என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • திடீரென அமைத்த வேகத்தடையால் விபரீதம்
    • பொதுமக்கள் சாலை மறியல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் லக்கி நாயக்கன்பட்டி அருகே பாலம் வேலை நடைபெறுகிறது. இதனால் அந்த இடத்தில் நேற்று இரவு திடீெரன வேகத்தடை அமைத்தனர். இதையறியாத வாகன ஓட்டிகள் வேகத்தடையில் விபத்தில் சிக்கினர்.

    காக்கங்கரை அருகே மேற்கு பதனவாடி என்ற ஊரைச் சேர்ந்த சூர்யா (வயது 22). லாரி டிரைவர். இரவு 9 மணிக்கு மேற்கு பதனவாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    லக்கி நாயக்கன்பட்டியில் வேகத்தடைய கவனிக்காமல் சென்ற சூர்யா தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனை அறிந்த அவரது தாய் சிவகாமி விபத்து நடந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரும் தடுப்பில் மோதி காயம் அடைந்தார்.

    போலீசார் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயமடைந்த சிவகாமி சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    இதனையடுத்து திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்
    • அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வாகன சோதனை மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    போலீஸ் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வருகிற 20-ந் தேதி கடைசி நாள்
    • கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    தமிழகத்தின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ்மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குகலை இளமணி விருது; 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச் சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது' வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள் ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவி யம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரை, தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக் கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்கள் சுயவிவர குறிப்பு, புகைப்படம், வயது சான்று, முகவரிச்சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் இயக்குநர், கலை பண்பாட் உதவி டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.

    இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்தார்.

    • நாளை தொடங்குகிறது
    • காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்படமாட்டாது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவ, மாண விகள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. முதல்நாளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 2-ந் தேதி பி.காம், சி.ஏ., 3-ந் தேதி மொழிப்பாட பிரிவுகளான பி.ஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    மேலும் மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்களும் http://www.gasctpt.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப் படும். தேர்வு பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அவர்களுக்கு உரிய தேதியில் சேர்க்கைக்கு உரிய அசல் மற்றும் நகல் சான் றுகளுடன் கல்லூரிக்கு நேரடியாக வரவேண்டும். தேர்வு பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலந்தாய்விற்கு வராத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தரவரிசைப்படி நிரப்பப்படுவர்.

    காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்படமாட்டாது. இத்தகவலை கல்லூரி முதல்வர் பெ.சீனுவாசகுமரன் தெரிவித்துள்ளார்.

    • தீயணைப்பு படை வீரர்கள் பிணத்தை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே கொடும்பம்பள்ளி சாமு கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தருமன் இவரது மனைவி இந்திரா (வயது 55). தருமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    மேலும் இவரது மகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இந்திரா தனது மருமகளுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியனகுப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இந்திரா கடந்த 28-ந்தேதி தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர் வீட்டில் அவரை தேடி வந்தனர். குடியானகுப்பம் பகுதியில் உள்ள அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை இந்திரா பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் கயிறு கட்டல் கட்டி இறக்கி பிணத்தை மீட்டனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம்
    • குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் முன் விவசாயி மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர், வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க 'உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுக்களை வாங்கினார். அப்போது அங்கு திருப்பத்தூரை அடுத்த அகரம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவர் தனது நிலத்தை அண்ணனும், அவரது மகன்களும் சேர்ந்து அபகரித்து கொண்டதாகவும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தான் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த கலெக்டர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் அவரது கையில் இருந்து மண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரது உடலில் தண்ணீர் ஊற்றி பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.மண்எண்ணெய் ஊற்றிய நபர் மீது உடனடியாக வழக் குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபோலீசாருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நல வாரிய உதவித் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, உதவி ஆணையர் (கலால்) பானு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகு மாரி உள்ளிட்ட பலர் கலந்து, கொண்டனர்.

    • தனியார் நிறுவனத்தில் லோன்பெற ஏ.டி.எம். எண் மற்றும் ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்
    • சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி கிராமம் கிருஷ்ணா புரம் வட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம், கடந்த 17-ந் தேதி ஒருவர் பேசினார்.

    அப்போது தனியார் நிறுவனத்தில் லோன்பெற பிரகாஷ் தகுதி பெற்றுள்ளதாகவும், ஏ.டி.எம். எண் மற்றும் ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்.

    அதை நம்பிய பிரகாஷ் தன்னுடைய ஏ.டி.எம். கார்டு எண், மற்றும் ஓ.டி.பி. ஆகியவற்றை எதிரில் பேசிய நபரிடம் கூறியிருக்கிறார்.

    சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.51,245 எடுக்கப்பட்டுள்ளது. உடனே சுதாரித்து கொண்ட பிரகாஷ் இதுகுறித்து சைபர் கிரைம் 1930-ஐ தொடர்பு கொண்டு பண பறிபோனது சம்பந்தமாக புகார் அளித்தார்.

    அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூ.51,245-ஐ மீட்டனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பாதிக்கப் பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை வழங்கினார்.

    • காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
    • கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்.ரவிசந்தி ரன் தலைமை தாங்கினார். எஸ்.சங்கரி முன்னிலை வகித் தார் .எல்.பழனி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தை பெ.பிரபா தொடங்கிவைத்து பேசினார் ஆர்ப்பாட்டத்தில், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்ப டைக்க வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். முடிவில் ஜி.புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    • செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ராணிப்பேட்டை சாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மகள் அதிசியா (வயது 17). ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது விடுமுறையில் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் விடுமுறையில் இருந்த தனது மகளை அழைத்துக்கொண்டு சந்தோஷ் குமார் தனது மாமியார் வீடான ஜோலார்பேட்டை அருகே பால்னங்குப்பம் பகுதியில் உள்ள ராணி வீட்டிற்கு கடந்த 26-ந் தேதி வந்துள்ளார்.

    அப்போது அதிசியா நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை தந்தை சந்தோஷ்குமார் கண்டிதனர். இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார். அதன் பின்னர் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். பாட்டி ராணி கடைக்கு சென்றார்.

    வீட்டில் தனியாக இருந்த அதிசியா தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தந்தை சந்தோஷ் குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர் :

    ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி கிருஷ்ணவேணி (வயது 68). இவர் சம்பவத்தன்று மாரப்பட்டு பகுதியில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது ஆம்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 24) மற்றும் ராகுல் (23) ஆகியோர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து கிருஷ்ணவேணி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி சதீஷ் மற்றும் ராகுலை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செயினை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளை ரசித்தனர்
    • படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்

    ஜோலார்பேட்டை,

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்போதும் ஒரே சம சீதோசன நிலை காணப்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

    மேலும் மா, பலா, வாழை என முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

    மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர். ஏலகிரி மலையில் உள்ள படகுகளில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் கடந்த 2 நாட்களாக வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இடம் கிடைக்கவில்லை.

    ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பியது.

    பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்திரை நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை
    • சாலையை கடந்தபோது விபரீதம்

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி.

    இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 78) இவர் நேற்று வாணியம்பாடி கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. சம்பவம் இடத்திலேயே தலை நசுங்கி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×