என் மலர்
திருப்பத்தூர்
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை நாயக்கனேரி ஊராட்சி பணங்காட்டேரி மலை கிராமத்தில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான சேட் வயது (45) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.
பின்னர் அவரிடம் இருந்த 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் சேட் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- நுழைவாயில் திறக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் கட்டப்பட்டது. விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
புதிய கட்டிடத்தையும் நுழைவாயிலையும் கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
உடன் டாக்டர்.செந்தில் , நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
- கலெக்டர் நடவடிக்கை
- குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 15 ஆண்டு காலமாக தண்ணீர் ஏற்றாத நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கலெக்டர் தண்ணீர் குழாய்களை இணைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.
அதன் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பாறையூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 94 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
மேலும் பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டியில் ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் 94 குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 860 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
- இடது கையில் அம்பு, அலங்கரிக்கப்பட்ட கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவமைக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலத்துறை பேராசிரியர் வ.மதன் குமார், காணி நிலம் மு.முனிசாமி, திருப்பத் தூர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் பல்லவன் ஆகியோர் ஏலகிரி மலையில் மேற்கொண்ட கள ஆய்வில் இரு நடுகற்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியதாவது:-
ஏலகிரிமலை சுற்றுலாத் தலத்திற்கு மட்டுமின்றி வரலாற்று சிறப்புக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. கற்கோ டாரிகள், கற்திட்டைகள், பல்லவர் காலம் முதல் விஜய நகர காலம் வரையிலான நடு கற்கள், கல்வெட்டுகள் என தொடர்ச்சியாக எங்கள் ஆய் வுக் குழுவினரால் கண்டறி யப்பட்டு வெளிப்படுத்தப் பட்டு வருகிறது.
அந்த வகையில் ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங் களில் ஒன்றான மேட்டுக்கனி யூர் என்னும் ஊரில் புதிதாக கூத்தாண்டவர் (அரவான்) கோவில் ஒன்றை அவ்வூர் மக் கள் கட்டி வருகின்றனர். அந்த கோவிலுக்கு இடதுபுறத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டி அதில் நடுகல் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.
இந்த தெய்வம் விஜய நகர காலத்தில் ஏற்பட்ட போரில் வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு எடுக் கப்பட்டுள்ள நடுகற்கள் ஆகும். இவை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடு கற்களாகும். இந்த நடுகற்க ளின் அமைப்பானது பிர மாண்டமான பலகைக்கல் ஒன்றில் வடிவமைக்கப்பட் டுள்ளது .4 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட அக்கல்லில் சரிபாதியாக இரண்டு வீரர்களின் உருவங் களும் வடிவமைக்கப்பட்டுள் ளன.
முதல் உடலின் உருவமா னது வலது கையில் பெரிய வில்லையும், இடது கையில் அம்பையும் பிடித்துள்ள கோலத்தில் உள்ளது. அலங்க ரிக்கப்பட்ட கொண்டை, மார்பில் அணிகலன்கள், இடையில் குறுவாளுடன் கூடிய அழகிய ஆடை வடிவ மைப்பு உள்ளது. 2-வது நடுகல்லும்வலதுகையில்வில், இடது கையில் அம்பு, அலங்கரிக்கப்பட்ட கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவ மைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நடுகல் வீரர் கள் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் தாங்கி இருப்பர். இந்த நடுகற்கள் சற்று வித்தியாசமாக வலது கையில் வில்லும், இடது கையில் அம்பினையும் வைத் துள்ளன. ஒரே போர்க்களத் தில் தம் ஊரைக்காக்க நடந்த போரில் உயிர் விட்ட வீர மறவர்களை தெய்வங்களாக ஏலகிரிமலை மக்கள் வழிபடு வது சிறப்புக்குரியது ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரை மணி நேரம் மின்சாரம் தடை
- மின்வாரியத்துறையினர் நடவடிக்கை
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த விண்ண மங்கலம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள் ளது. இங்கிருந்து தான் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினி யோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் திடீ ரென ஒருடிரான்ஸ்பார்மரில் தீ பற்றியது.
அடுத்த வினா டியே தீ மளமளவென டிரான்ஸ்பார்மர் முழுவதும் பரவியது.
இதன் எதிரொலியாக ஆம் பூர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது. தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையி னர் சில நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின் மின் வினியோகம் சீர் செய்ய மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
- உடல் மீட்பு
- போலீசார் விசாரணை
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கரும்பூர் ஊராட்சி சாமுண்டிம்மன் தோப்பு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கிணற்றில் ருக்கம்மாள் வயது (66) என்பவர் பிணமாக மிதந்தார்.
உமராபாத் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம பெண் கேமராவில் பதிவு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பி மோட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயம்மாள் (வயது 80).
நேற்று மூதாட்டி ஜெயம்மாள் ஜங்கலாபுரம் பகுதியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு அருகாமையில் ஓலை பிண்ணிக் கொண்டிருந்தார்.
அப்போது மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத மர்ம பெண் ஒருவர் மூதாட்டி ஜெயம்மா ளிடம் அரசு முதியவர்க ளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அதற்கான விண்ணப்பம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வழங்குவதாகவும் கூறினார்.
நகை அணிந்து வந்தால் உதவி தொகை தரமாட்டார்கள். அதனால் நகையை வீட்டில் வைத்து விட்டு வந்துவிடலாம் என கூறி மூதாட்டியை பைக்கில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மூதாட்டி தான் அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை வீட்டில் கழட்டி வைத்துள்ளார். அதனை அடையாளம் தெரியாத பெண் ஜன்னல் வழியாக நகைகளை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டார்.
பின்னர் மர்ம பெண் மூதாட்டியை தனது மொபட்டில் உட்கார வைத்து கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றார்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய மணி பர்சை மூதாட்டியின் வீட்டிலேயே மறந்து விட்டு விட்டதாக கூறினார்.
அதனை நம்பி மூதாட்டி அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தார். அதனை பயன்படுத்தி அந்த பெண்
வீட்டை திறந்து 6 ½ சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.
மூதாட்டி ஜெயம்மாள் மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் கழட்டி வைத்த தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது.
மூதாட்டி உடனடியாக நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
கேமராவில் பதிவு
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பெண் மூதாட்டியை பைக்கில் அழைத்து செல்வது வீட்டின் கதவை திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத பெண்ணை தேடி வருகின்றனர்.
- எ.வ.வே. கம்பன் தொடங்கி வைத்தார்
- 50 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும்
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், கந்திலி, ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மாடப்பள்ளி, ப.முத்தம்பட்டி, நத்தம், ஆவநாயக்கன்பட்டி, ராஜாவூர் பகுதிகளில் நடைபெற்றது.
சேர்க்கை படிவம்
திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கே. ஏ. குணசேகரன், ஆர்.முருகேசன், கே. எஸ் ஏ.மோகன்ராஜ், முன்னிலை வகித்தனர், திருப்பத்தூர் தொகுதி பார்வையாளரும் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் எ.வ.வே.கம்பன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது கருணாநிதி, தற்போது தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10-ம் வகுப்பு படித்து பிளஸ் 1, சேரும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, 18 லட்சம் ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு, சுய உதவிகளுக்கு குழுக்களுக்கு கடன் உதவி தொகை, நகை கடன் தள்ளுபடி 23 தொழிற்சங்கங்களை இணைத்து கட்டுமான சங்கம் உருவாக்கியது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் டி. கே.மோகன், ஒன்றிய குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமதி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- போலீசார் பந்தல் அமைத்து கண்காணிப்பு
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதைத்தொடர்ந்து நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன சோதனை சாவடியில் போலீசார் பந்தல் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதால் குற்றங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
- சி.சி.டி.வி. காட்சியால் பரபரப்பு
- மர்ம நபர் குறித்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சடலை குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள நகை கடைக்கு பைக்கில் வந்தார்.
நகைக்கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு அடகு வைத்த நகையை மீட்க கடைக்கு உள்ளே சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒருவர் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த ஆனந்தன் (வயது 52), நேரு தெருவை சேர்ந்த முருகேசன் (58) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நாட்டறம் பள்ளி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது சுண்ணாம்பு குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சூதாடிக் கொண்டிருந்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கமலநாதன் (வயது 62), வேட்டப்பட்டு வட்ட கொல்லை பகுதியை சேர்ந்த மூர்த்தி (47) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
- பெற்றோரை போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் அடுத்த சின்ன பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பூக் கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 25) இவரும், ஏழரைப்பட்டி பகு தியைச் சேர்ந்த திவ்யா (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கீர்த்தி வாசனும், திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று சூளகிரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு கேட்டு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
இது சம்பந்தமாக இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.






