search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sand smuggler arrested"

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், போலீசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநா தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது, மேல்குப்பம் பகுதியில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்தநபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 52) என்பதும், பாலாறு பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீ சார் கைது செய்து, மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

    • மினிவேன் பறிமுதல்
    • ஜெயிலில் அடைப்பு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வேட்டாங்குளம் ஊராட்சி சில்வர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் விஜய் (வயது 25).

    இவர் அதே பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மினிவேனில் ஒரு யூனிட்மணல் கடத்தி சென்றார். அப்போது நெமிலி போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து மினிவேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் தனது உதவியாளருடன் வேணாநல்லூர் பெரிய ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
    • அருள்மொழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 45) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் தனது உதவியாளருடன் வேணாநல்லூர் பெரிய ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது அருள்மொழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 45) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை கைப்பற்றி தா.பழூர் போலீசில் ஒப்படைத்தார். மணல் கடத்தி வந்த கொளஞ்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ×