இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்

செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதி
இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது இந்த நூலகத்தின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் மேற்கூறையில் உடைந்து விழுவதாகவும் பொதுமக்களும், வாசகர்களும் தொடர்ந்து புகார்களை கூறி வந்தனர்.

வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. நூலகத்திற்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு இருந்த வாசகர்களிடம் குறை களையும் கேட்டு அறிந்தார்.

இங்கு புதியதாக கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com