என் மலர்
நீங்கள் தேடியது "The emergency department should not be closed"
- பொதுமக்கள் போராட்டம்
- கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது.
நெடுஞ் சாலையில் நடைபெறும் விபத்து களில் சிக்குபவர்கள், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர்.
மேலும், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் அவசர சிகிச்சைபிரிவை தற்போது மூட உத்தர விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனால், அங்கு பரபரப்புஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தி மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபார சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.






