என் மலர்
திருப்பத்தூர்
- முன் விரோதம் காரணமாக விபரீதம்
- வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் அன்னை மேரி தெரு பகுதியை சேர்ந்த வால்டர் மகன் விஜய் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்தி (33) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கார்த்தி, விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பொதுமக்கள் விஜயை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.
- ஏரி அருகே பெண்ணின் கிழிந்த புடவையும் மற்றும் சிறிய எலும்பு துண்டு கிடந்தது
- துர்நாற்றம் வீசாததால் பிணம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என உறுதி செய்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரி அருகே பெண் பிணம் இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் திருவண்ணாமலையில் இருந்து கொண்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் எங்கும் பிணம் இருப்பதற்கான அறிகுறி இல்லை துர் நாற்றம் வீசவில்லை இதனால் பிணம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என போலீசார் உறுதி செய்தனர்.
அதன் பிறகு ஏரி அருகே பெண்ணின் கிழிந்த புடவையும் மற்றும் சிறிய எலும்பு துண்டு கிடந்தது அது மனிதனின் எலும்பு துண்டு இல்லை என தெரிய வந்தது.
இதனால் போலீசார் சுமார் 1 மணி நேரமாக அப்பகுதி முழுவதும் தேடி பார்த்து எங்கும் பிணம் இல்லாததால் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா
- பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் முத்துக்குமாரசாமி கோவிலில் 17-ம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விநா யகர் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி வீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாணமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. கே.எம்.சுப்பிரமணியம், டாக்டர் லீலா சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எம்.நவீந்திரன், அரசு ஆசிரியர் எஸ். மகேஸ்வரி ரவீந்திரன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் என்.வி.எஸ். சங்க தலைவர் எஸ்.ராஜா, துணைத் தலைவர் டி.கே.எஸ். ஐயப்பன் உள்பட ஏராளமான பொதுமக் கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
- 4 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை :
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மனைவி வளர்மதி (வயது 40), கோவிந்தராஜ் (34), குணசேகரன் (28), அசோக் மனைவி பிரியா (23) ஆகியோர் பச்சூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்.
நேற்று செங்கல்கள் ஏற்றிக் கொண்டு வெலக்கல்நத்தம் பகுதிக்கு டிராக்டரில் சென்றார். வண்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டி ெசன்றார்.
செங்கலை இறக்கிவிட்டு வீடு திரும்பிய போது சுண்ணாம்புகுட்டை கிராமம் அருகே சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டரில் பயணித்த 4 பேரும் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சை க்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.
- சம்பவம் இடத்திலேயே இறந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மகன் சதீஷ் சர்மா (வயது 30).
இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
இதில் தனது திருமணம் ஏற்பாடுகளை செய்வதற்காக சதீஷ்சர்மா கடந்த 15 நாட்கள் முன்பு, விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ் சர்மா தனது பைக்கில் பச்சூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குப்பம் பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிவந்த மினி லாரி பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மகன் வெங்கடேஷ் (வயது 31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகை மூட்டம் காணப்பட்டது
- 1 மணி நேரம் போராடி அணைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் திடிரென தீ பற்றி மளமளவென எரிகிறது தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
நாட்டறம்பள்ளி தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து குவிக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்து, புகை மூட்டம் காணப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீர் பீசி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- காட்டில் பத்திரமாக விட்டனர்
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் இக்பால். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி பகுதியில் உள்ளது.
இந்த மாந்தோப்பில் நேற்று தொழிலாளர்கள் கிழே விழந்து இருந்த மாங்காய்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு மாந்தோப்பில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு வனத்துறையினர் அருகில் உள்ள காட்டில் பத்திரமாக மலை பாம்பை விட்டனர்.
- மகனை கைது செய்து அழைத்து சென்றதால் ஆத்திரம்
- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
திருப்பத்தூர்:
போலீசாரை கண்டித்து, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் பொன்னி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஜ். இவரது மனைவி யாஸ்மின் (வயது 44). இவர்களின் மகன் அப்சல் (25). இவர் மீது வெளி மாநில மதுபானங்கள் விற் றது உள்ளிட்ட பல வழக்கு கள் உள்ளதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் நேற்று காலையில் அப்சல் வீடடிற்கு போலீசார் சென்று சோதனை செய்த போது ரூ.2 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அப் சலை போலீசார் கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர். இதனால் அவரது தாயார் யாஸ்மின் போலீசாரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டார். ஆனாலும் போலீசார் அப்சலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த யாஸ்மின் மண் எண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, போலீசார் எனது வீட்டிற்கு வரக்கூடாது எனவும், மகனை கைது செய்யக்கூடாது எனவும் கூறி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்புபணியிலிருந்த போலீசார் அவரை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் கலெக் டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று யாஸ் மினை விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.
போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பேர்லீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ் பெக்டர்கள் நந்தகுமார், சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொத்தூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் பாபு (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை உமராபாத் பகுதியில் உள்ள கிணற்றில் குமரேசன் பிணம் மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் குமரேசன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் எச்சரிக்கை
- மீறி திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான வாலிபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் வருவாய் துறையினர், ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் மற்றும் போலீசார் வாலிபர் வீட்டிற்கு சென்று பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கினர்.
சிறுமிக்கு திருமணம் செய்தால் பெற்றோர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மீதும் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மீறி திருமணம் செய்தால் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
பள்ளி மாணவியை மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணை செய்ய சென்றனர்.
வீட்டில் யாரும் இல்லை இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றனர்.
- 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
- போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது.
கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 15 மனுதாரர் களை நேரில் அழைத்தும், 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அவர்க ளின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி னார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ் பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






