என் மலர்
திருப்பத்தூர்
- காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்.ரவிசந்தி ரன் தலைமை தாங்கினார். எஸ்.சங்கரி முன்னிலை வகித் தார் .எல்.பழனி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை பெ.பிரபா தொடங்கிவைத்து பேசினார் ஆர்ப்பாட்டத்தில், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்ப டைக்க வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். முடிவில் ஜி.புவனேஸ்வரி நன்றி கூறினார்.
- செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ராணிப்பேட்டை சாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மகள் அதிசியா (வயது 17). ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் விடுமுறையில் இருந்த தனது மகளை அழைத்துக்கொண்டு சந்தோஷ் குமார் தனது மாமியார் வீடான ஜோலார்பேட்டை அருகே பால்னங்குப்பம் பகுதியில் உள்ள ராணி வீட்டிற்கு கடந்த 26-ந் தேதி வந்துள்ளார்.
அப்போது அதிசியா நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை தந்தை சந்தோஷ்குமார் கண்டிதனர். இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார். அதன் பின்னர் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். பாட்டி ராணி கடைக்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த அதிசியா தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தந்தை சந்தோஷ் குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
ஆம்பூர் :
ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி கிருஷ்ணவேணி (வயது 68). இவர் சம்பவத்தன்று மாரப்பட்டு பகுதியில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ஆம்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 24) மற்றும் ராகுல் (23) ஆகியோர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து கிருஷ்ணவேணி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி சதீஷ் மற்றும் ராகுலை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செயினை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளை ரசித்தனர்
- படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்
ஜோலார்பேட்டை,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்போதும் ஒரே சம சீதோசன நிலை காணப்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.
மேலும் மா, பலா, வாழை என முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர். ஏலகிரி மலையில் உள்ள படகுகளில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
மேலும் கடந்த 2 நாட்களாக வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இடம் கிடைக்கவில்லை.
ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பியது.
பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்திரை நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை
- சாலையை கடந்தபோது விபரீதம்
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி.
இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 78) இவர் நேற்று வாணியம்பாடி கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. சம்பவம் இடத்திலேயே தலை நசுங்கி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை யிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சின்னமூக்கனூர் அருகே உள்ள சாமியார் கொட்டை பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த பாக்கியராஜ் (வயது 35) என்பவரை பிடித்து 30 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
அச்சமங்கலம் கீழ் தெரு பகுதியில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ரவி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ளசாரத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ள சாராயம், மது விற்ற இதே போன்று பழைய ஜோலார்பேட்டை, கடை தெரு பகுதியில் திலீப் குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 58 லிட்டர் கள்ள சாராயத்தையும் 30 மது பாட்டில்கள் என மொத்தம் 100 மது பாட்டில்களையும் 68 லிட்டர் கள்ளசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கன்டெய்னர் பறிமுதல்
- நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் நாட்டறம்பள்ளி போலீசார் பணி ஆண்ட பட்டுபள்ளி வாலூர் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கன்டெய்னர் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.
ஆனால் போலீசாரை கண்டதும் கன்டெய்னரில் இருந்த டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை சோதனை செய்தனர்.
அதில் மூட்டை மூட்டையாக 10 டன் ரேசன் அரிசி இருந்தது.
அதனை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் ரேசன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
- யார் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஆம்பூர், விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் முழுவதும் உருக்குலைந்து கிடப்பதால் இறந்தவர் யார் என்று அடையாளம் காண்பது போலீசாருக்கு சிக்கலாக உள்ளது. இறந்தவர் மாநிறம் உடையவர் வெள்ளை கலர் சர்ட், வெள்ளை கலர் வேட்டி அணிந்துள்ளார்.
இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் லத்தேரி காவலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 30 வயது தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர் நீல நிறத்தில் சிவப்பு கலர் கலந்த டி ஷர்ட், கருப்பு கலர் லோயர் அணிந்து உள்ளார் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வரு கின்றனர்.
ஜோலார்பேட்டை ஆம்பூர் லத்தேரி ஆகிய இடங்களில் ஒரே நாளில் 2 பேர் இறந்து ள்ளனர் இறந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பால்னாங்குப்பம் பெருமாள் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (வயது 52) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் புகழேந்தியை கையும் களமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா?
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 4வது பிளாட்பாரத்தில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- எருது விடும் விழா நடந்தது
- 180 காளைகள் பங்கேற்றன
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர். கிருபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ. சிந்துஜா ஜெகன், முன்னாள் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் 180 காளைகள் போட்டியில் பங்கேற்றன.
போட்டியில் பிறகு குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி வேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், 2-வது பரிசாக 77 ஆயிரத்து 777, 3-வது பரிசாக 66 ஆயிரத்து 666 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
- நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நடந்தது
- பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
புதுப்பேட்டை அக்ராகரத்தை சேர்ந்தவர் சுவேதா (20). இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.
இதனால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 25-ந் தேதி சுவேதாவும், தட்சிணாமூர்த்தியும் வீட்டை விட்டு வெளியேறினர்.
நேற்று காலை அக்ராகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு காதல் கணவருடன் இளம்பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






