search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக், மஞ்சப்பையால் ராஜா வேடமணிந்து விழிப்புணர்வு
    X

    பிளாஸ்டிக், மஞ்சப்பையால் ராஜா வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

    பிளாஸ்டிக், மஞ்சப்பையால் ராஜா வேடமணிந்து விழிப்புணர்வு

    • பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்கின்றன
    • நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை உடையாக அணிந்த பிளாஸ்டிக் வேடம் அணிந்து பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என விழிப்புணர்வு மூலம் செய்து காட்டினர்.

    மேலும் பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.

    நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.

    பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும்பாதிக்கின்றன.

    இனிவரும் காலங்களில் மஞ்சள் பையை கையில் எடுப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×