என் மலர்
திருப்பத்தூர்
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
- இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதி
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது இந்த நூலகத்தின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் மேற்கூறையில் உடைந்து விழுவதாகவும் பொதுமக்களும், வாசகர்களும் தொடர்ந்து புகார்களை கூறி வந்தனர்.
வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. நூலகத்திற்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு இருந்த வாசகர்களிடம் குறை களையும் கேட்டு அறிந்தார்.
இங்கு புதியதாக கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.
- குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது
- நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து உள்ளது
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும், பாலாறு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அம்பலூர், கொடையாஞ்சி, ஆவாரங்குப்பம், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் அதிகரித்து உள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனை பகுதியில் மருத்துவமனைக்குள் போக முடியாத அளவு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.
நகரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழை காரணமாக இப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
- ஆம்பூரில் 14-ந் தேதி நடக்கிறது
- 13 முதல் 24 வயது வரையிலான இளம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கிரிக் கெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சங் கம் நடத்தும் மகளிருக்கான 13 முதல் 24 வயது வரையி லான இளம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த வீராங்கனைக்களுக்கு வருகிற 14-ந் தேதி மாவட்ட அணி தேர்வு முகாம் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரி யில் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட் டத்தை சேர்ந்தவர் இதில் பங்கு பெறுவதற்கான விண் ணப்பங்களை சங்க அலுவல கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாசில்தாருக்கு பொதுமக்கள் பாராட்டு
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.
இடையூறாக உள்ள மேட்டுப்பகுதியில் தண்ணீர் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் பிறகு உடனடியாக திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மேற்படி பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டனர். குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையில் நின்று தண்ணீர் அகற்றும் பணியில் தாசில்தார் ஈடுபட்டார்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாட்டறம்பள்ளி தாசில்தாரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்கின்றன
- நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை உடையாக அணிந்த பிளாஸ்டிக் வேடம் அணிந்து பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என விழிப்புணர்வு மூலம் செய்து காட்டினர்.
மேலும் பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.
நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும்பாதிக்கின்றன.
இனிவரும் காலங்களில் மஞ்சள் பையை கையில் எடுப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர்:
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் நிலேஸ் பாபு (வயது 39). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி அபூர்வா சென்னை தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று காலை ஏலகிரி மலைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் நெடுஞ்சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிஷ் படுகாயம் அடைந்தார். அபூர்வா லேசான காயமடைந்தார்.
படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
- வணிகர் தினத்தை முன் னிட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது
- 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
ஆம்பூர்:
வணிகர் தினத்தை முன் னிட்டு ஆம்பூரில் கடைக ளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது.
அதன்படி நேற்று நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடை, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன. பஜார் பகுதி யில் உள்ள காய்கறி மார்க் கெட் முழுவதுமாக மூடப் பட்டு இருந்தது.
மேலும் பஜாரில் அனைத்து ஜவுளிக்கடைகளும், மளிகைக்கடைகளும் அடைக்கப் பட்டு இருந்தன.
சுமார் 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரி கள் தெரிவித்தனர்
- கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது
- புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு சுற்றுச்சுவர், அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது.
இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழையமனை பகுதிக்கு நடைப்பயிற்சி பூங்காவும், செயல்படாத அங்கன்வாடி மையத் தினையும் செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் அப்பகு தியில் பழுதடைந்து இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட உத்தரவிட்டார்.
கீழ்கன்றாம்பல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாண வர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் அதே பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார்.
- வீடுகளில் கழிவுநீருடன் மழை நீர் புகுந்தது
- மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 102.60 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூ, ர் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மழை பெய்தது.
திருப்பத்தூர் பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது திருப்பத்தூரில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் நிரம்பி தெருக்களில் ஓடியது. திருப்பத்தூர் பெரியார் நகர், கலைஞர் நகர் டி எம் சி காலனி பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.
அந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் குளம் போல் கழிவுநீர் தேங்கியது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் கழிவுநீர் புகுந்து துர்நாற்றமும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பெரியார் நகரில் உள்ள சாலைகள் கழிவு நீர் கால்வாய் போல் காட்சி அளிக்கின்றன.
மழைக்காலங்களில் பெரியார் நகர் பகுதியில் குடும்பத்துடன் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது நகராட்சி அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாய் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று காரணமாக மாங்காய் தோப்புகள் மாங்காய்கள் உதிர்ந்தன. இதேபோன்று கரும்பு நிலங்களில் சாய்ந்தது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைகோடியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் சந்தைக்கோடியூர் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜோலார்பேட்டை பகுதி இருளில் மூழ்கியது.
மேலும் தாமலேரிமுத்தூர் மற்றும் மூக்கனூர் பகுதியில் கோவில் திருவிழாவில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது பலத்த மழை பெய்தது காரணமாக மேற்கண்ட இரண்டு இடங்களில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டறம்பள்ளி பகுதியில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏலகிரி மலையில் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆம்பூர் 5, ஆம்பூர் சர்க்கரை ஆலை 6, ஆலங்காயம் 20, வாணியம்பாடி 28, நாட்றம்பள்ளி 25, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதி 23, திருப்பத்தூர் 102.6, திருப்பத்தூர் மாவட்டத்தில் சராசரியாக 209 அளவு பதிவாகியுள்ளது.
- 6 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர்
இந்த நிலையில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது போலீசார் சோதனை செய்தனர்.
கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது ெதரிந்தது.
பின்னர் ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி பஜனை கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர் கவுண்டர் கே.ஜி. சரவணன், ஊர் தர்மகர்த்தா டி. சிவாஜி கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஊர் கவுண்டர்கள் முனிசாமி, சாமிக்கண்ணு, முன்னாள் தர்மகர்த்தா நடராஜன், வார்டு உறுப்பினர் கீதா ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புனித தீர்த்தம் பெற்று ராதா -ருக்மணி சமேத வேணுகோபால சுவாமியின் அருளைப் பெற்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் சேதம்
- ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா சின்னவரிகம் ஊராட்சி ரங்காபுரம் பகுதி 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் உள்ளது.
50 ஏக்கர் பரப்பளவில் வாழை, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவை நன்கு வளர்ந்துள்ளது. இதில் விவசாய நிலங்களில் திடீரென புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்துள்ளது.
இதில் வாழை, கேழ்வரகு உள்ளிட்டவைகளை நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் உம்ராபாத் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






