என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ரூ.3 லட்சம் சாம்பலானது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ஏரிக்கரை புதூர் என்ற பகுதியில் சுமார் 10- க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது. இங்கு வசிக்கும் விசாலாட்சி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரின் குடிசை வீடுகளும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

    உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

    சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள், வீட்டு உபயோக பொருட்கள், உடைமைகள், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

    இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா?, அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? என வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • 6½ சவரன் தங்க நகை கொள்ளை
    • சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பி மோட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயம்மாள் (வயது 80).

    மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத மர்ம பெண் ஒருவர் மூதாட்டி ஜெயம்மா ளிடம் அரசு முதியவர்க ளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    அதற்கான விண்ணப்பம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வழங்குவதாகவும் கூறினார்.

    நகை அணிந்து வந்தால் உதவி தொகை தரமாட்டார்கள். அதனால் நகையை வீட்டில் வைத்து விட்டு வந்துவிடலாம் என கூறி மூதாட்டியை பைக்கில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மூதாட்டி தான் அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை வீட்டில் கழட்டி வைத்துள்ளார். அதனை அடையாளம் தெரியாத பெண் ஜன்னல் வழியாக நகைகளை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டார்.

    பின்னர் மர்ம பெண் மூதாட்டியை தனது மொபட்டில் உட்கார வைத்து கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றார்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய மணி பர்சை மூதாட்டியின் வீட்டிலேயே மறந்து விட்டு விட்டதாக கூறினார்.

    அதனை நம்பி மூதாட்டி அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தார். அதனை பயன்படுத்தி அந்த பெண் வீட்டை திறந்து 6½ சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பெண் மூதாட்டியை பைக்கில் அழைத்து செல்வது வீட்டின் கதவை திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் திருட்டில் ஈடுபட்ட பெண் சேலம் பகுதியை சேர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடிக்க சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.

    • உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் தேடுகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் தனது மனைவி கற்பகம் (வயது 21). என்பவரை காணவில்லை என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதில் கடந்த 10-ந் தேதி கற்பகம் வைத்திருந்த செல் போனை எடுத்துச் சென்றதால் என்னிடம் சண்டைபோட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

    உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு அதில் கூறி உள்ளார்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் 2 பேரை மிதித்து கொன்றது.
    • பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் 2 பேரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லி கிராமம் தமிழக எல்லையில் திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.

    பருத்திக்கொல்லி கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மனைவி உஷா (வயது 42) என்பவரும் மற்ற நபர்களும் வேலைக்கு செல்வதற்காக மல்லானூர் ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென இவர்களை யானைகள் வழிமறித்து தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த உஷா, சிவலிங்கம் (70) ஆகிய இருவரையும் யானைகள் மிதித்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

    மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 பேரை மிதித்து கொன்ற யானைகள் மல்ல குண்டா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தகரகுப்பம் பகுதியில் இன்று காலை சுற்றி திரிந்தன.

    இதனால் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் தமிழக வனத்துறையினர் தலைமையில் அப்பகுதிக்கு சென்றனர்.

    அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

    2 யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    யானைகள் ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லைக்குள் வந்தது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை என புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி- சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்த வருகிறது. ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு குடிநீர் அடிக்கடி தடைப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சந்தைகோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு, மற்றும் அப்பாசி கவுன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் அப்பகுதி பொது மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர் இது குறித்து நகராட்சி அலுவல கத்திற்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த மாதம் 29-ந்தேதி சாலை மறியல் செய்தனர்.

    அப்போது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் இது வரை தண்ணீர் வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் மீண்டும் இன்று காலை சந்தைகோடியூர் பஸ் நிருத்தம் அருகே வாணியம்பாடி- திருப்பத்தூர் சாலையில் மறியல் செய்தனர்.

    அப்போது திருப்பத்தூர் நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது பொது மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சாலையோரம் பிணமாக கிடந்தார்
    • போலீஸ் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). விவசாயி.

    இவர் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டை விட்டு தனது மொபட்டில் வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் சண்டியூர் அடுத்த சர்வீஸ் சாலை யோரம் பழனிச்சாமி மர்மமான முறையில் இன்று அதிகாலை இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விவசாயி உடலை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் போராட்டம்
    • கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது.

    நெடுஞ் சாலையில் நடைபெறும் விபத்து களில் சிக்குபவர்கள், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர்.

    மேலும், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் அவசர சிகிச்சைபிரிவை தற்போது மூட உத்தர விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனால், அங்கு பரபரப்புஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தி மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபார சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை நாயக்கனேரி ஊராட்சி பணங்காட்டேரி மலை கிராமத்தில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான சேட் வயது (45) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

    பின்னர் அவரிடம் இருந்த 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் சேட் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • நுழைவாயில் திறக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் கட்டப்பட்டது. விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

    புதிய கட்டிடத்தையும் நுழைவாயிலையும் கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    உடன் டாக்டர்.செந்தில் , நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • கலெக்டர் நடவடிக்கை
    • குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 15 ஆண்டு காலமாக தண்ணீர் ஏற்றாத நிலையில் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து கலெக்டர் தண்ணீர் குழாய்களை இணைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

    அதன் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பாறையூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 94 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.

    மேலும் பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டியில் ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் 94 குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 860 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.

    ஆய்வின் போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
    • இடது கையில் அம்பு, அலங்கரிக்கப்பட்ட கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவமைக்கப்பட்டுள்ளது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலத்துறை பேராசிரியர் வ.மதன் குமார், காணி நிலம் மு.முனிசாமி, திருப்பத் தூர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் பல்லவன் ஆகியோர் ஏலகிரி மலையில் மேற்கொண்ட கள ஆய்வில் இரு நடுகற்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியதாவது:-

    ஏலகிரிமலை சுற்றுலாத் தலத்திற்கு மட்டுமின்றி வரலாற்று சிறப்புக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. கற்கோ டாரிகள், கற்திட்டைகள், பல்லவர் காலம் முதல் விஜய நகர காலம் வரையிலான நடு கற்கள், கல்வெட்டுகள் என தொடர்ச்சியாக எங்கள் ஆய் வுக் குழுவினரால் கண்டறி யப்பட்டு வெளிப்படுத்தப் பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங் களில் ஒன்றான மேட்டுக்கனி யூர் என்னும் ஊரில் புதிதாக கூத்தாண்டவர் (அரவான்) கோவில் ஒன்றை அவ்வூர் மக் கள் கட்டி வருகின்றனர். அந்த கோவிலுக்கு இடதுபுறத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டி அதில் நடுகல் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.

    இந்த தெய்வம் விஜய நகர காலத்தில் ஏற்பட்ட போரில் வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு எடுக் கப்பட்டுள்ள நடுகற்கள் ஆகும். இவை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடு கற்களாகும். இந்த நடுகற்க ளின் அமைப்பானது பிர மாண்டமான பலகைக்கல் ஒன்றில் வடிவமைக்கப்பட் டுள்ளது .4 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட அக்கல்லில் சரிபாதியாக இரண்டு வீரர்களின் உருவங் களும் வடிவமைக்கப்பட்டுள் ளன.

    முதல் உடலின் உருவமா னது வலது கையில் பெரிய வில்லையும், இடது கையில் அம்பையும் பிடித்துள்ள கோலத்தில் உள்ளது. அலங்க ரிக்கப்பட்ட கொண்டை, மார்பில் அணிகலன்கள், இடையில் குறுவாளுடன் கூடிய அழகிய ஆடை வடிவ மைப்பு உள்ளது. 2-வது நடுகல்லும்வலதுகையில்வில், இடது கையில் அம்பு, அலங்கரிக்கப்பட்ட கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவ மைக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக நடுகல் வீரர் கள் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் தாங்கி இருப்பர். இந்த நடுகற்கள் சற்று வித்தியாசமாக வலது கையில் வில்லும், இடது கையில் அம்பினையும் வைத் துள்ளன. ஒரே போர்க்களத் தில் தம் ஊரைக்காக்க நடந்த போரில் உயிர் விட்ட வீர மறவர்களை தெய்வங்களாக ஏலகிரிமலை மக்கள் வழிபடு வது சிறப்புக்குரியது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரை மணி நேரம் மின்சாரம் தடை
    • மின்வாரியத்துறையினர் நடவடிக்கை

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த விண்ண மங்கலம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள் ளது. இங்கிருந்து தான் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினி யோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் திடீ ரென ஒருடிரான்ஸ்பார்மரில் தீ பற்றியது.

    அடுத்த வினா டியே தீ மளமளவென டிரான்ஸ்பார்மர் முழுவதும் பரவியது.

    இதன் எதிரொலியாக ஆம் பூர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது. தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையி னர் சில நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதன் பின் மின் வினியோகம் சீர் செய்ய மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ×