என் மலர்
திருப்பத்தூர்
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- அன்னதானம் வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா ஆண் டியப்பனூர் கிராமத்தில் புதி தாக 27 அடி உயர முனீஸ்வர சுவாமி மற்றும் 11 அடி உயர குதிரை சிலைகள், 10 அடி உயரம் உள்ள எதிர்முனி சாமி சிலைகள் புதிதாக கட் டப்பட்டு மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி மங்களள இசை, அனுக்ஞை, விநாயகர் பூஜை. வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், முதல்கால யாகபூஜை, யாகவேள்வி, பூர் ணாஹுதி, தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜை, யாகவேள்வி, தம்பதி கள் சங்கல்பம், உலக நன்மைக்காக யாக வழிபாடு நடைபெற் றது.
பின்னர் புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேள தாளங்களுடன் புனித தண்ணீர் கலசத்தை எடுத்து சென்று முனீஸ்வரன் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஜெய் ஜெய் முனிஸ்வரா என கோஷங் களை எழுப்பினர்கள், பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள முனீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித் தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், குலதெய்வ குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- மக்கள் குற்றஞ்சாட்டு
- அதிகாரிகள் ஆய்வு
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் இறந்த மீன்களை பாலாற்றில் இருந்து அகற்றினர். பிறகு அந்த நீரை மாதிரிக்காக சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர். பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்தாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- போலீஸ் ரோந்தில் சிக்கினார்
- சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஆசனாம்பட்டு ரோடு பேபி காலனி பகுதியை சேர்ந்த நீதி மகன் தினேஷ் குமார் வயது (23) என்பவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
- சமூக வலைத்தளங்களில் ஆடியோ
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், நாட் றம்பள்ளி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் சுற்றித்திரிந்த 2 யானைகள் 2 நாட்களுக்கு முன் வழி தவறி தமிழக எல்லையான தகரகுப்பம் வனப்பகுதியில் முகாமிட்டது.
இரு யானைகளும் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்தது. பின்னர் நாட்றம் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்தது.
2 யானைகள் பார்த்த பொதுமக்கள் கத்தி கூச்சல் எழுப்புவதும், யானை அருகே சென்று துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது நிகழ்ந்து கொண்டிருந்தது.
இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:-
ஆந்திரப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகளை விரட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளும் செய்து கொண்டி ருக்கிறோம் .
பொதுமக்கள் யானை அருகே சென்று விரட்ட முயற்சிப்பது யானை மீது வாட்டர் பாட்டில் வீசுவது டார்ச் லைட் அடிப்பது போன்ற செயல்களால் மிகுந்த ஆக்ரோஷம் அடைந்துள்ளது.
பொதுமக்கள் தாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் யானைகள் நெடுஞ்சாலை கடந்து காட்டுப்பகுதிகள் செல்ல முயலும் போது தாங்கள் கத்துவதால் மீண்டும் அது ஊருக்குள் திரும்பி விடுகிறது.
அனைவரும் வீட்டிற்குள் இருந்தால் யானை நெடுஞ்சாலையை கடந்து காட்டுப் பகுதியில் சென்று விடும் யாரும் யானை அருகே செல்ல வேண்டாம் யானைகள்ஆக்ரோஷமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 8-ம் ஆண்டு பூப்பந்து போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.கடந்த 3 தினங்களாக போட்டிகள் நடைபெற்று வந்தது.
கடந்த 3 தினங்களாக நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். ஜே பி பி சி தலைவர் எஸ் மோகன்ராஜ் வரவேற்றார்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான கா தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு சதன் ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ஐ.சி.எப். அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-வது பரிசு எஸ்.ஆர்.எம். அணிக்கும் ரூ.30 ஆயிரமும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். பொறியியல் கல்லூரி மாணவிகள் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், சென்னை எல்.எஸ்.எஸ். அணி 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், சேலம் தேவாரம் பைவ் ஸ்டார் அணி 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம் பரிசுகளையும், கோப்பைகளையும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நல துணைத் தலைவர் சா. ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
- பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது.
ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. காலை 11.21 மணிக்கு பங்காருபேட்டை அருகே உள்ள சி.சி. நத்தம் என்ற இடத்தில் சென்ற போது ரெயிலின் கடைசி பெட்டியான சி1 பெட்டி தண்டவாளத்தில் இருந்து புரண்டது. இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து குப்பம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.
பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்ததா?
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற் றின் கரையோரம் நேற்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன.
தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்ததா? அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் பாலாற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் கரையோரமாக செத்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
- போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேச்சு
- 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான காவல்துறை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசுகையில்:-
காவல்துறை சார்பில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும். விபத்தை குறைப்பதில் முன்மாதிரியாக விளங்கும் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து அச்செயலை செய்து பொதுமக்களின் விலை மதிப்பற்ற உயிரை இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற அதிரடி வாகன சோதனையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டியவர்கள், ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றது.
அதிவேகமாக வாகனம் ஓட்டியது, வாகனங்களை தவறான பாதையில் இயக்கியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
- அழகான ஆண் குழந்தை பிறந்தது
- மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கை. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து, மங்கையை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றது.
ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் ராஜேஷ், ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் இருந்தனர். ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி வனப்பகுதியில் செல்லும் போது மங்கைக்கு பிரசவ வலி அதிகரித்ததால், மருத்துவ உதவியாளர் ராஜேஷ் பிரசவம் பார்த்தார். இதில் மங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயும், குழந்தையும் ஆம்பூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- பொருட்கள் தகுந்த நேரத்தில் வழங்கப்படும் என உறுதி
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் ரேசன் கடை உள்ளது.
இந்த கடையை சரியான நேரத்துக்கு திறக்கப்படுவ தில்லை எனவும் கடை திறந்து இருந்தால் கூட பொருட்களை சரிவர வழங்குவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் ரேஷன் கடை பொருட்கள் வாங்குவதை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் பொருட்களை தகுந்த நேரத்தில் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன.
- கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.
ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லி கிராமம் தமிழக எல்லையில் திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.
மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன. வீடுகளை சுற்றி சுற்றி வந்து அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் தமிழக வனத்துறையினர் தலைமையில் அப்பகுதிக்கு சென்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளை கண்காணித்தனர்.
பொதுமக்கள் கூச்சலிட்டபடி வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன.
அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.
அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.
நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள மகேஸ்வரன் என்ற நபரின் கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.
காட்டு யானைகள் கடும் கோபத்துடன் ஆவேசமாக உள்ளன. பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்லாதவாறு வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசார் விசாரணை
- வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த தேவலாபு ரம் பகுதியை சேர்ந்தவர் கனக ராஜ் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவருக்கு திரு மணமாகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று சான்றோர் குப்பம் பகுதியில் ஒருவீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த உயரழுத்த மின்ஒயரில் தவறுத லாக கைப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






