ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி சென்னை வாலிபர் பலி

காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி சென்னை வாலிபர் பலி
Published on

ஆம்பூர்:

சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் நிலேஸ் பாபு (வயது 39). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி அபூர்வா சென்னை தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று காலை ஏலகிரி மலைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் நெடுஞ்சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிஷ் படுகாயம் அடைந்தார். அபூர்வா லேசான காயமடைந்தார்.

படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com