கணவர் செல்போனை எடுத்து கொண்டதால் மனைவி வீட்டை விட்டு ஓட்டம்

உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை போலீசார் தேடுகின்றனர்
கணவர் செல்போனை எடுத்து கொண்டதால் மனைவி வீட்டை விட்டு ஓட்டம்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் தனது மனைவி கற்பகம் (வயது 21). என்பவரை காணவில்லை என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில் கடந்த 10-ந் தேதி கற்பகம் வைத்திருந்த செல் போனை எடுத்துச் சென்றதால் என்னிடம் சண்டைபோட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு அதில் கூறி உள்ளார்.

அதன் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com