என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் நகை திருடிய பெண்னை பிடிக்க சேலத்தில் தேடுதல்வேட்டை
    X

    மூதாட்டியிடம் நகை திருடிய பெண்னை பிடிக்க சேலத்தில் தேடுதல்வேட்டை

    • 6½ சவரன் தங்க நகை கொள்ளை
    • சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பி மோட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயம்மாள் (வயது 80).

    மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத மர்ம பெண் ஒருவர் மூதாட்டி ஜெயம்மா ளிடம் அரசு முதியவர்க ளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    அதற்கான விண்ணப்பம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வழங்குவதாகவும் கூறினார்.

    நகை அணிந்து வந்தால் உதவி தொகை தரமாட்டார்கள். அதனால் நகையை வீட்டில் வைத்து விட்டு வந்துவிடலாம் என கூறி மூதாட்டியை பைக்கில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மூதாட்டி தான் அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை வீட்டில் கழட்டி வைத்துள்ளார். அதனை அடையாளம் தெரியாத பெண் ஜன்னல் வழியாக நகைகளை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டார்.

    பின்னர் மர்ம பெண் மூதாட்டியை தனது மொபட்டில் உட்கார வைத்து கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றார்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய மணி பர்சை மூதாட்டியின் வீட்டிலேயே மறந்து விட்டு விட்டதாக கூறினார்.

    அதனை நம்பி மூதாட்டி அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தார். அதனை பயன்படுத்தி அந்த பெண் வீட்டை திறந்து 6½ சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பெண் மூதாட்டியை பைக்கில் அழைத்து செல்வது வீட்டின் கதவை திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் திருட்டில் ஈடுபட்ட பெண் சேலம் பகுதியை சேர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடிக்க சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.

    Next Story
    ×