ளதாக இருந்தன.

    கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு ெரயில் சேவை தொடங்கிய போதிலும், ஆம்பூரில் நின்று செல்வது தடைபட்டது. அதனால் ெரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

    ஏற்கனவே ஆம்பூரில் நின்று சென்று, தற்போது நிற்காமல் செல்லும் ெரயில்களை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஆம்பூரில் நின்று செல்ல ெரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ெரயில் பயணிகள் வலியுறுத்தினர்.

    ×